Saturday, April 6, 2013

கோவை மெஸ் - நாசி லெமக் ( NASI LEMAK ), மலேசிய உணவு வகை

நாசி லெமக் ( Nasi lemak).
மலேசியாவின் ஃபேமஸான உணவு இந்த நாசி லெமக்.இதைப்பத்தி அதிகம் தெரியல.ஒரு முறை மலேசியா செல்லும் போது ஏர் ஆசியா விமானத்தில் மெனு கார்டுல இந்த உணவு வகையை பார்த்திட்டு இருந்தோம்...மதிய வேளை வேற...அப்பப்ப விமானத்தின் பணிப்பெண்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு இருந்ததில் நமக்கு பசியை உண்டு பண்ணியிருந்தனர்....பசி வயித்தைக் கிள்ளுது...பாவை அவர்களின் நடை உடை நம்ம மனசைக் கொல்லுது...அட....டி ஆர் மாதிரி வருதே....சரின்னு அம்மணிகளை வரச்சொல்லி சாப்பிட ஆர்டர் செய்தோம். (அம்மணிகள் பக்கத்துல வரவே பசி பத்தும் பறந்து போச்சு...ஹிஹிஹி...)எதுக்கு இதை ஆர்டர் பண்ணினோம்னா இந்த மெனுவில் தான் சாதம் இருந்தது.கொஞ்ச நேரம் அழகான ராட்சசிகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம் எப்போ வரும்... வருவார்கள் என்று....
ஒரு தள்ளுவண்டியில் ஒய்யாரமாக நடை நடந்து வந்து கொண்டிருந்தனர்.நம் அருகே வந்ததும் குயில் கூவ ஆரம்பித்தது...பார்த்துக்கொண்டே பக்குவமாய் உணவை வாங்கினோம்...
நம்மளை போலவே அவர்களின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து இருக்கை நபர்களின் பசியை போக்க பாவை நகர்ந்து செல்லவே.... பசியானது அதிகரிக்க ஆரம்பித்தது...உடனே பிரிக்க ஆரம்பித்தோம்....வாசனை மூக்கைத்துளைக்கிறது...
 
ஏர் ஆசியா கஃபே என்கிற பெயரில் சின்ன பாக்சில் தான் தருகிறார்கள்.மிதமான சூடு இருந்தது.உணவுகள் குறைவாக இருந்தது..தேங்காய் பாலில் வேகவைக்கப்பட்ட சாதம், அவிச்ச அரை முட்டை, சில பொறித்த மீன்கள் (நம்மூர் நெத்திலி போல ), சிக்கன் துண்டுகள் கிரேவியுடன், சம்பல் எனப்படும் சில்லி இறால் சாஸ், கொஞ்சம் பொறித்த நிலக்கடலை...
முதல் முதலாய் அயல்நாட்டு வகை உணவினை சுவைப்பதில் ஒரு ஆர்வம்.அதுவும் விமானத்தில்..மிக சுவையாக இருந்தது.அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு சுவையைத் தந்தன.சாதமும் சிக்கன் கிரேவியும் செம காம்பினேசன்.சாஸ் இன்னும் நன்றாக இருந்தது. என்ன காம்பினேசனோ தெரியவில்லை...நிலக்கடலை அவ்வளவு சுவையாக இருந்தது.
உணவுகள் சுத்தமாய் பத்தவில்லை..ஆயினும் ருசியால் பசி அடங்கியது. ஆரஞ்சு ஜூஸ் தாகத்தை தணிக்க  உணவினை காலி பண்ணினோம்....
உணவுகள் குறைவாக இருந்தாலும் விலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.(பின்னே...10000 அடி உயரத்திற்கும் மேல சாப்பிடறோம்....ரேட்டு என்ன குறைவாகவா இருக்கும்...) ஆனால் செம டேஸ்ட்..
அதுக்கப்புறம் மலேசியா இறங்கிட்டு கெந்திங் ஹைலேண்ட்ஸில் மறுபடியும் நாசி லெமக் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன்.முதல் முறை விமானத்தில் இருந்த சுவை மீண்டும் காணாமல் போய் இருந்தது.ஆனால் நன்றாக இருந்தது..ஆப்பாயில், வெள்ளரி, என புதிதாய் இருந்தது..



