ஒரு மதிய வேளை, காந்திபுரம் 100 அடி ரோட்டுல வந்துட்டு இருக்கும் போது கிராஸ்கட்ல ஒரு வேலை இருப்பதால் அதை பார்த்துட்டு போவோம்னுட்டு கமலா ஸ்டோர்ஸ் எதிர்த்தாப்புல நம்ம வெண் சிங்கத்தினை (வார்த்தை உபயம் கோவை ஆவி ) பார்க் பண்ணினேன்.வண்டியை நிறுத்திவிட்டு இறங்கையில் செமையான மீன் வாசம்..அதுவும் பொறிச்ச மீன் வாசம்.ஆளையே தூக்குது வேற.பார்த்தா எதிர்த்தாப்புல மீன் கடை..ஏற்கனவே இருந்த கடையை கொஞ்சம் புதுசா ஆல்டர் / இண்டீரியர்லாம் பண்ணி மறுபடியும் ஆரம்பிச்சிருக்காங்க.கடை பேரைப்பார்த்தா.... கொஞ்சம் பெருசாவே இருக்கு..ஞான செளந்தரியின் டயானா தூத்துக்குடி மீன் ஸ்டால்.
கடையைப் பார்த்தவுடன் வாசம் நோக்கி கால்கள் முன்னேற, நம்மளைப் கண்டவுடன் கடைக்காரர் சலாம் போட.. பதில் வணக்கம் சொல்லிவிட்டு நம்ம வேலையை பார்க்க ஆரம்பித்தேன்..நம்ம வேலைன்னா...அதான்...போட்டோ எடுக்கறது.....நான் போட்டோ எடுக்கறதைப்பார்த்தவுடன் என்ன சார் ஃபேஸ்புக்ல போட போறீங்களா அப்படின்னு கேட்டவரை வியப்புடன் பார்த்தவாறே இருக்க...அப்போது தான் உள்ளிருந்து வகைவகையாய் ஒவ்வொரு மீனாக மேக்கப் போட்டு வாடிக்கையாளர் வரவுக்காக வெளியில் வந்து காத்துக்கொண்டிருக்க ஆரம்பித்தன.அவைகளை வரிசைகட்டி போட்டோ எடுத்துக்கொண்டே அவரிடம் மிச்ச மீதி மீன் விவரங்களை கேட்டேன்.
பொறுமையாய் பதில் சொன்னவரிடம் இரண்டு வகையான மீன்களை பொறிக்கச் சொல்லிவிட்டு எனக்கான இடத்தினில் அமர்ந்து கொண்டேன்.கொதிக்கின்ற எண்ணையில் மீன் நன்றாக வெந்தவுடன் எனது டேபிளுக்கு வாசத்துடன் வந்தது.
எடுத்து சாப்பிடுகையில் நல்ல சுவை.பொறுமையாய் ஆற அமர மீனினை முடித்துவிட்டு வெறும் முள்ளை மட்டும் விட்டுவிட்டு அடுத்து பிரியாணி டேஸ்ட் பார்க்கலாம் என்றெண்ணி பிளைன் பிரியாணி சொன்னேன்.அது வந்தவுடன் சாப்பிட்டுப்பார்க்கையில் அதுவும் நன்றாக இருக்கிறது.அந்த பிளைன் பிரியாணியிலும் ஒளிந்து கொண்டு கடைக்காரரின் கண்ணில் தட்டுப்படாமல் வந்த இரண்டு இறால் மீன்கள் மிக மிக சுவையாக இருந்தன.இந்த பிரியாணியின் டேஸ்டும் நன்றாக இருக்கிறது.
மொத்தத்தில் பொரிச்ச மீன் இரண்டும் சூப்பர்.இன்னும் நிறைய வகைகள் இருக்கு.ஒவ்வொண்ணா இனி டேஸ்ட் பண்ண போகணும்.மேலும் டிஃபன் அயிட்டங்களும் கிடைக்கின்றன.இட்லி, ஆப்பம் மீன்குழம்பு இங்கு காம்பினேசனாக இருக்கிறது. அனைத்து வகையான கடல் மீன்களும் இருக்கின்றன.விலை 40 முதல் 120 வரை இருக்கின்றன.அப்புறம் இறால்,சிக்கன் பிரியாணி கிடைக்கிறது.முக்கியமாய் நண்டு சூப் கிடைக்கும்.
