கிராமத்து அனுபவம்
பள்ளி விடுமுறை விட்டாச்சு..ஊரிலிருந்து அழைப்பு அதனால நாங்கலாம் சொந்த ஊருக்குப் போனோம்.நம்ம ஊர் ஒரு கிராமமுங்க.அங்க போக எங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.இயற்கை, நல்ல காற்று, சுற்றுப்புற அமைதி, நெரிசல் இல்லா பயணம், என ரொம்ப பிடிக்கும்.கிராமத்து வீட்டுல இருக்கிற சுகமே தனிங்க.அதுவும் அம்மா கைல வேற சாப்பாடு...நேரத்துக்கு நேரம் மறக்காம ...
அதில்லாமல் நம்ம ஊருல இரண்டு ஆறு வேற ஓடிட்டு இருக்கு.சிறுவயசில போய் குளித்தது, மீன் பிடித்தது என ஒரே ஞாபகம்.
இப்போ ஆத்துல தண்ணீர் வரத்து கொஞ்சம் கம்மியா இருக்கிறதால் மீன் பிடிக்கலாம்னு நம்ம நண்பர்கள் கூட ஆத்துக்கு போனோம்.கூடவே வலை, கத்தி, பை எல்லாம். நம்ம மாப்ள செடிகளுக்குள், ஆத்து குட்டைக்குள் கை வச்சி மீன் பிடிக்கிறதுல கில்லாடி.
உடைகளை கழட்டி எல்லாம் மேட்டுல வச்சிட்டு தண்ணிக்குள்ள இறங்கினோம்.வலையை சுத்தி கட்டி விட்டு செடிகளுக்குள் மீன் தேட, மாப்ள அவரு பாட்டுக்கு மீன் கைல பிடிச்சி வெளிய போடுறாரு, நாங்க செடிகளை அலச உள்ளே இருந்த மீன்கள் பதறி அடிச்சு வலையில் வந்து மாட்ட கிட்ட தட்ட 5 கிலோ பக்கம் மீன் பிடிச்சோம்.
கெண்டை, உளுவை, ஜிலேபி, ஆரான், கொக்கு மீன் என நிறைய வகைகள்.நாங்க பிடிச்ச மீன்கள் நிறைய முட்டைகளோட செனையா இருந்துச்சு.மீன் கழுவும் போது இந்த மீன் செனையை மட்டும் தனியா எடுத்து வச்சி கிட்டோம்.மீன் முட்டை பொரியல் ரொம்ப டேஸ்டா இருக்கும் தெரியுமா.
(பெரிய வெங்காயம் நல்லா வதக்கி கொஞ்சம் மஞ்சள் தூள், வர மிளகாய் போட்டு வதக்கி, பின்னர் மீன் முட்டைகளை போட்டு வதக்கி, தேங்காய் துருவல் போட்டு வதக்கி, கொஞ்சம் உப்பு போட்டு இறக்கினால் பொரியல் ரெடி..) ஹி ஹி ஹி ..சமையலும் செய்வோம்ல...
அப்புறம் எல்லா மீன்களையும் அலசி எடுத்து கிட்டு அப்படியே ஒரு குளியலை போட்டு கிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

இங்க பாருங்க.. கொக்கு மீன் எப்படி இருக்கு பாருங்க...பாய ரெடியா...
ஆத்துல இருக்குற போது அடிக்கிற வெய்யிலில் நம்ம உடம்பு அப்படியே கருப்பா ஆயிடும்.அதில்லாமல் உடம்புல மீன் கவுச்சி அடிக்கும் பாருங்க.யாரையும் பக்கத்துல வர விடாதுங்க..அவ்ளோ நாத்தம் அடிக்கும்.இதுக்காக ரெண்டு எக்ஸ்ட்ரா ஷாம்பு போட்டு குளிக்கணும்.வீட்டுக்கு வந்தவுடன் மீன்லாம் நல்லா கழுவி மசாலா பொடி போட்டு நல்லா குலுக்கி அதை கொஞ்ச நேரம் வெயிலில் உலாத்தி எண்ணையில் பொரிச்சு சாப்பிட்டா ....அடடா...என்னா டேஸ்ட்...