இந்த உணவு வகை பற்றி நிறைய அறியணும்னா விக்கி பீடியா போங்க..எவ்ளோ டீடெயில்ஸ்...

சமீபத்தில் தான் ஃபேஸ்புக்கில் நமது நண்பர்கள் பகிர்ந்து இருந்தனர் இந்த உணவு பற்றி.அதனால் தான் இந்த பதிவு.



நேசங்களுடன்
ஜீவானந்தம்.

இன்னும் கொஞ்சம்...

Tuesday, April 2, 2013

கோவையின் பெருமை - மருதமலை முருகன் கோவில், கோவை

நம்ம மருதமலை முருகன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் செய்து இருப்பதால் ஒரு விசிட் போலாம்ன்னு கும்பாபிஷேகம் முடிஞ்ச மூணாவது நாள் போனேன்...
நல்லா சுத்தமா வைத்து இருக்காங்க.பார்க்கவே பளிச்சுனு இருக்கு.எல்லா கோவில் கோபுரமும், படிகளும் வர்ணம் பூசப்பட்டு நல்லா வச்சிருக்காங்க...பார்த்தவுடன் தெய்வீக களை ஏற்படுகிறது.விழா முடிந்தும் கூட்டம் குறையல இன்னமும்...நிரம்பி வழிகின்றது மலை அடிவாரமும், கோவில் அடிவாரமும்....
இந்த மார்ச் மாசம் தான் புதிதாக கட்டின ஏழு நிலை ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் பண்ணியிருக்கிறார்கள்...முருகனின் கருவறைக்கு எதிரில் இருக்கும் படியாக ராஜகோபுரமும், தனித்தனி மண்டபங்களும் இருக்கின்றன.கீழிருந்து முருகன் சன்னதிக்கு வர கிரானைட் படிகளும் அமைத்து உள்ளனர்.கோபுர நுழைவாயிலில் பிரம்மாண்ட வெண்கல கதவு ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.சன்னதிக்கு வரும் வழியில் ஒரு மண்டபம் வேறு அமைத்து இருக்கின்றனர்.அதில் ஏகப்பட்ட தூண்கள் மற்றும் வண்ண வண்ண சாமி சிலைகள் இருக்கின்றன..
 
 
 
 
 
 
 
 
 

கோவில் பிரகாரம் முழுவதும் கூட்டம் நிறைந்து இருக்கிறது.அரசமரத்து பிள்ளையார் ரொம்ப வசதிகளோடு மாறி இருக்கிறார்.முருகன் சன்னதிக்கு எதிரில் இருக்கும் கொடிமரத்துக்கு அருகில் பொலிவின்றி இருந்த இரண்டு யானை சிலைகள் கூட தற்போது வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.பக்தி மார்க்கமாக அனைவரும் அலைந்து கொண்டிருந்தனர்.முடிந்து போன யாக சாலையில் ஒரு கூட்டமே கும்பிட்டுக்கொண்டிருந்தது...ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு யாக குண்டம்...கிட்டததட்ட முப்பதுக்கும் மேற்பட்ட அக்னி குண்டங்கள்....
மேலே பஞ்சாமிர்த கடை வேறு வைத்து இருக்கிறார்கள்.முருகனின் அருள் பரப்பும் புத்தக, மற்றும் டிவிடி கடைகள், மேலும் தற்காலிக பந்தலில் பிரசாத கடை இருக்கிறது.அதில் புளியோதரையும் பொங்கலும் பத்து ரூபாய்க்கு ஒரு சிறிய தொன்னையில் தருகின்றனர்....
யானை பசிக்கு சோளப் பொரி போல...
ஆயினும் பசி அடங்கியது...பாவைகளை பார்த்ததும்...
நாங்க போன அன்னிக்கு நல்ல வெயில் வேற....காலையிலயே பின்னி எடுக்குது...ஆனா குளிர்ச்சியா இருந்தது..காரணம் அம்மணிகள்..எம்புட்டு பேரு...
எப்படியோ முருகனை தரிசனம் பண்ணிட்டு கீழிறங்கினோம்.எப்பவும் போல தள்ளுவண்டி கடைகள்..அதில் பொரி, எலந்தைபழம், மாங்காய் என சில்லறை வணிகம்...
 

