Tuesday, May 7, 2013

கோவை மெஸ் - ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் - R.S.புரம், கோவை

R.S.புரம்.ஒரு மதிய வேளை...பசி பட்டைய கிளப்பவே டி பி ரோட்டுல இருக்கிற அசைவ ஹோட்டலான ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் போனோம்.கூட்டம் நிறைந்து இருந்தது.இந்த ஹோட்டலில் எப்பவும் கூட்டம் இருந்து கிட்டே இருக்கும்.ஏன்னா இந்த டி பி ரோடு ஏரியாவுல ஒரு நல்ல விலை குறைவான டேஸ்ட் இருக்கிற ஒரு அசைவ மெஸ் இதுதான்.நல்ல காரம் சாரமா சாப்பிடனும்னா இங்க போலாம்.இந்த ஹோட்டலில் தனிச்சிறப்பு என்னவெனில் பரிமாறும் சர்வர்கள் அனைத்தும் மகளிர் மட்டுமே முதலாளி தவிர்த்து.
 நாங்கள் போனபோது பக்கத்து டேபிளில் அம்மணிகள் கூட்டம் ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தது.அவர்களுக்கு தோதுவாய் அருகில் உள்ள டேபிளில் அமர்ந்து கொண்டோம்.வந்த சர்வர் பெண்மணியிடம் பிரியாணி, சாப்பாடு, வஞ்சிரம் மீன், மட்டன் சுக்கா, பணியாரம் இதெல்லாம் ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தோம்.அசைவத்தில் ஒவ்வொரு அயிட்டமாக போர்டில் எழுதி வைத்து இருந்தனர்.பார்த்துக்கொண்டே எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
நம்ம கூட வந்த நண்பர் குழந்தை மாதிரி...எலும்பில்லாம தான் சாப்பிடுவார். மூளை, ஈரல், போன்லெஸ் சிக்கன் இப்படித்தான்...அவரு ஆசையா மூளை இருக்கான்னு அந்த பெண்மணியிடம் கேட்க, ஒரு படத்தில் வந்த காமெடி ஞாபகம் வந்து தொலைக்க.....அடேய்...அப்படிலாம் கேட்காத....ஆட்டு மூளை இருக்கான்னு கேளு என்று சொல்லவும் அப்படியே வாய் மொழிந்தான்.அது போலவே அந்த பெண்மணியும் இல்லை என்று சொல்லவும் ரொம்பவும்.....ஃபீலிங்ஸ்....
எனக்கு பிரியாணியும் பக்கத்து இலைக்கு சாப்பாடும் வந்தது.மூன்று வித குழம்பு...மட்டன், சிக்கன், மீன் என ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்தனர்.இதுவே ஹரி பவன் என்றால் வாளி வாளியாக வைத்து இருப்பார்கள்.கூடவே தேடிப்பார்த்தால் கொஞ்சம் பீஸ் இருக்கும்.குழம்பு கறி இன்னும் சுவையாக இருக்கும்.இங்கு குழம்பு நன்றாக இருந்தது.
பிரியாணி சுமார் ரகம் தான்.ஆனால் மட்டன் நன்றாக வெந்து இருந்தது.கூட இருக்கிற குழம்புடன் கலந்து கட்டி அடிக்க சுவையுடன் தான் இருந்தது.
வஞ்சிரம் மீன் சுவை...அது எப்போதும் நன்றாக இருக்கும்.என்ன.... அளவில் சிறியதாக இருந்தது.ஆனா டேஸ்ட் சூப்பர்.
அதுபோலவே மட்டன் சுக்கா...ஒரு 6 பீஸ் தான் இருக்கும்.பெப்பர் போட்டு பிரட்டி இருந்தனர்.சுவை நன்றாக இருந்தது.
கடைசியாக வந்த ஒன்று பணியாரம்.முட்டையில் செய்தது.இது எப்போது ஆர்டர் பண்ணினாலும் சூடாக கேளுங்கள்..அப்போது தான் நன்றாக இருக்கும்.இந்த தடவை ஆறி போனதை வைத்து விட்டனர்.டேஸ்ட் சுமார்தான்.சூடாய் இருந்தால் சூப்பராக இருக்கும்.அப்படியே சிக்கன் மட்டன் குழம்பில் தொட்டு சாப்பிட சூப்பராய் இருக்கும்.
அதுக்கப்புறம் நண்பர் ஒவ்வொரு குழம்பு ஊத்தி ஒரு வெட்டி வெட்டிக்கொண்டிருந்தார்.கடைசியில் ரசம் , தயிர் என முடித்து விட்டு திருப்தியாய் வெளியே வந்தோம்.
இதெல்லாம் சேர்த்து விலை 355 ஆனது.விலை குறைவு தான்.இந்த காஸ்ட்லி R.S.புரம் ஏரியாவில் இந்த ஹோட்டல்தான் விலை குறைவு.கொஞ்ச தூரம் தள்ளி சென்றால் KFC சிக்கன் இருக்கிறது. அந்தப்பக்கம் சென்றால் அன்னபூர்ணா இருக்கிறது.இரண்டும் விலை அதிகம்.அதுவுமில்லாமல் வீட்டு முறைப்படி செய்து தருவதால் மிக நன்றாக இருக்கிறது.
டிபி ரோட்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எதிரில் இந்த ஹோட்டல் அமைந்து இருக்கிறது.ஒரு சின்ன சந்து மாதிரி தான் செல்லும்.ஆனால் உள்ளே விசாலமான இடத்தில் அமைந்து இருக்கிறது.தகர சீட் போட்டு இருப்பதால் மதியம் சென்றால் வேர்க்க விறுவிறுக்க   சாப்பிடலாம்.அது  இரு சுகமான அனுபவத்தினை தரும்.
அப்புறம் இங்க முடித்து விட்டு சிக்னல் தாண்டி இருக்கிற பெட்ரோல் பங்க் அருகில் குல்பி ஐஸ் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