இதுக்காகவே இந்த மீன் கவுச்சி, நாத்தம் இதெல்லாம் பொறுத்துக்கொள்ளலாம்.ஆத்துக்குள்ள ஓடுற தண்ணில, பிடிச்ச மீனுகளோட, அப்புறம் வலைகளை இழுத்து கிட்டு கால்கள் மண்ணுக்குள் புதைய புதைய ஆதிவாசி மாதிரி நடந்து வேணுங்கிற அளவுக்கு மீன் பிடிச்சி, அப்புறம் அதை நாமளே கிளிஞ்சல் மூலம் செதில், செவுள், குடல் எல்லாம் எடுத்து, கழுவி சுத்தம் பண்ணி மசாலா தடவி எண்ணையில் பொரிச்சு சாப்பிடுகிற இந்த அனுபவம் காசு கொடுத்து மீன் வாங்கி சாப்பிடுவதில் சத்தியமா இல்லைங்க..
கிசுகிசு: மீன் சாப்பிட முடியலையேன்னு வருத்த படாதீங்க மக்களே (தேங்க்ஸ் கேப்டன்)...சாரி பதிவர்களே..கண்டிப்பா நம்ம ஊர் பக்கம் வந்தீங்கன்னா நல்லா கவனிக்கிறோம் ..
எங்க ஊர் பத்தின பதிவுங்க...பிரபலமான திருமுக்கூடலூர் கோவில்
அப்புறம் மூன்று ஆறுகளின் சங்கமம் -- திருமுக்கூடலூர்
இன்னும் - கிராமத்து நினைவுகள்
நேசங்களுடன்
ஜீவானந்தம்

புகைப் படங்கள் அருமை. பொரிப்பதில் ஜிலேபி போல சுவை எந்த மீனாக இருந்தாலும் வராது. சிறிது முள் அதிகமாக இருந்தாலும் அதையும் சேர்த்து மெல்லலாம்.
ReplyDeleteathellam sari mamu meen enna velaikki vaanguneega?
ReplyDeleteவாங்க அமர பாரதி..நன்றி.கெண்டை மீன் முள் இருந்தாலும் சுவைத்து சாப்பிட அருமையா இருக்கும்
ReplyDeleteவாங்க நாகராஜ்..ஒரு சில பேரு உங்களை மாதிரிதான் இருக்காங்க..எடக்கு மடக்கா பேச..
ReplyDeleteமீன் காசு கொடுத்து வாங்கினால் நான் எதுக்குங்க இந்த போஸ்ட் போடுறேன்...வீடியோ தான் இனி இணைக்கனும்போல...அப்போ தான் நம்பு வீங்களா ..?
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றி ஐயா - ரத்தினவேல் நடராஜன்
ReplyDeleteஆகா, படங்களெல்லாம் அருமை. கரூரில் நானும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கேன்.. அந்த இனிய நினைவுகளை தூண்டிய பதிவு..நன்றி.
ReplyDeleteஅன்புடன்
பவள சங்கரி
கொஞ்சம் சோம்பு, வரமிளகாய், வெங்காயம்(அடிபிடிக்கும்), பூண்டு, மஞ்சள் தூள் வைத்து வேண்டுமெனில் கொஞ்சம் இஞ்சி சேர்த்து மைய அரைத்து மீனை அங்கங்கு கீறி விட்டு மசாலாவில் பிரட்டி பத்து நிமிடம் சென்ற பிறகு எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்தீர்கள் என்றால் ஆஹா....
ReplyDeleteநம்ம ஊர்காரர்(கரூர்)....
ReplyDeleteபிளாக் எழுதரார்..அதுவும் ரொம்ப நல்லாவே..
மகிழ்ச்சியா இருக்கு..
வாழ்த்துக்களுடன்,
மணிவண்ணன்,கரூர்.