விழாக்கோலம் பூண்டிருக்கிறது இன்னும் இந்த மருதமலை முருகன் கோவில்.கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ராஜ கோபுர கட்டுமான பணி ஒருவகையில் முடிந்து தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.(கீழிருக்கும் புகைப்படங்கள் முன்பு எடுத்தவை )

முருகனுக்கு அரோகரா.....கந்தனுக்கு அரோகரா...
போனவருசம் போனது - மருதமலை 

கிசுகிசு : கோவிலுக்கு போற மலைப்பாதையில் அதிகமா காலேஜ் அம்மணிகளையும் கள்ள அம்மணிகளையும் காண முடியல.ஒருவேளை இந்த விசேஷம் முடிஞ்சதும் அடுத்ததா அவங்க விசேஷத்திற்கு வருவாங்களோ என்னமோ...... ஹி ஹி ஹி ....

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


இன்னும் கொஞ்சம்...

Monday, April 1, 2013

சமையல் - அசைவம் - மீன் குழம்பு

வாரா வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான். (அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்) இந்த வாரம் மீன் குழம்பு வைத்தேன்..செம டேஸ்ட்.சாப்பாட்டிற்கு இது செம மேட்ச்.அதுவும் மீன் குழம்பு வச்சி அடுத்த நாள் சாப்பிட்டா இன்னும் செம டேஸ்ட்....

நித்தம் நித்தம் நெல்லுஞ்சோறு....
நெய் மணக்கும் கத்தரிக்காய்..
நேத்து வச்ச மீன் குழம்பு.....
என்னை இழுக்குதய்யா......

ஊளி மீன், மத்தி மீன் இரண்டும் வாங்கினேன்...எந்த மீன் வாங்கினாலும் செய்முறை ஒண்ணுதான்..
செய்முறை சொல்லிடறேன்.

வேண்டிய பொருட்கள்:
மீன் - 1 கிலோ
சி - வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது
பூண்டு - 20 பல்
புளி - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - நறுக்கியது கொஞ்சம்
பட்டை, கிராம்பு, - கொஞ்சம்
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி - தேவையான அளவு

செய்முறை :
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.( மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும் )
ஒரு பாத்திரத்தில் புளி கெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும்.அதில் தக்காளியையும் அரைத்து சேர்த்துக்கொள்ளவேண்டும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு , கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு வதக்கவேண்டும்.பின் அரிந்த பூண்டு, நறுக்கிய இஞ்சி போட்டு வதக்க வேண்டும்.பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின் கரைத்து வைத்திருக்கிற புளி தக்காளி கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.அதில் மஞ்சள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து தேவையான  உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
பின் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்தவுடன் அலசி வைத்துள்ள மீனை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து நிறுத்திவிடவும்.
பின் கொத்தமல்லி தழை போட்டு மூடிவிடவும்.சுவையான மீன் குழம்பு தயார்...
(அதுக்கு முன்னாடி மறக்காம அடுப்பை பத்தவச்சிடுங்க...இல்லேனா ஆரூர்மூனா கேள்வி கேட்பாரு...)

தேங்காய் சேர்த்தால் குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.தேங்காய் இல்லாமலும் செய்யலாம்.மீன் மசாலாப்பொடி இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்..இன்னும் சுவை அதிகமாகும்..
மீன் குழம்பு இருக்கிற பாத்திரத்தினை மூட ஏதாவது துணி இருந்தால் பயன்படுத்தலாம்.அப்போதுதான் ஆவியாகும் நீரானது குழம்பில் சேராமல் இருக்கும்.

கிசுகிசு : ஞாயிறு அன்னிக்கு எப்பவும் விசேசம் தான்...காலையில் எட்டு எட்டரை மணிக்குள் குடல் வறுவல் ரெடி ஆகிவிடும்..அப்போ இருந்து மதியம் மூணு மணி வரை பொழுது நல்லாப்போகும்....

சமையல் குடல் குழம்பு 
சமையல் - இரத்தப்பொரியல்
 

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


இன்னும் கொஞ்சம்...

