Showing posts with label மருதமலை. Show all posts
Showing posts with label மருதமலை. Show all posts

Wednesday, July 2, 2014

கோவையின் பிரபல இடங்கள் - சுற்றுலா

          கோவை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம்.தொழில்வளர்ச்சி அடைந்த நகரம்.(இப்போ அப்படியான்னு தெரியல..ஏகப்பட்ட பஞ்சாலை மில்கள் மூடப்பட்டு அபார்ட்மெண்ட்களாகிவிட்டன.மோட்டார் தொழில்களும் நசிவடைந்து போய்விட்டிருக்கின்றன.கோவை முழுக்க கான்கிரீட் காடுகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன பசுமை மறந்து.)
கோவை என்றாலே சிறுவாணி தண்ணீரும் சில்லென்ற தென்றலும் தான் ஞாபகத்திற்கு வரும்.மேற்குத்தொடர்ச்சி மலைகளினால் வருகின்ற மிதமான குளிர்ச்சி எப்பவும் கோவையில் குடிகொண்டிருக்கும். கோவில்களும், மலைகளும், அணைகளும் மற்றும் பூங்காக்களும் நிறைந்த ஊராகும்.ஒரு நாள் சுற்றுலா போக ஏற்ற இடங்கள் நிறைய இருக்கின்றன.அப்படிப்பட்ட கோவையில் இருக்கிற பிரபல இடங்களைப்பார்ப்போம்.
கோவில்கள்:
மருதமலை முருகன் கோவில்:
       கோவையின் மிக அருகில் இருக்கின்ற ஒரு பிரபல மலைக்கோவில் மருதமலை.முருகனின் ஏழாவது படைவீடாகும். மேற்குத்தொடர்ச்சி மலையின் மேல் அமைந்துள்ள இந்தக்கோவிலில் முருகன் குடிகொண்டுள்ளார்.உயரம் குறைவான மலைதான்.ஆனாலும் வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை...மலை மேலிருந்து கோவையின் அழகை ரசிக்கலாம். அடிவாரம் வரை மாநகரப்பேருந்துகள் செல்லும். கோவிலுக்கு செல்ல தனிபேருந்துகள் இயக்கப்படுகின்றன. முருகனின் விசேச தினங்களில் கூட்டம் அள்ளும்.

நாம எழுதினது - மருதமலை
அனுவாவி சுப்ரமணியர் கோவில்:
       இந்தக்கோவிலும் மேற்குத்தொடர்ச்சி மலையில் தான் அமைந்துள்ளது.அனுமனின் தாகம் தீர்க்க வாவி( ஊற்று) ஒன்றினை முருகப்பெருமான் ஏற்படுத்திய இடம் அனுவாவி என்றழைக்கப்படுகிறது
ஆனைகட்டி செல்லும் வழியில் கணுவாய் தாண்டி இருக்கிறது இந்தக்கோவில்.மலைப்பாதைகள் இல்லை.செங்குத்தாக செல்லும் மலைப்படிகளில் தான் செல்லவேண்டும்.அடிவாரம் வரை பேருந்துகள் செல்லும். இந்த கோவிலில் இருந்து சுற்றிலும் இயற்கை சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலைகளைக்காணலாம்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்:
       மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும் ஒரு சிவஸ்தலம்.படைப்புத்தொழில் வேண்டி புற்று வடிவில் இருந்த சிவனை நோக்கி கடும் தவம் புரிந்த காமதேனுவுக்கு, தன் கன்றின் குளம்படி பட்டு புற்று உடைந்ததால், காட்சியளித்த சிவன் தோன்றிய இடம்.தன் தலையில் குளம்படி தழும்பைக்கொண்டிருக்கும் சிவலிங்கத்தினை காணலாம். ஆனி மாதத்தில் கிருத்திகை நாள் அன்று நடைபெறும் நாற்று நடவு உற்சவம்பிரசித்தி பெற்றது.
தண்டு மாரியம்மன் கோவில்:
           கோவை மாநகரில் அவினாசி நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி இந்த மாரியம்மன் திருக்கோவில் இருக்கிறது.மிகவும் பழம்பெருமை பெற்ற கோவிலாக 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது.கோவையின் கோட்டையை முற்றுகையிட்ட ஆங்கிலேய படைகளை எதிர்த்து திப்புசுல்தான் போரிட,  போரில் உதவி செய்த மைசூர் படையில் லிங்க உருவம் ஒன்று போரிட்டது.போர் முடிந்தபின் மைசூர் செல்லாமல் இந்த லிங்க உருவம் மாரியம்மனாக எழுந்தருளியுள்ளது.படைக்கலன்களுக்கு தண்டு என்று பொருள் அதனாலேயே தண்டுமாரியம்மன் எனும் பெயர் நிலைபெயராகிவிட்டது.இந்தக்கோவிலும் கோவையின் பிரபல கோவில்களில் ஒன்றாகும்.
கோனியம்மன் கோவில்:
        கோவையின் காவல் தெய்வம் என்றழைக்கப்படுகிற இந்த கோனியம்மன் கோவையை ஆண்ட மன்னன் கோவனின் குலதெய்வம் ஆகும்.இக்கோவில்  நிறுவப்பட்டு கிட்டதட்ட 900 ஆண்டுக்களுக்கும் மேலாக ஆகிவிட்டது.கோவை நகரின் மிகச்சிறந்த விழா எதுவென்றால் அது கோனியம்மன் கோவில் திருவிழாதான். கோனியம்மன் வடக்கு நோக்கி, எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி காட்சியளிக்கிறாள். சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு.இக்கோவில் நகரத்தின் முக்கிய இடத்தில் அமைந்திருக்கிறது.

