கொஞ்ச நாள் முன்னாடி ராசி புரம் வழியா ஆத்தூர் செல்லும் போது மெட்டாலா என்கிற இடத்தில் போற வர்ற நிறைய வண்டிகள் நின்று சாமி கும்பிட்டுவிட்டு போனதை பார்த்து விட்டு நானும் அப்படியே வண்டியை ஓரம் கட்டினேன்.அவ்வப்போது வந்து நிற்கும் எதாவது ஒரு காரிலோ வேனிலோ அம்மணிகள் இறங்கி தரிசனம் செய்வது வாடிக்கையாக இருக்கிறது.இந்த ரோடு ஆத்தூர் கள்ளக்குறிச்சி சென்னை செல்லும் வழியாதலால் அதிகம் வண்டிகள் செல்கின்றன.இரு புறங்களிலும் பசுமையான புளியமரங்களை காணலாம்.சரி கோவிலுக்கு வருவோம்.இந்த மெட்டாலா கணுவாய் பசுமையான மலை சூழ்ந்த இடம்.இயற்கை அன்னை வாரி இறைத்து இருக்கிறாள் பசுமையை.கண்ணுக்கெட்டின தூரம் மலைதான்.அதிகாலை வேளையில் மிக ரம்யமாக இருக்கிறது.
மலை சூழ்ந்த இந்த இடத்தில் ஒரு ஆஞ்ச நேயர் கோவில்.உருண்டைப் பாறைக் கல்லைப் பிரதானமாக வைத்து மகா மண்டபம் கட்டி இருக்கின்றனர்.அந்த பாறையில் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர், இரண்டடி உயரத்தில், நின்ற நிலையில், சாந்த வடிவத்தில் திருக்காட்சி அளிக்கிறார்.ஆஞ்சனேயரை சுற்றி செப்பு பட்டையங்கள் கொண்டு ஜோடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கோவிலை அடுத்து சிவன், விநாயகர், நவக்கிரகங்கள் சன்னதி இருக்கிறது.ஆஞ்சனேயரின் பலதரப்பட்ட வடிவங்கள் கொண்ட சிறு சிலைகள் இருக்கின்றன.இந்த ஸ்தலத்தில் புளியமரமே தல விருட்சமாக இருக்கிறது போல.மேலும் கோவிலின் பின்புறத்தில் சிறு வடிவில் உள்ள ஆஞ்சனேயர் சிலைகளுக்கு எதிரில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சோட்டானிக்கரை பகவதி அம்மன், கொல்லூர் மூகாம்பிகை அம்மன், திருக்கடையூர் அபிராமி, காசி விசாலாட்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், சரஸ்வதி பராசக்தி, லட்சுமி, புவனேஸ்வரி போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
தமிழகத்திலேயே தீமிதியுடன் திருவிழா நடைபெறும் ஒரே ஆஞ்சநேயர் திருக்கோயில்
இதுதான் என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும்
இத்திருவிழாவில், கடைசி ஞாயிறு அன்று பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்.
இந்த கோவில் வரலாறு என்னவெனில் மெட்டாலா கணவாயில் எனும் இந்த இடம் ஒரு காலத்தில் கொடிய வனவிலங்குகள்
உலவும் வனமாக இருந்தது. இப்பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டவுடன் அழகான
திருத்தலமாக மாறிவிட்டது. கோரைப் புற்களிடையே ஓடியதால் கோரையாறு என்ற
பெயருடன், காவிரி, திருக்கோயிலுக்கு எதிரே ஓடிக் கொண்டிருக்கிறது.
கன்னிமார் ஊற்று என்ற சிறு சுனை அருவியும் உண்டு.
நாமக்கல் குடவரைக் கோயில்களைக் கட்டிய அதியன் குணசீலன் என்ற, எட்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் உருவாக்கிய கோயில் இது. அப்போது காவல்
தெய்வமாக இந்த அனுமன் சிலை செதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த கோவிலில் நம் முன்னோர்கள் வாசம் செய்கிறார்கள்.அனுமனின் ஆதரவாளர்களான இக்குரங்குகள் யாரையும் துன்புறுத்துவதில்லை.இங்கே வசிக்கும் குரங்களுக்கு உணவு கொடுப்பதற்காகவே பழம் பொரி கொண்ட கடைகள் இருக்கின்றன.இந்த கோவிலை ஒட்டி நந்த வனம் ஒன்று இருக்கிறது.ஒரு சில பூச்செடிகளைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை,
நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதூர்யம் முதலியவை கிட்டும். ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் ஆனந்தாயா மலையடி வாரத்தின் பாதையோரமாக மெட்டாலா கணவாயில் எனும் இத்தலம் அமைந்துள்ளது.
அந்தப்பக்கமாக போகும் போது கண்டிப்பாக ஒரு வருகையை உறுதி செய்துவிட்டுப்போங்கள்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இதுவரை சென்றதாக ஞாபகம் இல்லை... கோவிலின் சிறப்புகளுக்கு நன்றி...
ReplyDeleteதகவல்கள் அருமை... படங்களும்....
ReplyDeleteநன்றி...ஸ்கூல் பையன்...
Deleteஇனி போய்ட்டு வாங்க சார்...வருகைக்கு நன்றி
ReplyDeleteTher in anjaneyar koil? Amazing information jeeva. Photos are nice. Oru murai poganum nnu thonifuchu.
ReplyDeleteசார்...அது ஆஞ்சநேயர் கோவில்தான்...அந்தப்பக்கம் போனிங்கன்னா இறங்கி சாமி கும்பிட்டுவிட்டு போங்க..
Deleteநான் அங்கு சென்றேன்.அழகான இடம்
ReplyDeleteவாங்க..நீங்க யாருன்னே தெரியல...நன்றி...
Deleteரோடு இம்புட்டு சுத்தமா இருக்கு நம்ம ஊரா இது ஆச்சர்யமா இருக்கே...!
ReplyDeleteஅதேதான் நானும் நினைத்தேன்.. :))
Deleteநம்ம ஊருதான்...சுத்தமா இருந்தா நமக்கே பிடிக்க மாட்டேன்குது அப்படிதானே....
Deleteஅழகான ஒரு தலம் பற்றிய அழகான பதிவு! நன்றி!
ReplyDeleteநன்றி...
Deleteஆஞ்சிநேயர் கோவிலா?! ஓக்கே! ஓக்கே! குலதெய்வம் கோவிலுக்கு போய் வந்தேன்னு சொல்லுங்க.
ReplyDeleteரொம்ப நாள் கழித்து வருகை புரிந்திருக்கும் ராஜி அவர்களை வரவேற்கிறேன்
Deleteஅன்புடையீர்.வணக்கம்.
ReplyDeleteமுன்பெல்லாம் அடிக்கடி தங்களது பதிவுகளை எனது மெயிலுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தீர்கள்.
ஆனால் தற்போது அவ்வாறு அனுப்பித் தருவது இல்லையே.ஏன் எனத் அறிந்துகொள்ளலாமா?
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
shameempimsgmail.com