Monday, February 25, 2013

கோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவை

கோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவை
இந்த ஹோட்டல் புரூக் பீல்ட்ஸ் எதிரில் பெட்ரோல் பங்க் பின்புறம் இருக்கிறது.இந்த ஹோட்டலில் வீச்சு புரோட்டா மிக நன்றாக இருக்கும் என்று நண்பர் சொன்னதால் அங்கு படைஎடுத்தோம்.வீடு போன்ற அமைப்புதான்.கீழ் தளத்திலும் மாடியிலும் இருக்கிறது.உள் நுழைந்ததும் உரித்த கோழிகள் கிரில்லில் சுத்திக் கொண்டிருப்பதை பார்த்தபடியே நாங்கள் மாடிக்கு சென்றோம்.சுற்றிலும் மூங்கில் பிளைண்ட்ஸ் தொங்கவிட்டு மிக ரம்மியமாக இருக்கிறது.அதை விட அங்கே ஏகப்பட்ட அம்மணிகள்...ப்ரூக் பீல்ட்ஸ் போய்ட்டு வந்து தெம்பாக ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தனர். நோட்டம் விட்டபடியே எங்களுக்கென்று தோதாய் இடம் பிடித்து அமர்ந்தோம்..
சர்வர் வர ஒவ்வொன்றாய் ஆர்டர்..
பிரியாணி, முட்டை வீச்சு, சாதா வீச்சு, சிக்கன் கொத்துகறி என்று...
பிரியாணி நிறைய தடவை சாப்பிட்டு இருக்கிறேன் இங்கு..சுவை அதிகம் ஈர்க்கவில்லை.பிரியாணி நிறம் குறைவாகவே இருக்கிறது எப்போதும் இங்கு.அங்கண்ணன் கடை பிரியாணி  போலவே இங்கும் இருக்கிறது.டேஸ்ட் குறைவு தான்..
 

முட்டை வீச்சு...ரொம்ப சாஃப்டாக..நன்றாக இருக்கிறது.அதுபோலவே சாதா வீச்சும்..ரசித்து ருசித்ததில் இன்னும் சுவை அதிகமாகிக் கொண்டே போகிறது.
கொத்துகறி மட்டனில் தான் கிடைக்கும் என்று நினைத்தேன்..சிக்கனிலும் நன்றாக இருக்கிறது.செம டேஸ்ட்..மட்டன் போன்று ரொம்ப தூளாக இல்லை.ஆனால் சின்ன சின்ன துண்டுகள்..மிக நன்றாக இருக்கிறது.
 
 கடைசியாய் ஒரு லைம் சோடா குடித்துவிட்டு எஸ் ஆனோம்...

 
 
 பில் எப்போதும் போல கோவைக்கே உண்டான ரேட்டுதான்.ஒன்றும் மாற்றமில்லை..முன்பெல்லாம் ஞாயிறுகளில் மட்டுமே இங்கு கூட்டம் அள்ளும்..இந்த ப்ரூக் பீல்ட்ஸ் வந்ததினால் இந்த ஹோட்டலில் இப்போது செம கூட்டம் அள்ளுகிறது. சாப்பிட்டு பார்க்கலாம்..
அதேபோல் இந்த ஹோட்டலின் சுவை பத்தி சொல்ல  தனி மொபைல் நம்பர் வைத்து இருக்கின்றனர்.நேரிலேயே சொல்லி விட்ட படியால் போன் பண்ணவில்லை..


நேசங்களுடன்
ஜீவான்ந்தம்



4 comments:

  1. படத்தில் இருக்கும் உணவுகளை பார்க்கும் போது இப்ப சாப்பிட கிடைக்காதான்னு தோணுது சூப்பர் பதிவு நண்பரே


    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    ReplyDelete
  2. சாப்பிடத்தூண்டும் பகிர்வு...நல்லாத்தான் சாப்பிடறீங்க..

    ReplyDelete
  3. நண்பரே இங்கு உணவு பொருள்களுக்கு செயற்கை வண்ணம் சேர்ப்பதில்லை அதனால் நிறம் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறன்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....