தொடரும்.......

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Tuesday, April 2, 2013

கோவையின் பெருமை - மருதமலை முருகன் கோவில், கோவை

நம்ம மருதமலை முருகன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் செய்து இருப்பதால் ஒரு விசிட் போலாம்ன்னு கும்பாபிஷேகம் முடிஞ்ச மூணாவது நாள் போனேன்...
நல்லா சுத்தமா வைத்து இருக்காங்க.பார்க்கவே பளிச்சுனு இருக்கு.எல்லா கோவில் கோபுரமும், படிகளும் வர்ணம் பூசப்பட்டு நல்லா வச்சிருக்காங்க...பார்த்தவுடன் தெய்வீக களை ஏற்படுகிறது.விழா முடிந்தும் கூட்டம் குறையல இன்னமும்...நிரம்பி வழிகின்றது மலை அடிவாரமும், கோவில் அடிவாரமும்....
இந்த மார்ச் மாசம் தான் புதிதாக கட்டின ஏழு நிலை ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் பண்ணியிருக்கிறார்கள்...முருகனின் கருவறைக்கு எதிரில் இருக்கும் படியாக ராஜகோபுரமும், தனித்தனி மண்டபங்களும் இருக்கின்றன.கீழிருந்து முருகன் சன்னதிக்கு வர கிரானைட் படிகளும் அமைத்து உள்ளனர்.கோபுர நுழைவாயிலில் பிரம்மாண்ட வெண்கல கதவு ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.சன்னதிக்கு வரும் வழியில் ஒரு மண்டபம் வேறு அமைத்து இருக்கின்றனர்.அதில் ஏகப்பட்ட தூண்கள் மற்றும் வண்ண வண்ண சாமி சிலைகள் இருக்கின்றன..
 
 
 
 
 
 
 
 
 

கோவில் பிரகாரம் முழுவதும் கூட்டம் நிறைந்து இருக்கிறது.அரசமரத்து பிள்ளையார் ரொம்ப வசதிகளோடு மாறி இருக்கிறார்.முருகன் சன்னதிக்கு எதிரில் இருக்கும் கொடிமரத்துக்கு அருகில் பொலிவின்றி இருந்த இரண்டு யானை சிலைகள் கூட தற்போது வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.பக்தி மார்க்கமாக அனைவரும் அலைந்து கொண்டிருந்தனர்.முடிந்து போன யாக சாலையில் ஒரு கூட்டமே கும்பிட்டுக்கொண்டிருந்தது...ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு யாக குண்டம்...கிட்டததட்ட முப்பதுக்கும் மேற்பட்ட அக்னி குண்டங்கள்....
மேலே பஞ்சாமிர்த கடை வேறு வைத்து இருக்கிறார்கள்.முருகனின் அருள் பரப்பும் புத்தக, மற்றும் டிவிடி கடைகள், மேலும் தற்காலிக பந்தலில் பிரசாத கடை இருக்கிறது.அதில் புளியோதரையும் பொங்கலும் பத்து ரூபாய்க்கு ஒரு சிறிய தொன்னையில் தருகின்றனர்....
யானை பசிக்கு சோளப் பொரி போல...
ஆயினும் பசி அடங்கியது...பாவைகளை பார்த்ததும்...
நாங்க போன அன்னிக்கு நல்ல வெயில் வேற....காலையிலயே பின்னி எடுக்குது...ஆனா குளிர்ச்சியா இருந்தது..காரணம் அம்மணிகள்..எம்புட்டு பேரு...
எப்படியோ முருகனை தரிசனம் பண்ணிட்டு கீழிறங்கினோம்.எப்பவும் போல தள்ளுவண்டி கடைகள்..அதில் பொரி, எலந்தைபழம், மாங்காய் என சில்லறை வணிகம்...
 