Tuesday, March 26, 2013

கோவையின் பெருமை - வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம், பூண்டி, கோவை - 2

வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம், பூண்டி, கோவை. - 2
கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் மலை ஏற ஆரம்பித்தோம்...கரடு முரடாய் இருந்த பாதை இப்போது வழுக்குப் பாதையாய் ஆனது.பாறைகளில் படி போன்று வெட்டி வைத்திருக்கின்றனர்.இருபுறும் மூங்கில் காடுகள் இருக்கின்றன.அந்த இருட்டிலும் கண்கள் பழகி இருந்தன நடப்பதற்கு...கொண்டு வந்த சோடாவினை மூடி அளவில் குடித்து தாகத்தை தணித்துக்கொண்டோம்....
                இரண்டாவது மலையில் ஒரு இடத்தில் சுனை இருக்கிறது.அதில் குளிர்ச்சியாய் தண்ணீர் மெல்லியதாக ஒழுகிறது.உள்ளங்கையில் பிடித்து குடிக்க குடிக்க மிகுந்த சுவையுடன் இருக்கிறது.கொஞ்சம் வாட்டர் பாட்டிலிலும் நிரப்பிக்கொண்டு பயணித்தோம்...ஒரு அரை மணி நேரம் கழித்து அடுத்த மலையின் ஆரம்பத்தை அடைந்தோம்...அங்கே இன்னொரு சுனை இருக்கிறது..அருகிலேயே சங்கினால் செய்யப்பட்ட சிவன் சிலை இருக்கிறது.பாறைகளுக்கு இடையில் வரும் நீரினை ஒரு மூங்கில் தப்பையில் வரும்படி உள்ளே சொருகி இருக்கின்றனர்.இங்கேயும் நாவினை கொஞ்சம் நனைத்துவிட்டு ரெஸ்ட் எடுத்தோம்...
 
மீண்டும் பொறுமையாய் மலை ஏற ஆரம்பித்தோம்...மூன்றாவது மலை தாண்டவும் குளிர் எடுக்க ஆரம்பித்தது.மீண்டும் உடைகளை போட்டுக்கொண்டு அங்கே இருந்த பாறைகளில் ஓய்வெடுத்தோம்... அருகிலேயே இருந்த கடையில் சூடாய் சுக்கு காபி குடிக்கவும் கொஞ்சம் குளிருக்கு இதமாக இருந்தது....அரைமணி நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்...இப்போது கொஞ்சம் சமதளம் போன்று இருந்தது....போகிற வழியில் இருந்த பீமன் களி உருண்டை பிரமாண்டமாய் பயமுறுத்தியது....
போகிற வழியில் ஆங்காங்கே சிறு சிறு காவல் தெய்வங்கள்.....அனைவருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்....மெல்ல மெல்ல நடந்து விபூதி மலை எனப்படும் மலை அடைந்தோம்...இந்திபி மை வியின் இருமங்ிலும்ிபிக்காகுடந்து வத்ு இருக்கின்றர்.
ந்த மலை வழியே செல்லும்போது கால்கள் மிகவும் களைப்படைந்து போயின.ஆயினும் வெகு தூரத்தில் நமக்கு முன்னே வெளிச்ச புள்ளி இட்டு செல்லும் பக்தர்களின் பயணம் நம்மை இன்னும் முன்னேற தூண்டியது....
ந்தாண்டியும் ஆண்டி ுனை என்னும் காட்டாறு இருக்கிறு.மிக ுறாகீர்வத்ு இரந்தாலும் குளிர் மிகிகாக இருக்கிறு. கைகால்கை கஞ்சம் நத்ுவிட்டு மேலேறஆரம்பித்ோம்....
கடைசி மலையை ஏற ஆரம்பிக்கும்போது அதிக பாறைகள்..தத்தியும் தவழ்ந்தும் ஏறினோம்.அவ்வப்போது இளைப்பாறிக்கொண்டோம் முடிவில் அதிகாலை 3.55 மணிக்கு மலையை அடைந்து விட்டோம்..
அங்கே இருந்து பார்க்கையில் நம்மை நோக்கி வெளிச்சப்புள்ளிகளுடன் பக்தர்கள் வந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது நாம் மலையை அடைந்து விட்டோம் என்கிற ெருமஎங்களின் வலியை போக்கியிருந்த்து.
உடனடியாக தரிசனம் பெற உள்நுழைந்தோம்.முதலில் ஒரு பாறை சந்தினுள் எழுந்தருளியுள்ள அம்மனை தரிசனம் செய்து விட்டு பின்னர் சிவபெருமானின் உருவத்தினை தேடி சென்றோம்...இரு பாறைகளுக்கு இடையே எழுந்தருளியுள்ள சிவபெருமானின் வடிவமான லிங்கத்தினை மனமுருக வேண்டிவிட்டு பின்னர் ஓய்வெடுக்க இடம் தேடினோம்..
 
