Tuesday, June 14, 2011

மருதமலை பயணம்

இன்னிக்கு எங்காவது போலாம்னு பிளான் பண்ணி பக்கத்துல இருக்கிற மருதமலை முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் (தோம் )
.எத்தனை தடவை போனாலும் அலுக்காத கோவில் நம்ம மருதமலை கோவில்தான்.எப்பவும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்( நான் கோவில் சுத்தி உள்ள பசுமையை சொன்னேன்...ஹி ..ஹி ..ஹி எப்படி ஒரு சமாளிப்பு...)
இன்னிக்கு பார்த்தா செம கூட்டம்.எல்லாம் குடும்பத்தோட வந்திருக்கிறாங்க (ஹி ..ஹி நானும்தான் குடும்பத்தோட)..என்னனு கேட்டா பிரதோஷம் மாம்...அப்புறம் தான் தெரிஞ்சது ..காலேஜ் திறக்க இன்னும் 10 நாள் இருக்கே ..அப்புறம் எப்புடி கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்...அப்புறம் என்ன பண்றது ..அங்க இருக்கிற கடையெல்லாம் போட்டோ எடுத்து இந்த பதிவை தேத்திட்டேன் ..
மலை வழியில அங்கங்கே நம்ம காதல் பறவைகள், கள்ள பறவைகள் உட்கார்ந்திருக்கும்..பார்க்க பரவசமாய் இருக்கும் ..இன்னிக்கு ரோடே வெறிச்சோடி இருக்குது .....அப்புறம் கோவில் திருப்பணி நடை பெறுகிறது .புதிதாக கோவிலை கட்டிகொண்டிருக்கிறார்கள் மேலே செல்ல மாடிப்படி அமைத்து கொண்டு இருக்கிறார்கள்..எப்படியோ ஒரு செய்தி சொல்லிட்டோம் அப்புறம் யாராவது மொக்கை பதிவு போடறேன்னு சொல்லிட கூடாதில்ல...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

3 comments:

  1. >>மலை வழியில அங்கங்கே நம்ம காதல் பறவைகள், கள்ள பறவைகள் உட்கார்ந்திருக்கும்..பார்க்க பரவசமாய் இருக்கும்

    haa haa sema

    ReplyDelete
  2. நண்பரே!மருதமலையை சிரித்தபடி வலம் வரச்செய்து விட்டீர்கள்.நன்றி

    ReplyDelete
  3. கோவை குசும்பு னு படங்களில கேள்விப்பட்டு இருக்கிறேன், நீங்க குசும்பாயும் சில பதிவுகள் போடலாம் தானே...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....