Saturday, May 25, 2013

பயணம் - ஆனை கொட்டில், குருவாயூர் , கேரளா (Anathavalam, Guruvayoor,Kerala)

குருவாயூரில் இருந்த போது பக்கத்துல என்ன இடம் இருக்கு சுத்திப்பார்க்க அப்படின்னு ஒரு ஆட்டோ டிரைவரை கேட்க அவரு கூட்டிட்டு போன இடம் யானைத்தாவளம் என்கிற ஆனை கொட்டில்.
 
அங்க போனா பார்க்கிங் லாம் செம கூட்டம்...ரக வாரியா கேரள அம்மணிகள்....பார்த்துகிட்டே போனா வெளியவே ரெண்டு யானைகள் பிளிரிகிட்டு இருந்தது...அம்மாடி...எம்மாம் பெரிய யானை...அப்படின்னு ஆச்சர்யப்பட்டுக் கொண்டே உள்ளே நுழைய ஐந்து ரூபாய் டிக்கட் வாங்கிட்டு கேமராவிற்கு 25ம் கொடுத்துட்டு உள்ளே போனால் எவ்ளோ யானைகள்...கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட யானைகள்.(சமீபத்தில் தான் மூன்று யானைகள் இறந்து விட்டனவாம்.மொத்தம் 62 இருக்கிறது.)
யம்மாடி ஒவ்வொன்னும் எவ்ளோ பெருசு.... தந்தம் இருக்கிறது...இல்லாதது என நிறைய....பக்கத்துல நின்னு பார்க்க பிரமாண்டமா இருக்குது.. கூடவே கொஞ்சம் பயமும் இருக்குது .....மதம் கிதம் பிடிச்சு நம்மள சட்னி ஆக்கிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு பம்மிகிட்டே தான் பார்த்தேன்.காட்டுக்குள்ள யானைகள் எப்படி இருக்கும் அதே மாதிரித்தான் இருக்கு.என்ன..... எல்லா யானையையும் சங்கிலியால் கட்டி வைத்து இருக்கிறார்கள்...
தண்ணி தொட்டிகிட்ட ஒரு யானையை குளிக்க வச்சிக்கிட்டு இருந்தாங்க.பாகன் என்ன சொல்றாரோ அதை கேட்டு புரிஞ்சு நடக்குது...காலை இப்படி வைக்குது..அப்படி வைக்குது...தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி முதுகு மேல ஊத்துது.. அந்த பக்கம் பார்த்தா இன்னொரு யானை தீனி எடுத்துகிட்டு பொறுப்பா போகுது... ஆச்சர்யம் தான்.அவ்ளோ பெரிய யானையை அடக்கி ஆள்ராங்களே அப்படின்னு...
 
 
இப்படி எங்க பார்த்தாலும் யானைதான்..அதிலும் ஒவ்வொரு யானையும் பண்ற சேட்டை இருக்கே...ஒண்ணு குச்சி எடுத்து உடம்ப சொறியுது.இன்னொன்னு முன்னங்காலை அப்படி இப்படி ஆட்டி டான்ஸ் ஆடுது.பார்க்க குதூகலமா இருக்கு.பார்க்க வரும் அத்தனை பேர்களையும் கவர்கிறது.இந்த யானைகள் தான் கேரளாவில நடக்கிற திருவிழாக்களில் பங்கேற்குதுன்னு நினைக்கிறேன்.எல்லாத்தையும் மேக்கப் பண்ணி வரிசையா திருவிழாவில் நிறுத்தி விடுவாங்க போல...ஒரே சமயத்தில் இவ்ளோ யானைகளை பார்ப்பது அரிது தான்.

கண்டிப்பாக குருவாயூர் போனால் தவற விட கூடாத இடம்.கோவிலில் இருந்து கிட்ட தட்ட 3 கிலோ மீட்டர் இருக்கும்.ஆட்டோ டிரைவர்கள் யாரும் மீட்டர் போட்டு ஓட்டறதில்ல.குத்து மதிப்பாதான் வாங்குறாங்க. ஆனா நம்ம ஊரை விட கம்மிதான்.

கிசுகிசு : கடைசி வரைக்கும் நம்ம மாணிக்கத்தை (கும்கி) தேடிப்பார்த்தேன்...கிடைக்கல..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

15 comments:

  1. படங்கள் அருமை... யானைன்னாலே பிரம்மாண்டம் தானே... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஷங்கர் என்றாலும் பிரமாண்டம்தான்...ஹாஹா...நன்றி ஸ்கூல் பையன்

      Delete
  2. (ரக வாரியா) யானை படங்கள் அருமை...

    ReplyDelete
  3. யம்மாவ் ! எவ்ளே ஆனைகள், படங்கள் கலக்கல்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா..அம்புட்டும் யானைகள் தான்...

      Delete
  4. இந்த இடத்துக்கு நானும் போய் இருக்கேன்.
    அப்போது இரண்டு யானைகளுக்கு மதம் பிடித்து இருந்தது.

    என் நேரம் வவ்வாலுக்கு கூட மதம் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...இங்க வவ்வால் பத்தி சொல்லலயே

      Delete
  5. குருவாயூர் என்றாலே யானைகள் நினைவுக்கு வரும்! அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. இன்று எனது தளத்தில்

    http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_25.html

    ReplyDelete
  7. யப்பா நீ சட்னி ஆகாம வந்ததே பெரிய விஷயம்தான் ஹி ஹி...

    படங்கள் யாவும் மிகவும் அருமை...!

    ReplyDelete
    Replies
    1. ஆமா ...எவ்ளோ யானைகள்...மாட்டுனா நிச்சயம் சட்னி தான்,,

      Delete
  8. நீங்க செரியான ஊரு சுத்தி,,,,,,,,,,, நார்த் இண்டியா பத்தி எப்ப சொல்லுவீங்க ஜீவா

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....