Tuesday, October 8, 2013

கரம் - 11

இந்த மாத அந்திமழை இதழின் இளைஞர் சிறப்பிதழில் நம்ம வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.கூடவே நண்பர் பிலாசபியும்.மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நம்மளையும் வாட்ச் பண்றாங்கப்பா என்பதில்..நம்மை அறிமுகப்படுத்திய அந்திமழை இதழ் நிருபர் அசோகன் அவர்களுக்கு நன்றி...

***********************

எலைட் பார் வருமா வராதா அப்படின்னு ஒவ்வொரு ஊரிலயும் எல்லாரும் ஏங்கிகிட்டு இருக்க சத்தமில்லாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் திறந்து இருக்காங்க.போய் பார்த்தா வெளிநாட்டு  மது இனங்கள் நிறையவே குவிந்து இருக்கின்றன.பார்க்கவே ஆஃப் அடித்த மாதிரி இருக்கிறது.கடையப் பார்த்தவுடன் கை அரிக்க ஆரம்பிக்கின்றது.ம்ம்ம்.....என்ன பண்றது.வந்ததுக்கு ஒண்ணு வாங்கிட்டு தான் போனேன். எலைட் பார் எங்க ஊருக்கெல்லாம் எப்ப வருமோ....ஏக்கத்துடன் 

******************

தமிழக முதல்வர் அம்மா குடிநீரை ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க செம தட்டுப்பாடு இந்த பாட்டிலுக்கு.சீக்கிரம் தீர்ந்து போயிருதாம்.தண்ணீர் நல்ல டேஸ்டாக இருக்கிறது.விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்.பாட்டில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.பாட்டிலில் இந்தப்பக்கம் அம்மா என்று தமிழிலும் அந்தப்பக்கம் அம்மா என்று ஆங்கிலத்திலும் என்கிரேவ் செய்யப்பட்டிருக்கிறது.பாட்டில் வடிவம் சூப்பர்.முதல்வருக்கு பிடிச்ச பச்சைக்கலரிலதான் மூடியும் ரேப்பரும் இருக்கு...தண்ணி யும் பச்சைத்தண்ணிதான்...(கலர் மிக்ஸ் பண்ணல...)


*********************

கோவையில ஒரு சுவத்துல இருந்த போஸ்டர் பார்த்தவுடன் பகீர்னு ஆயிடுச்சி.கொசு பெருகிப்போனதுக்கு வாழ்த்து போஸ்டர் அடிச்சிருக்காங்கப்பா.இப்படி ஒட்டியதை பார்த்தாவது கொசுவை ஒழிக்க மாட்டாங்களா அப்படின்னு ஒரு ஏக்கம்தான் போல..இந்த போஸ்டர் அடிச்சு ஒட்டின காசுக்கு பேசாம நிறைய  கொசுமருந்து வாங்கி கொடுத்து இருக்கலாம்.

***********************
பார்த்த படங்கள்:
சமீபத்துல வெளியான நான்கு படங்கள் பார்த்தேன்.
முதல் படம் 6 மெழுகுவர்த்திகள்.ஷாம் ரொம்ப மெனக்கெட்டு நடிச்ச படம்.எனக்கென்னவோ இந்த படம் பிடிக்கல.6 மெழுகுவர்த்திகள் எரிவதற்கு பதில் அணைந்து விட்டது.

இரண்டாவது படம். யாயா...அய்யோ செம மொக்கை படம்.ஏண்டா தியேட்டருக்கு போனோம்னு ஆச்சு..நல்லவேளை பாதி படத்துக்கு மேல தூங்கிட்டேன்.
அடுத்து மலையாளம் 24 நார்த் காதம்.பகத்ஃபாசில் நடித்த படம்.ரொம்ப பிடிச்சிருந்தது.நல்லா நடிச்சிருக்காப்ல.மேக்கப் இல்லாத ஸ்வாதி சோ க்யூட்.மறுபடி பார்க்கத்தூண்டுகிற படம்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் : மிஷ்கின் மிரட்டி இருந்த படம்.இளையராஜாவின் செமையான இசையில் படம் நன்றாக இருக்கிறது.ஆனால் இந்த படம் அந்தளவுக்கு ரீச் ஆகவில்லை.நாமக்கல்லில் மொத்தம் 13 பேர் மட்டுமே பார்த்தோம்.இதில் தியேட்டர் ஊழியர்களும் அடக்கம்.

