மதுரை அம்மா மெஸ்:கோவை
காந்திபுரத்துல இருக்கும் போது நம்ம நண்பர் போன் போட்டு நாக்குலாம் செத்து போச்சு.கொஞ்சம் கூட சுறு சுறுன்னு இல்ல.எங்காவது போய் நல்லா காரஞ்சாரமா சாப்பிடலாமா அப்படின்னு கேட்க....ஒரே சந்தோசம் நமக்கு......அட...ஆடு தானா வந்து சிக்குதே அப்படின்னு..

சரி வா மச்சி போலாம் அப்படின்னு போன ஹோட்டல் மதுரை அம்மா
மெஸ்.காந்திபுரம் பவர் ஹவுஸ் ரோட்டில் இருக்கிறது.சின்ன ஹோட்டல் தான்.உள்ளே
நுழையும் போதே மணம் மூக்கை துளைக்கிறது.
வந்த சர்வர் ஆட்டுல இருக்கிற அத்தனை
உருப்படியையும் ஒவ்வொண்ணா சொல்ல சொல்ல நமக்கோ எச்சில் ஊறுது...ஆனா நம்ம கூட வந்தவரோட கை அப்பப்ப தானா அவரோட பாக்கெட்டை
தடவி பார்க்க ஆரம்பித்தது. சரி பயபுள்ள பயப்படுது போல அப்படின்னு நினைச்சி சும்மா
லைட்டா ஆர்டர் பண்ணினேன்.
மட்டன் சுக்கா நல்லா இருக்கு நிறைய
எண்ணையோடு.சுவை கொஞ்சம் பரவாயில்லை. குடல் கறி....ரொம்ப அருமை.கொஞ்சம் கூட அந்த
வாசனை இல்லாமல்... மிக அருமையாக....வதக்கிய வெங்காயத்துடன் மசாலா மட்டுமே சேர்த்து
ரொம்ப நன்றாக இருந்தது.மிக ட்ரையாக இருக்கிறது.அருமை..
கோலா உருண்டை நன்றாக இருந்தது.மிக நைசாச அரைத்து ரொம்ப சுவையுடன் இருக்கிறது. அப்புறம்
நம்ம பேவரைட் வஞ்சிரம் செமையா இருந்தது.சுட சுட சாப்பிட்டதில் ரொம்ப சுவை வஞ்சிரம் மீன் சைசில் சின்னதாக இருந்தாலும் சுவையிலும் விலையிலும் மிக அதிகமாக இருக்கிறது.கொஞ்சம் கூட சிவப்பு கலர் சேர்த்தாமல் வீட்டில் சமைத்தது போல மீன் இருக்கிறது.அப்புறம் சாப்பாட்டிற்கு
பிசைந்து சாப்பிட குடல் சாறு, நாட்டுகோழி குழம்பு, மட்டன் குழம்பு என வரிசையா
கலந்து கட்டி அடிச்சோம்.(என்னென்ன குழம்பு இருக்கு முதலிலேயே கேளுங்க..அப்போதான்
ஒவ்வொண்ணா வெளில வரும்...)
கடைசியா ரசம், நல்ல கெட்டி தயிரு என சாப்பிட்டதில் வயிறு விண்ணுனு புடைக்க ஆரம்பிச்சிடுச்சு.
கடைசியா ரசம், நல்ல கெட்டி தயிரு என சாப்பிட்டதில் வயிறு விண்ணுனு புடைக்க ஆரம்பிச்சிடுச்சு.
அப்புறம் பக்கத்து டேபிளில் ஆர்டர் செஞ்ச
நாட்டுக்கோழி பெப்பர் வறுவல் வாசனை இங்க மூக்கை துளைக்கவே அந்த பக்கம் பார்த்தா பயபுள்ள சும்மா நாட்டுக்கோழியோடு போராடிகிட்டு இருக்கான்.ரொம்ப சுவை போல...
சரி நாமளும் ஒண்ணு ஆர்டர் பண்ணுவோமா என்ற எண்ணத்தில் நண்பனை பார்க்க....அவன் கை பர்சு மேலயே இருக்க சரி..எதுக்கு இன்னிக்கு ரொம்ம்ப.........இந்த ஆட்டை இன்னொரு நாள் பலி போடுவோம் என்றெண்ணி...இருக்கிறத வச்சி...நல்ல காரசாரமா சாப்பிட்டோம்..கரண்டு வேற இல்ல..செமயா வேர்த்துப் போச்சி.....எப்படியோ நல்லா வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.