12 comments:

 1. உங்க விமர்சனமே சாப்ட மாதிரி ஆகிருச்சு

  ReplyDelete
 2. எங்களுக்கு பிரியாணியே பிடிக்காது அதனால சொல்ல வார்த்தை ஏதும் உணத்தியா இல்லை

  ReplyDelete
  Replies
  1. ஹா.ஹா...நம்பிட்டேன்....பிரியாணி பிடிக்காது அப்படிங்கிறத...

   Delete
 3. எலும்பில்லாம சாப்பிட்டா சாப்பிட்ட மாதிரியே இருக்காது..

  வஞ்சிரம் மீன்... யப்ப்ப்ப்பா...!

  ReplyDelete
  Replies
  1. ஆமா...தனபாலன் சார்...நல்லி எலும்பை கடிச்சி உறியற டேஸ்ட் இருக்கே....யப்ப்ப்பா..

   Delete
 4. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோவைக்கு முதல் இடம் தருவேன் உணவின் ருசிக்கு.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா...சிறுவாணி தண்ணி டேஸ்ட் தான்...

   Delete
 5. ஆகா.. சூப்பர் மச்சி.. எப்போ போலாம் மச்சி?

  ReplyDelete
  Replies
  1. பில் தர நீ ரெடின்னா நான் இப்பவே ரெடி...மச்சி...

   Delete
 6. வாயில தண்ணியா கொட்டுது எனக்கு...பாவிகளா அண்ணனை விட்டுட்டு ஒத்தைக்கு போயி புல் கட்டா கட்டிட்டீங்களே...

  ReplyDelete
  Replies
  1. அண்ணே..அரிவாளை அவசரப்பட்டு தூக்கிடாதீங்க...கண்டிப்பா போலாம்.ஒரு நாள்///

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....