விழாக்கோலம் பூண்டிருக்கிறது இன்னும் இந்த மருதமலை முருகன் கோவில்.கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ராஜ கோபுர கட்டுமான பணி ஒருவகையில் முடிந்து தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.(கீழிருக்கும் புகைப்படங்கள் முன்பு எடுத்தவை )

முருகனுக்கு அரோகரா.....கந்தனுக்கு அரோகரா...
போனவருசம் போனது - மருதமலை 

கிசுகிசு : கோவிலுக்கு போற மலைப்பாதையில் அதிகமா காலேஜ் அம்மணிகளையும் கள்ள அம்மணிகளையும் காண முடியல.ஒருவேளை இந்த விசேஷம் முடிஞ்சதும் அடுத்ததா அவங்க விசேஷத்திற்கு வருவாங்களோ என்னமோ...... ஹி ஹி ஹி ....

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


இன்னும் கொஞ்சம்...

Friday, April 13, 2012

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் - கோவை

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் 
கோவையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் இருக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான இன்னிக்கு தமிழ் கடவுளான முருகனை கும்பிடுவோம்னு நினைச்சு இந்த கோவிலுக்கு போனேன்.தடாகம் என்ற ஊரிலிருந்து கோவில் வரும் வரை இரு மருங்கிலும் ஏகப்பட்ட சேம்பர் எனப்படும் செங்கல் சூளைகள்.இந்த சூளைகளினால் இங்குள்ள பகுதி வறண்டு போய் இருக்கிறது.

கோவிலின் அடிவாரம் வந்தபின் வண்டி டோக்கன் போட்டுவிட்டு படிகள் ஏற ஆரம்பித்தேன்.கோவில் படிகளில் ஏறும்போது ஆரம்பத்தில் சாதரணமாக இருக்கிற படிகள் கோவிலுக்கு அருகில்  செல்லும்போது செங்குத்தாக இருக்கிறது. ரொம்ப மூச்சு வாங்கி போனேன். 

ஒரு பக்தர் தன் செல்போனில் “முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே என்ற பாடலை கேட்டுக்கொண்டே ஏறிக்கொண்டு இருந்தார். கீழே இருந்து கோவில் வரை 450 படிகள் இருக்காம்...இன்னொரு பக்தர் சொல்லிக்கொண்டே இறங்கினார். கோவில் ரொம்ப டெவலப் ஆகி இருக்கிறது. படிகள், சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள், யானை வரவை தடுக்க மின்சார வேலி என ரொம்ப முன்னேற்றம். அப்புறம் மேலிருந்து கீழே பார்த்தால் ஏகப்பட்ட புகை போக்கிகள்.எல்லாம் செங்கல் சூளைகளின் கைங்கர்யம் .புதிதாய் முளைத்த செல்போன் டவர் போல.... 


 

 
அப்புறம் இங்கு அனுமன்தீர்த்தம் என்ற சுனை ஒன்று இருக்கிறது.இதில் எப்போதும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.இதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிட்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்கு தாகம் ஏற்பட்டதால் இம்மலையில் உள்ள முருகனை வேண்டியதால் முருகன்  வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாக  பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார்.இந்த ஊரின் பெயர் காரணம் என்னவெனில்  "ஹனு' என்றால் ஆஞ்சநேயர். "வாவி' என்றால் ஊற்று,  நீர்நிலை என்று பொருள். அனுமனுக்காக தோன்றிய ஊற்றாதலால் இத்தலம் ஹனுவாவி என்று பெயர் பெற்று தற்போது அனுவாவி ஆகிவிட்டது
முருகன் வள்ளி மற்றும் தெய்வானை உடன் காட்சி அளிக்கிறார்.நவக்கிரக சன்னதி வேறு இருக்கிறது.இந்த பிரகாரம் அருகின் மேல் ஒரு சிவன் கோவில் இருக்கிறது.இன்று தமிழ் புத்தாண்டு தினம் ஆதலால் அன்ன தானம் ஏற்பாடு நடை பெற்று கொண்டு இருந்தது.மேலும் வந்த பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டினை ஆங்காங்கே அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
அப்புறம் கோவிலை ஒட்டி அத்திமரங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு பெரிய ஆலமரம் வேறு தன் விழுதுகளை கீழே நிறைய பரப்பி விட்டு இருக்கிறது.சுனை நீர் கொஞ்சமாய் கீழே வந்து கொண்டு இருக்கிறது.