இரண்டு பேருக்கு 454 ரூபாய் ஆச்சு..
அப்புறம் சாப்பிட்டு விட்டு வெளிய வரும் போது அம்மணிகள் கும்பலா வர..அடடா.... சான்ஸ் போச்சே அப்படின்னு நினைப்பதிற்குள் அனைவரும் பக்கத்துல இருக்கிற ஆச்சி மெஸ் இல் புகுந்துட்டாங்க......புரட்டாசி மாசம் போல்...
இந்த கடை பவர்ஹவுஸ் அருகில் இருக்கிறது.அருகிலேயே ஆச்சி மெஸ் சைவ உணவு ஹோட்டல் இருக்கிறது.
ஈரல், மூளை, குடல், நாட்டுக்கோழி வறுவல்,நெத்திலி மீன், காடை, என எல்லா ஜீவராசிகளோட பார்ட்ஸ்ம் இருக்கு...
நேசங்களுடன்
ஜீவானந்தம்

இரண்டு முறை சென்றதுண்டு...
ReplyDelete(காலையிலே பசிக்க வைச்சுட்டீங்கப்பா...)
நல்ல வேளை நீங்க ஆச்சி மெஸ்ஸ பத்தி எழுதல அதனால் எங்கிட்ட இருந்து தப்பிச்சிட்டீங்க.....
ReplyDeletewow, arumai nanbare....kandippaaga ingu chella vendum. kovai varumpothu inguthaan lunch !!
ReplyDeleteசூப்பர் பாஸ்..அடுத்த முறை காந்திபுரம் வந்தா கண்டிப்பா போறேன் தல...
ReplyDeleteகூடவே கேமரா வச்சு இருப்பீங்களா..??????
இங்கு இட்லியும் குடல் கறியும் செம்ம டேஸ்ட்டா இருக்கும்... டிவைன், டிவைன்...
ReplyDeleteஎங்க ஏரியாவில் எங்க கண்ணுக்கு படாமல் ... ரசிக்கறவங்களுக்குத்தானே தெரியும் (சாப்பாட்டைத்தான் சொன்னேன்)
ReplyDeleteஇத
ReplyDeleteமிஸ்
பண்ணிட்டேனே
சரி
மாப்ள
நோட்டேட்
காந்திபுரத்துல இருக்கும் போது நம்ம நண்பர் போன் போட்டு நாக்குலாம் செத்து போச்சு
ReplyDelete>>
நாக்கை அடக்கம் பண்ணிட்டீங்களா?!
மட்டன் கோலா உருண்டை, மட்டன் சுக்கா, குடல், வஞ்சிரம் மீன், அப்புறம் முக்கியமா சாப்பாடு...
ReplyDelete>>
இதான் லைட்டா?! அப்போ ஃபுல் வயத்துக்கும்ன்னா ஒரு ஹோட்டலையே காலி பண்ணிடுவீங்க போல
பவர் ஹவுசைச்சுற்றி நாலு ரோடு இருக்குது. எந்த ரோட்டிலைன்னு சொல்லப்படாதா? நாங்களும் போவோமில்ல?
ReplyDeletesuper taste,, mutton kola round epdi irkum..... entha briyani pidikum...dindigul, hyderabad, ambur, thalapakatu, etc.. which taste is good
ReplyDeleteநண்பரே மதுரையில் உள்ள அம்மா மெஸ் அசைவ உணவகம் தற்போது தரத்தில் மிகவும் மோசமாகி விட்டார்கள்.மதுரைக் காரர்கள் யாரும் தற்போது அங்கு செல்வதில்லை இப்போது வெளியூர்வாசிகள் தான் ஏதோ பழைய ஞாபகத்தில் வந்து கசந்து செல்வதைக் காண்கிறோம்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று18.02.2014 வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-