மீன் குளத்தி பகவதி அம்மன் - பல்லசேனா - கேரளா
அருள் மிகு மாசாணி அம்மனை தரிசித்து விட்டு அடுத்து மீன் குளத்தி பகவதி அம்மன் போலாம்னு முடிவு பண்ணி வண்டியை திருப்பினோம்.
ஆனைமலை ரோட்டில் இருந்து வேட்டைக்காரன்புதூர் செல்லும் வழியில் சென்று ஓடையங்குளம் வழியாய் கேரளா செல்லும் வழியான செம்மனாம்பதி எனும் ஊர் நோக்கி சென்றோம்.செல்லும் வழியில் எங்கு நோக்கிலும் மாமரங்கள்.காய் கனிகளுடன் நிறைய மாமர தோப்புகள்.எல்லாம் கலப்பின வகை மாமரங்கள்.செடி போன்று தான் மரமே இருக்கிறது ஆனால் அதிக காய்களுடன் இருக்கிறது.அப்புறம் செல்லும் ரோடு இருபுறமும் பசுமையுடன் இருக்கிறது.
இங்கு தான் கேரள செக் போஸ்ட் நம்மை வரவேற்கிறது இந்த ஊரில் இருந்து தான் மலையாள வாடை ஆரம்பிக்கிறது.இங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றவுடன் கம்பரதசல்லா எனும் ஊர் வந்தவுடன் அடுத்து கொல்லங்கோடு என்ற ஊர் வருகிறது.அதில் இருந்து ஒரு 15 கிலோ மீட்டருக்குள் பல்லசேனா என்ற ஊர் வருகிறது.இங்கு தான் மீன் குளத்தி பகவதி அம்மன் கோவில் இருக்கிறது.குளத்தில் எழுந்தருளி யதால் இந்த அம்மனுக்கு மீன் குளத்தி பகவதி அம்மன் என்று பெயர்.குளமும் கோவிலும் அருகருகே இருக்கின்றன.
கேரளாவில் எந்த கோவிலுக்கு போனாலும் பேண்ட், சர்ட் போட்டு உள்ளே போக கூடாது.வேட்டி கட்டிக்கொண்டு மேல் சட்டை இல்லாமல் உள்ளே நுழைய வேண்டும்.இதற்காவே நிறைய கடைகள் இருக்கின்றன.தெரியாமல் வரும் பக்தர்கள் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.நல்ல வியாபாரம் தான்.
நம்ம வண்டியில் எப்போதும் ஒரு வேட்டி இருக்கும் அதனால் தப்பிச்சேன்.நம்ம டிரைவர் தான் மாட்டிகிட்டாரு.காவி வேட்டிக்கும் துண்டுக்கும் மொய் வச்சாரு.கோவிலின் உள்ளே மிகவும் பய பக்தியுடன் நுழைந்தோம்.வீடு போன்ற அமைப்பில் தான் கோவில் இருக்கிறது.மிகுந்த வேலை பாட்டுடன் இருக்கிறது.கேரளாவின் பாரம்பரிய முறையில் இக்கோயில் இருக்கிறது.
வரிசையாய் உள்ளே நுழைந்தோம்.ஆண்கள் அனைவரும் வெறும் மேலுடன் தான் இருப்பதால் வரிசையில் செல்லும்போது ஒரு வித வியர்வை நாற்றம் ஏற்படுவது சகிக்க முடியாத படி இருக்கிறது.
அம்மனை வரிசையில் செல்லும் போதே தரிசிக்க முடிகிறது.முன் செல்லும் பக்தர்கள் மெதுவாக நகர்வதால் நாம் அம்மனை நீண்ட நேரம் தரிசிக்க முடிகிறது.மிகவும் சக்தி வாய்ந்த அம்மனை தரிசித்து விட்டு வெளியில் வந்தோம்.பிரசாதமாக குங்குமமும், அர்ச்சித்த மலரும் சந்தனமும் வழங்குகின்றனர்.
கடுமதுரம் எனும் பாயசம் வழங்கப்படுகிறது.இது வேணுமின்னா பாத்திரம் கொண்டு போகணும்.இல்லைனா கடைகளில் பிளாஸ்டிக் டப்பா இருக்கு அதை கொடுத்து வாங்கலாம்
ஆனைமலையில் இருந்து அதிக பட்சமாக 45 கிலோ மீட்டர் தான் இருக்கும்.ஒரு மணி நேர பயணம் கூட இருக்காது.மேலும் கோவிலில் இருந்து பாலக்காடு வழியாக கோவை வரும் போது 75 கிலோ மீட்டர் ஆகியது.
அனைவரும் கண்டிப்பாய் போக வேண்டிய கோவில் இது.பில்லி சூன்யம் பாதிப்புகள் அகல, குறைகள் தீர்ந்திட மீன் குளத்தி பகவதி அம்மனை வணங்கினால் போதும்.இன்னொரு மீனாட்சியம்மன் என்றும் சொல்லுவர்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
வணக்கம் நண்பரே....உங்க புண்ணியத்துல இதெல்லாம் பாக்குறேன்
ReplyDeleteஉங்களுக்கு வேலையே இது தானா ..சும்மா தான் கேட்கிறேன்
ReplyDeleteநேரில் கோவில் போய் வந்த திருப்தி உங்க வர்ணனையிலும் படங்களிலும் தோன்றியது. படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபயணங்கள் முடிவதில்லை....!!!
ReplyDeleteராஜி said...
ReplyDeleteநேரில் கோவில் போய் வந்த திருப்தி உங்க வர்ணனையிலும் படங்களிலும் தோன்றியது. படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி//
திருவண்ணாமலையை அண்ணனுக்கு எப்போ காட்டப்போறீங்க?
நேரில் பார்த்ததுபோல் இருந்தது உங்கள் பதிவு.
ReplyDelete