Monday, October 29, 2012

கோவை மெஸ் : சில்வர் ரிவர், டேன்ஜங் பலாய், கரிமுன், இந்தோனேசியா

Silver River,TG balai, Karimun, Indonesia 
           ஸீ புட் சாப்பிடனும் அப்படின்னு சொன்னதால் நம்ம கைடு கூட்டிட்டு போன இடம் சில்வர் ரிவர் ஹோட்டல்.அந்த ஊரிலேயே கொஞ்சம் பெரிய ஹோட்டல் இது தான்.ஒரு பீச் ஓரமா இருக்கு இந்த ஹோட்டல்.கண்ணாடி தொட்டிகளில் உயிரோட லாப்ஸ்டர், இறால், மீன், நண்டு என எல்லாம் இருக்கிறது.நாம் சொல்லும் ஆர்டர்க்கு ஏற்ப இவைகள் உயிரை விடுகின்றன நமக்காக.நாங்கள் ஆர்டர் பண்ணினது மொத்தம் மூணு அயிட்டம்.மலாய் மொழியில் இதெல்லாம் நமக்கு என்ன பேருல சொல்றாங்கன்னு தெரியல.சின்ன குழந்தைங்க படம் பார்த்து சொல்லுமே அந்த மாதிரி ஒவ்வொண்ணையும் படத்த காட்டி காட்டி ஆர்டர் பண்ணினோம்.இறால், மீன், நூடுல்ஸ், இப்படி...
 
 
 
 
 
அதுக்கு முன்னாடி ஒரு ஸ்பெசல் புட் வைச்சாங்க.கொத்தா அப்படின்னு பேரு..தென்னை மட்டை கீற்று இலையில் வேக வைக்கப்பட்ட சிக்கன் மற்றும் மீன்.நெருப்பில் சுட்ட சுவையில் மிக நன்றாக இருக்கிறது.
 
பார்க்க அப்படியே உயிருடன் இருக்கிற மாதிரியே இருக்கிறது இந்த இறால்.ஆனால் நன்றாக வெந்து இருக்கிறது இந்த இறால் பிரை.ஆனால் தோல் உரிக்காத இறால். கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டி இருக்கிறது.சுவையாகத் தான் இருக்கிறது
 
அடுத்து வந்த மீன் செம டேஸ்ட்.நன்றாக எண்ணையில் பொரித்து பின் மசாலா சேர்த்து ஸ்வீட் சாஸ் உடன் இருக்க சாப்பிட சாப்பிட செம டேஸ்ட்.மொறு மொறு வென்று இருக்கிறது.கொஞ்சம் காரத்துடன் அதே சமயம் இனிப்புடன் மிக நன்றாக இருக்கிறது.
அப்புறம் கொடுத்த நூடுல்ஸ் ஒரு வெஜிடபிள் தண்டு போல இருக்கிறது.செம டேஸ்ட். சாப்பிடும் போது நறுக் நறுக் என்று இருக்கிறது.கூடவே சிக்கன் துண்டுகள் நன்றாக இருக்கிறது.
பீப் நூடுல்ஸ் இதுவும் நன்றாக இருக்கிறது.பீப் கொஞ்சம் குழம்புடன் இருக்கிறது.மிக்ஸ் பண்ணி சாப்பிட நன்றாக இருக்கிறது.என்ன போர்க் ஸ்பூனால் சாப்பிடவே கஷ்டமா இருக்கு.வழுக்கி வழுக்கி விழுது.அதுவும் இல்லாமல் ரொம்ப நீள நீள மாய் இருக்கு.பக்கத்துல இருக்கிற ஒரு ஆளு சாப் ஸ்டிக் ல செம பின்னு பின்றாரு.நான் ட்ரை பண்ணி பார்த்துட்டு முடியல.எப்படியோ கஷ்ட பட்டு சாப்பிட்டோம்.
முதல் முறையா வெளிநாட்டுல பாஷை தெரியாத ஊருல ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம்.நன்றாக இருக்கு.இன்னொரு தீவுல பாம்பு, முதலை, குரங்கு கறி கிடைக்குமாம்.அதை எல்லாம் சாப்பிட முடியலயே அப்படிங்கற வருத்தம் ரொம்பவே இருக்கு. எப்படியாவது அதையும் டேஸ்ட் பண்ணிடனும் அப்படிங்கிற முடிவுல இருக்கேன். பார்ப்போம்.....சான்ஸ் கிடைக்குதான்னு....
அப்புறம் அம்மணிகள் தான் ஆர்டர் எடுக்கிறது, பரிமாறுவது எல்லாம்.செமையா இருக்கு.கண்ணுக்கு குளிர்ச்சியா சாப்பிட முடிகிறது.கூடவே நம்ம சரக்கும் தர்றாங்க.நல்லாவே இருக்கு எல்லாம்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

10 comments:

  1. Sema. Photos paakkavae kalakkalaa irukku

    ReplyDelete
  2. நண்பா கலக்குது ! வரும் போது பார்சல் வாங்கிட்டு வாங்க !

    ReplyDelete
  3. லாப்ஸ்டர் என்ன கரப்பான் பூச்சி சைசுல ஊறுது:)லாப்ஸ்டரை அப்படியே வேக வைச்சு இரண்டா நேர் கோட்டில் வகுந்து பெச்சமல் சாஸ்,பெர்மீசன் சீஸ் தூவி அவன் எனும் சூட்டுப்பெட்டிக்குள் தள்ளி கிரில் செய்வதுதான் கிளாசிக்கல் லாப்ஸ்டர் முறை.

    இறா மீனை அப்படியே வேகவைத்து பிலிப்பைன்ஸ் நாட்டு நண்பர்,நண்பிகளுடன் சோயா சாஸில் முக்கியெடுத்து சாப்பிடும் ருசியே தனி:)

    ReplyDelete
  4. //.நாம் சொல்லும் ஆர்டர்க்கு ஏற்ப இவைகள் உயிரை விடுகின்றன //

    You started writing like a journo.. sooper. Woow so yummy and mouth watering!! jus missed it!!!

    ReplyDelete
  5. படத்தை பர்க்கும்போதே குமட்டுதே.., உவ்வே

    ReplyDelete
  6. என்னப்பா எட்டுக்கால் பூச்சி கரப்பான் பூச்சி ஃப்ரை கூடக் கிடைக்குதா? பார்க்க எனக்கு அப்படித் தோணுச்சி அதான் கேட்டேன்

    ReplyDelete
  7. நூடுல்ஸ் நருக் நருக் -னா அது ஏதோ கடல் உணவாக இருக்கும் அவ்...

    ReplyDelete
  8. எனது இதயங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....