விலை கோவைக்கே உண்டான முறையில் இருக்கிறது.மீன் துண்டுகளுக்கு தகுந்த மாதிரி விலை ஏற்றமும் இறக்கமுமாக இருக்கிறது.
அந்தப்பக்கம் போனால் சாப்பிட்டுப்பார்க்கலாம்.அதுமட்டுமல்லாது ஃபிரஷ் மீன்கள் காலையில் கிடைக்கும்.நம்ம பங்காளிகளுக்கு ஏத்த கடை வேறு.கார சாரமாக இருக்கிறது.அருகிலேயே நம்ம கடை வேற...சொல்லவா வேணும்...
இதே ரோட்டிலேயே இரண்டு வீதி தள்ளி ஜோஸ் மீன் கடை இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
கடை பெயர் டயனாவா!
ReplyDeleteஎன் பதின் பருவத்தில் ‘சார்லஸ்-டயானா’ காதலை உலகமே ஒரு பொறாமையுடன் உற்று பார்த்தது.
‘பாப்பரஸி’ என்றழைக்கப்படும் ‘மீடியா ரவுடிகள்’ டயானாவை மரணம் வரை துரத்தியது நினைவுக்கு வந்து விட்டது.
ஆம்.. சோகமான நிகழ்வு அது..
DeleteSUPER
ReplyDeleteகடைக்காரருக்கு நல்ல ரசனை போல... கடை பெயரே நல்லாயிருக்கு... இறால் மீன்கள் விண்ணைத் தொடும் விலையாச்சே...! தட்டுப்படாமல் இருந்த 2 இறால் மீன்கள் மிகவும் சுவையாகத்தான் இருக்கும்...! ஹிஹி...
ReplyDeleteபார்க்கும்போது சாப்பிடத் தூண்டுகிறது.
ReplyDeleteபுரட்டாசி மாசம் அதுவுமா ஏன் இப்படி போஸ்ட் போட்டு கொல்லுறே ஜீவா!?
ReplyDeleteபுரட்டிய ஆசி, புரட்டாத ஆசி ! சாப்பிட்டு போறாரு விடுங்க
Deleteமீனெல்லாம் எங்க ஊர்ப்பக்கம் இருந்துதான் வருதா?
ReplyDeleteஆமாங்க இதே போலதான் அங்க இருந்து தான் வருகிறதான்னு எனக்கு டவுட், திருநெல்வேலி அல்வா, மைசூர் போண்டா, ஊத்துகுளி வெண்ணெய், காஷ்மீர் ஆப்பிள், ஊட்டி ரோஸ்...இன்னும்.
Deleteநீங்கள், நல்ல!!!!!!! இரசிகர்! படங்களை சொன்னேன்!
ReplyDeleteஅடடா ... அடுத்த வாட்டி போயிட வேண்டியதுதான் ...! லாஸ்ட் டைம் சுப்பு மெஸ் ல சாப்புட்டோம். உள்ளங்கை அளவு மீனுக்கு 120 ஓவா புடுங்கிட்டாங்க ....!
ReplyDeleteபொதுவா ஹோட்டல்களில் சாப்பிட்டாதான் வயித்த கலக்கும்னு சொல்லுவாங்க .... கோயமுத்தூர் ஹோட்டல்கள்ல பில்ல பார்த்தாவே வயித்த கலக்குது ....!
கொஞ்சம் தூர இருந்து ரசித்தேன்! ஹி! ஹி! நன்றி!
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteதமிழ்மொழி.வலை
http://www.thamizhmozhi.net
நடிகர்கள்: ‘கோவை நேரம்’ ஜீவா, +++
ReplyDeletevisit : http://worldcinemafan.blogspot.in/2013/10/blog-post.html