நம்ம ஊருல மிகவும் பிரசித்தி பெற்ற இடம் கோட்டை மேடு.நிறைய கோட்டைலாம் இருக்கு அதனாலதான் இந்த இடத்துக்கு அந்த பேரு அப்படின்னு நினைக்காதீங்க.எனக்கும் அந்த இடத்தோட பெயர்க்காரணம் தெரியல ..முஸ்லிம் அன்பர்கள் நிறையபேரு வசிக்கிறாங்க.அந்த இடத்துல நியூ ஆபிதா பிரியாணி ஹோட்டல் இருக்கிறது
நல்ல சுவையுடன் பிரியாணி கிடைக்கும்.முக்கியமா பீப் பிரியாணி, சுக்கா, சில்லி அனைத்தும் நல்ல சுவையுடன் கிடைக்கும்.சிக்கன் , மட்டன் கூட கிடைக்கும்.ஆனால் அதிகமா விற்பனை ஆவது பீப் மட்டும் தான்.எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.நாங்க மூணு பேரு போனோம்.நான்கு பிரியாணி இரண்டு சுக்கா ரூபாய் 170 .00 மட்டும் தான்.விலையோ குறைவு சுவையோ அதிகம்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அட என்ன பிரியாணி சாப்பிடுற ஆசையை வரவைக்குறீங்க
ReplyDeleteஉங்க போஸ்ட் பாத்துட்டு தா இந்த கடையே தேடி கண்டு புடுச்சு போனேன், சூப்பர் பிரியாணி. நான் சாப்பிட்ட பிரியானில இது தா பெஸ்ட்
ReplyDeleteஉங்கள் போஸ்ட்க்கு நன்றிகள்