யானைகள் வரும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கை போர்டு நம்மை ஆரம்பித்திலேயே எச்சரிக்கிறது.அப்புறம் பக்தர்களின் அறியாமையை விலை பேச கிளி ஜோசியம் பார்ப்பவர் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் கீழே இருக்கிற நுழைவு மண்டபத்தில்.

வண்டி நிறைய மாங்காய்களை வைத்து கொண்டு யாராவது வந்து வாங்குங்கப்பா என்று வாடிக்கையாளரை எதிர்நோக்கி ஒரு திடீர் கடையின் ஓனரம்மா....என் புகை படத்திற்கு போஸ் தந்த படி....

அப்புறம் நிறைய எச்சரிக்கை போர்டு வைத்து இருக்கிறார்கள், என்னவெனில் கோவில் சுவற்றை எழுதி அசிங்க படுத்த வேணாம் என்று... ஆனாலும் நம்மாளுங்க அங்க இருக்கிற க்ரில் கம்பியில் உள்ள வேல்களில் பெயரை பொறித்து சுவற்றை அசிங்கம் செய்யாமல் விட்டு இருக்கிறார்கள்.

அப்புறம் முருகனின் முக்கிய விசேச தினங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது
கோவை உக்கடம் டு அனுவாவி கோவில் 11A பேருந்து செல்கிறது. ஆனைகட்டி செல்லும் வழியும் இதன் அருகில் தான் இருக்கிறது.இங்கே இருந்து மருதமலை கோவில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
வெளியூர் பக்தர்கள் கால் டாக்சியை மணிக்கணக்கு (நான்கு மணி நேரம் போதும்) முறையில் அமர்த்தி கொண்டால் இக்கோவில், மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் என மூன்றையும் தரிசித்து விடலாம்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Tuesday, June 14, 2011

மருதமலை பயணம்

இன்னிக்கு எங்காவது போலாம்னு பிளான் பண்ணி பக்கத்துல இருக்கிற மருதமலை முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் (தோம் )
.எத்தனை தடவை போனாலும் அலுக்காத கோவில் நம்ம மருதமலை கோவில்தான்.எப்பவும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்( நான் கோவில் சுத்தி உள்ள பசுமையை சொன்னேன்...ஹி ..ஹி ..ஹி எப்படி ஒரு சமாளிப்பு...)
இன்னிக்கு பார்த்தா செம கூட்டம்.எல்லாம் குடும்பத்தோட வந்திருக்கிறாங்க (ஹி ..ஹி நானும்தான் குடும்பத்தோட)..என்னனு கேட்டா பிரதோஷம் மாம்...அப்புறம் தான் தெரிஞ்சது ..காலேஜ் திறக்க இன்னும் 10 நாள் இருக்கே ..அப்புறம் எப்புடி கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்...அப்புறம் என்ன பண்றது ..அங்க இருக்கிற கடையெல்லாம் போட்டோ எடுத்து இந்த பதிவை தேத்திட்டேன் ..
மலை வழியில அங்கங்கே நம்ம காதல் பறவைகள், கள்ள பறவைகள் உட்கார்ந்திருக்கும்..பார்க்க பரவசமாய் இருக்கும் ..இன்னிக்கு ரோடே வெறிச்சோடி இருக்குது .....அப்புறம் கோவில் திருப்பணி நடை பெறுகிறது .புதிதாக கோவிலை கட்டிகொண்டிருக்கிறார்கள் மேலே செல்ல மாடிப்படி அமைத்து கொண்டு இருக்கிறார்கள்..எப்படியோ ஒரு செய்தி சொல்லிட்டோம் அப்புறம் யாராவது மொக்கை பதிவு போடறேன்னு சொல்லிட கூடாதில்ல...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...