Wednesday, May 15, 2013

முனைவர் பட்டாபட்டி - ஆழ்ந்த இரங்கல்கள்


பதிவுலகில் மிகப்பிரபலமான பதிவரான முனைவர் பட்டாபட்டி வெங்கிடபதி என்கிற ராஜ் கடந்த ஞாயிறு அன்று வெளிநாட்டில் காலமானார்.அவரின் உடல் விமானம் மூலம் சென்னை வந்து பின் ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு மதியம் வந்து சேர்ந்தது.அவரது பூத உடல் அவரின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்வைக்கு சிறிது நேரம் வைக்கப்பட்டு பின் பெரியநாயக்கன் பாளையம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது இறுதி சடங்கில் நான்,வீடு சுரேஸ்குமார், வெளங்காதவன், மங்குனி அமைச்சர், உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டோம்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

16 comments:

  1. என்னால் கலந்துகொள்ள இயலவில்லை.

    ReplyDelete
  2. வருந்துகிறேன். அவருடைய குடும்பத்துக்கு பதிவுலகம் சார்பில் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவியுங்கள். நன்றி.

    ReplyDelete
  3. அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....

    ReplyDelete
  4. திரு. பட்டாபட்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏழாம் நாளில் (18-05-2012 சனிக்கிழமை) பதிவர்கள் அனைவரும், அன்று ஒரு நாள் மட்டும் பதிவுகளை வெளியிடாமல், பதிவுகளுக்கு கருத்துக்கள் இடாமல் ஒட்டுமொத்த பதிவுலகமும் அஞ்சலி செலுத்தலாமே....

    கோவை ஜீவா.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரிடமும் இச்செய்தி சேர வேண்டும்.
      எனவே பதினாறாம் நாள் ஒட்டு மொத்தமாக பதிவுலகம் அஞ்சலி செலுத்தலாம்.

      Delete
    2. நண்பர்கள் அனைவருடைய வேண்டுகோளின்படி,
      நாளையே [18-05-2013] பதிவுலகினர் அனைவரும் அஞ்சலி செலுத்துமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  5. ஆழ்ந்த அஞ்சலிகள்.... குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்....

    ReplyDelete
  6. நண்பரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்

    ReplyDelete
  7. ஆழ்ந்த அஞ்சலிகள்... ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

    ReplyDelete
  8. AVARU NAIDU VANGA

    ReplyDelete
  9. அண்ணனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்...

    ReplyDelete
  10. அண்ணனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்..! இறைவனை வேண்டுகிறேன். :(

    ReplyDelete
  11. பட்டாபட்டி என்ற பதிவரை பற்றி,ஒன்றுமே நான் அறிந்ததில்லை.
    சக பதிவர் என்ற உணர்வோடு அன்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தேன்.
    அங்கிருந்த சூழல் உலுக்கி விட்டது.
    பதிவர் வெளங்காதவனின் கண்ணீர்...அங்கு பெருகிய கண்ணீர் துளிகளோடு கலந்து நிஜ அஞ்சலி செலுத்தியது.

    அவரது குடும்பத்தாருக்கு,
    எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  12. வருந்துகிறேன். அவருடைய குடும்பத்துக்கு பதிவுலகம் சார்பில் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவியுங்கள்.
    surendran

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....