Friday, May 17, 2013

அருள்மிகு அவினாசியப்பர் / அவினாசிலிங்கேசுவரர் கோவில், அவினாசி, திருப்பூர்

                அவினாசி வழியா சேலம் செல்லும் போதெல்லாம் இங்க இருக்கிற சிவன் கோவிலை பார்த்து ிசம் பண்ணும் அப்பின்னநினைப்பேன்.ரொம்ப காலமா அது நிறைவேறாம போய் இருந்தது.எப்படியோ இப்பொழுது நிறைவேறி இருக்கிறது.மிக விசாலமாக இருக்கிறது இந்தக்கோவில்.பரந்து விரிந்து கிடக்கிற கோவிலின் ஆரம்பமாய் அரசமரத்தடி பிள்ளையார் வீற்றிருக்கிறார்.கார் பார்க்கிங்கில் வண்டியிறத்ிவிட்டு நக்க ஆரம்பித்ேன்.வெயிலின் ாக்கம் வெறங்கால்கில் ெரிந்து. ஆனாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் வேடந்தங்கல் பைகள் போல அம்மிகள் விசட்டி வந்தில் வி ஆனு மினுள்....மில் ிவின் ிசம் பெறுவோம் பின் சிலின் ிசம்  என ுடிவு பண்ணி உள்ளே நுழந்தேன்
        சிவ சிவ என பெயர் பொறித்த கோவில் கோபுரம் நம்மை வரவேற்கிறது.கோபுரம் நுழைவாயில் முன் கொடிமரம் இருக்கிறது.உள் நுழைந்ததும் ஏகப்பட்ட தூண்கள்.உள்ளே கோவிலும் பரந்து விரிந்து இருக்கிறது.சிவனை நோக்கி நந்தியும் கொடிமரமும் இருக்கிறது.முதலில் சிவனை சுற்றி இருக்கிற அத்தனை சன்னிதிகளிலும் ஒரு வருகைப்பதிவினை உறுதி செய்திவிட்டு சிவனை தரிசிக்க கருவறைக்குள் நுழைந்தேன்.ஐந்து தலை பாம்பின் கீழ் சிவன் லிங்கம் வடிவில் வீற்றிருக்கிறார்.மனமுருக வேண்டிக்கொண்டு வெளியேறினேன்.
           கோவில் பிரகாரத்தில் சனிபகவானுக்கு தனி சன்னதியும் நவக்கிரக நாயகர்களுக்கு தனி சன்னதியும் இருக்கிறது.அதுபோலவே பிள்ளையார், முருகன் ஆகியோருக்கும் தனி சன்னதி இருக்கிறது.காலபைரவர் சந்நிதி உள்பிரகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்; இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம்.
         கோவிலின் தல பெருமை சொல்லும் கல்வெட்டுகள் இருக்கின்றன.63 நாயன்மார்கள், வராகி, வீரபத்ரன், சாமுண்டி போன்ற தெய்வங்களும், பஞ்ச பூத லிங்கங்களும் கோவில் பிரகாரத்தில் இருக்கின்றன.இந்த கோவில் அருகிலேயே கருணாம்பிகா சன்னதியும் இருக்கிறது.இங்கு அம்மன் ஆட்சிபீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள்.
                   சிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடி மரமும் உள்ளது.  சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

              கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது.இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.
        காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தலத்ின் இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.
              இதன் தல வரலாறு என்னவெனில் சுந்தரர் இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
           இதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனை கோயிலுக்குள் வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்குள் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் "முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்' நடக்கிறது.
இக்கோவிுக்கு வெளியாமைக்குளம் இருக்கிறு.இந்தோவிலின் முக்கிய ிருவிாவாக ேரோட்டம் இருக்கிறு.சித்ிரை மத்ில் வெகு விமிசையாகைபெறும்.
 
காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.


ேசங்ுடன்
ீவானந்தம்

  

9 comments:

 1. முதல் பத்தியில் வாசிக்க முடியாத வரிகள் : (Font மாறியுள்ளது)

  /// கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.வெயிலின் தாக்கம் வெறுங்கால்களில் தெரிந்தது. ஆனாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் வேடந்தாங்கல் பறவைகள் போல அம்மணிகள் வரிசை கட்டி வந்ததில் வலி ஆனது மனதினுள்....முதலில் சிவனின் தரிசனம் பெறுவோம் பின் சிலரின் தரிசனம் என முடிவு பண்ணி உள்ளே நுழைந்தேன் ///

  முடிவில் "முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்" நடக்கிறது. அடுத்து :

  /// இக்கோவிலுக்கு வெளியே தாமரைக்குளம் இருக்கிறது.இந்த கோவிலின் முக்கிய திருவிழாவாக தேரோட்டம் இருக்கிறது.சித்திரை மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும். ///

  கோவிலின் சிறப்புகளுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் அவர்களே.

   Delete
 2. அழகான.. அமைதியான
  சிறப்பான கோயில் பற்றிய
  பதிவு அருமை நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகேந்திரன் அவர்களே

   Delete
 3. அருமையான விளக்கங்களுடம் அழகிய பதிவு! அண்ணன் டி.டி சொன்னது போல முதல் பத்தி வாசிக்க முடியவில்லை! இறுதியிலும்! அதை திருத்தி வாசிக்க வைத்தமைக்கு அண்ணன் டி.டிக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ் அவர்களே...சரியாக இருப்பது போல தெரிகிறது..

   Delete
 4. அருமையான பதிவு!

  http://karuvooraan.blogspot.in/
  ஆதரவு அளிக்கவும்! நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவின் அவர்களே...

   Delete
 5. கண்டிப்பா ஒரு நாள் போகனும்

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....