    அப்போது அடித்த பனியில் பற்கள் அனத்ும் தப்பாட்டம் போட்டன.இருக்கிற அனைத்து உடைகளையும் எடுத்தி உடுத்திக்கொண்டோம் ஒதுங்க இடம் தேடியதில் அனைத்து பாறை சந்து பொந்துகளும் பக்தர்களின் பெட்ரூமாய் மாறி இருந்தது.எங்களுக்கென்று ஒரு இடத்தினை தேர்வு செய்து விடிய காத்திருந்தோம்...அதிகாலை சூரியனின் உதயத்தை காண காத்திருந்தோம்...அதிகாலை பூஜை 6 மணிக்கு ஆரம்பிக்க மீண்டும் மனமுருக வேண்டிக்கொண்டோம்....பக்தர்களின் வேண்டுதலாய் அந்த பாறை எங்கும் வேல்களால் நிரம்பி இருந்தது.
மெல்ல மெல்ல இருள் விலக....... மேகங்களால் போர்த்தி இருந்த இயற்கையை  காண ஆரம்பித்தோம்...நந்தி போன்ற வடிவில் ஒரு பாறையைப் பார்க்க அதிசயத்துப்போனோம்..பனி மேகம் வெள்ளையாய் நம்மை தொட்டு விட்டு செல்ல...சூரியன் தெரிய ஆரம்பித்தான்..இளம் சிவப்பாய் ஒரு புள்ளியாய் மேல் எழும்பிய சூரியன் மேக கூட்ட்த்திற்குள் அழகாய் தெரிய ஆரம்பித்தான்.. இந்த காட்சியைக் காண கண்டிப்பாய் ஆயிரம் கண் வேண்டும்... 
 அந்த மலையைச்சுற்றிலும் பாறைகள்...பசுமை மரங்கள் என இரண்டும் பின்னி பிணைந்திருப்பதைக்கண்டு அதிசயத்து போனோம்.6400 அடி உயரத்தில் இருக்கிற ஏழாவது மலையில் மேகம் தவழ்ந்து நம்மை உராய்ந்து தொட்டுச்செல்லும் அனுபவம் இனி வாய்ப்பது என்பது அபூர்வம் தான்...மிக ரம்மியமான காட்சி....மலை முழுவதும் இயற்கை அன்னை பசுமையை போர்த்தி இருப்பது கண் கொள்ளாக்காட்சியாகும்...
இரவு நேரத்தில் எதுவும் தெரியவில்லை.ஆனால் பகலில் திரும்பிவரும்போது தான் ஏகப்பட்ட ஆச்சரியங்கள்....திரும்பி வருகையில் தெரிந்த மலைகளை பார்த்தபோது வியப்பும் அதிசயமும் ஒரு சேர தோன்றுகிறது. மேலும் பகலில் நாங்கள் வந்த பாதைகளை பார்க்கும் போது இன்னும் அதிசயத்திற்கு ஆளானோம்..எவ்ளோ கரடு முரடான பாதை, செங்குத்தாக இருக்கிற பாறைகளின் ஊடே பாதைகள், முட்கள் போன்ற பாறைகளின் படிகள்...இவைகளை எல்லாம் பார்க்கும்போது இன்னும் மலைப்பு அதிகமானது... எப்படி இவ்ளோ தூரம் பயணித்தோம் என்பதை நினைக்கையில் இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இத்தனை கஷ்டங்களுக்கும் மத்தியில் இறைவனை தரிசனம் கண்டது மிகுந்த அதிசயமே...
ண்டிப்பாய் காணேண்டிய ிசம்..இயற்கின் வியே இறைவை காணல்லய்ப்ு....

முதல் பயணம் - வெள்ளியங்கிரி 

ேசங்குடன்
ீவானந்தம்..
   

இன்னும் கொஞ்சம்...