ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் , மேட்டுப்பாளையம்.
கோவை மாவட்டத்துல மேட்டுப்பாளையத்தில் இருக்கிற ஒரு சக்தி வாய்ந்த அம்மன் கோவில் இது.ஊட்டி செல்லும் வழியில் மே.பா. பேருந்து நிலையம் ஒட்டி இடது ஓரமாக கோவிலுக்கு சாலை செல்கிறது.ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் இருக்கிறது.
பவானி நதி ஓரமாக இக்கோவில் அமைந்து உள்ளது.
நம்ம கம்பெனி வளர்ச்சிக்காக வருடா வருடம் இக்கோவிலுக்கு கிடா வெட்டுவோம்.இந்த முறையும் ஞாயிறு அன்னிக்கு கிடா, சமையல் பொருள்களுடன் கோவிலில் ஆஜராகி விட்டோம்.கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கிடா வெட்டி கொண்டு புக் பண்ணி இருந்த ஹாலுக்கு சென்று சமையலை ஆரம்பித்தோம்.
மட்டன் வறுவல், சிக்கன் வறுவல், சாப்பாடு, ரசம் என அசத்தி விட்டாங்க.
இடையிடையே தலைக்கறி, குடல், வறுவல் என அங்க அங்க செல்லும்.
எல்லாம் முடிந்த பின் வந்து சாப்பிட்டு விட்டு அனைவரும் கிளம்பி விடுவோம்.
ஒரு சின்ன பிக்னிக் மாதிரி ரொம்ப அருமையாக இருக்கும்.அப்படியே அம்மனை வேண்டியது போல இருக்கும்.இங்க பவானி ஆறு இருக்கிறதால் குளிக்க நல்ல இதமாக இருக்கும்.அப்புறம் புதிதாக போறவங்க, ஆத்துக்கு குளிக்க போறவங்க தக்க துணையுடன் போவது நல்லது.ஆற்றில் பாறைகள், சுழல்கள் இருக்கின்றன.கவனத்துடன் குளிக்க வேண்டியது அவசியம்.
நிறைய தோப்புகள் இருக்கின்றன.இங்கும் இடவசதியுடன் சமைத்து சாப்பிட இடம் கிடைக்கும்.நம்மள மாதிரி குடிமகன்களுக்கு ஏற்ற இடம்.
எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூட்டம் அலை மோதும். அனைத்து ஹால்களும் புக் ஆகி இருக்கும். கிட்ட தட்ட ஆடு, கோழி பலி இடுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.
கண்டிப்பாக அனைவரும் செல்லவேண்டிய கோவில் இது.இயற்கையை விரும்புகிறவர்கள் செல்லலாம்.ஒரு நாள் நல்ல கறி சோறு ஆக்கி குடும்பத்தோட, நண்பர்களோட தின்னுட்டு வரணுமா கண்டிப்பா போகலாம்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
உயிர் பலி இடுவது தவறு என்று தெரிந்தும், நாவின் ருசிக்காக, தெய்வத்தினை சாட்சியாய் வைத்து, இத்தவறை செய்துவிட்டு, அதனை அங்கீகரிக்க, அனைவருக்கும் அழைப்பு .....இதே தவறை செய்ய!
ReplyDeleteஅன்னை பத்ரகாளி மன்னிப்பாராக!
வாங்க அட்சயா...என்னங்க பண்றது..காலம் காலமா நம்மாளுங்க பண்றதை தானே நாமும் பண்றோம்..இந்த கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கிற அனைத்து அம்மன் கோவில் களிலும் கிடா வெட்டு என்பது புனிதமாக தான் பார்க்க படுகிறது..இது ஒரு சடங்கு அவளோ தாங்க...உங்களுக்கு பிடிச்சா வெட்டி சாப்பிடுங்க...இல்லையெனில் கும்பிட்டு மட்டும் வாங்க...இந்து மத உணர்வுகளில் மட்டும் விளையாடாதீங்க..
ReplyDeleteஇப்படி கேள்வி கேட்ட உங்களை அம்மன் மன்னிப்பாராக..
சாமிய கும்பிட்டோமா....
ReplyDeleteஆட்டை வெட்டுனோமா.....
சமைச்சு சாப்பிட்டோமான்னு வந்துட்டே இருக்கணும்......
கேள்வி கேட்டா சாமி கண்ணை குத்திடும்........
கிராமத்துல சொல்வாங்க... ஹி.....ஹி....
ஆறும் கோவிலும் அதனைச் சுற்றியுள்ள இடமும் அருமையாக ரம்மியமாக உள்ளது. உங்கள் புகைப்படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு.
ReplyDeleteவாங்க பிரகாஷ்...வந்ததுக்கு நன்றி..
ReplyDeleteவாங்க விச்சு...நன்றி,
ReplyDeleteகம்பெனி வளர்ச்சிக்கு ஒரு படையலா?! இல்லை உங்க நாவின் ருசிக்கு இது ஒரு சாக்கு. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
ReplyDeleteநானும் சுற்றுலா போனதை பதிவா போடானும்ன்னு பார்க்குறேன் உங்க அளவுக்கு நேர்த்தி வருமான்னு எனக்கு டவுட்டா இருக்கு. உங்க பதிவை பார்க்கும்போது பொறாமையா இருக்கு சகோ
ReplyDeleteரொம்ப நாளா அந்த அம்மனை தரிசிக்க நினைத்தது கொண்டே இருக்கேன்...ஆனால் நேரம் சரியாய் அமையவில்லை......சீக்கரம் போகணும்........மற்றபடி கடா வெட்டு எல்லாம் அவரவர் விருப்பம்,நம்பிக்கை எல்லாம் அதில் யாரும் தலைஇட முடியாது....
ReplyDeleteஎன்னங்க ராஜி...எனக்கு நேர்த்தியா எழுத தெரியுதா ?ஹி ஹி படத்த போட்டு ஒப்பேத்திகிட்டு இருக்கேன்
ReplyDeleteவணக்கம் சித்தார்த் ..கண்டிப்பா போக வேண்டிய கோவில்..சக்தி வாய்ந்த அம்மன்..
ReplyDeleteபடங்கள் அருமை போன வாரம் தான் சென்றோம் முன் அறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்து விட பட்டது பயம் இருந்தாலும் நீரின் போக்கை அருகில் நின்று ரசித்தோம் .........முக்கிய குறிப்புகள் இடம்பெற்றிக்கு // நம்மள மாதிரி குடிமகன்களுக்கு ஏற்ற இடம்.// நல்ல பதிவு
ReplyDeleteகிடா வெட்டு க்கு தானே போனீங்க...நல்லா சாப்டீங்களா...?
ReplyDeleteஅங்க ஓடுற பவானி ஆத்துல குளிக்க கூடாது.நம்மை தண்ணிக்குள்ள வச்சி அழுத்தி ஒளிச்சு வச்சிடுவாங்க..பணத்துக்காக இப்படி செய்கிறார்கள் என்கிற ஒரு பேரு உண்டு..