விபத்து :
திண்டுக்கல் அருகே மதுரை பைபாஸில் ராமேஸ்வரம் சென்று திரும்பி வந்துகிட்டு இருந்த ஒரு டூரிஸ்ட் வேன் மீது லாரி மோதியதில் வேன் இரண்டாக பிளந்தது.இதில் பயணம் செய்த 20 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி ஆகிவிட்டனர்.மற்றவர்கள் ஆஸ்பத்திரியில்.சம்பவம் நடந்து 4மணி நேரம் கழித்து அப்போது தான் நான் அந்த இடத்தினை கடக்கிறேன்.இடத்தினைப்பார்க்கையில் ஒரே களேபரம்.உணவுகள், பாக்கு மட்டைத்தட்டுகள், உடைகள், என எல்லாம் சிதறி கிடந்தன.ரோட்டில் இருந்து 20 அடி தூரத்தில் வேன் கிடக்கிறது.யார் மேல் தவறு என்று தெரியவில்லை.விபத்து ஏற்படாமல் இருக்க கவனமாக ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்று சொல்லத்தோன்றுகிறது.நேசங்களுடன்
ஜீவானந்தம்


18 comments:

 1. அந்திமழை இதழில் வலைத்தளம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

  விபத்து : எல்லாம் அவசரம் தான்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க முதல்வனே...
   உங்க ஊரில அதிகம் கொலை நடக்குதே...நான் இருந்த ஒரு வாரம் 5 பேர் மர்டர்....அதில்லாமல் சாலைவிபத்துல நிறைய பேரு...
   வத்தலகுண்டு அருகே ஒரு விபத்து..வேன் அடியில் பைக், பைக் அடியில் வாலிபர்.ரத்தம் ஓடுகிறது ரோட்டில்...அதைப்பார்த்தவுடன் எனக்கு போட்டோ எடுக்கவே மனசில்லை...120 இல் அந்த ரோட்டில் திண்டுக்கல் திரும்பிகொண்டிருந்தவன் இந்த விபத்தை பார்த்தவுடன் 70 க்கு குறைந்து விட்டது.அன்று முழுவதும் அதே காட்சி...

   Delete
 2. அந்திமழை இதழில் வந்தமைக்கு வாழ்த்துகள்
  >>
  தண்ணில கலர் மிக்ஸ் பண்ணாட்டாலும் அது பச்சை தண்ணிதானே ஜீவா!?
  >>
  எத்தனை கனவுகள், மகிழ்ச்சியை சுமந்து சென்ற சுற்றுலா வண்டி இப்படி கிடக்குது!? இந்த விபத்துக்கு விபத்து வந்து போய் சேர்ந்தா மனுசங்க நல்லா இருப்பாங்க.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி...
   எங்களை விட உங்களுக்கு தான் அதிகம் தெரியுது..
   விபத்து ரொம்ப பயப்படுத்துது...

   Delete
 3. அப்போ இனிமே அடிக்கடி திண்டுக்கல் விஜயமா ப்ரோ

  ReplyDelete
  Replies
  1. அட...ஏன் நீங்க வேற...அங்கதான் ஒரு மாசமா இருக்கேன்,,,

   Delete
 4. 'அந்தி மழை’ பொழிந்தது...
  ஒவ்வொரு துளியிலும் உங்கள் முகம் தெரிந்தது.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பாட்டாவே பாடிடீங்களா...நன்றி.....

   Delete
 5. இப்பதானே தெரியுது ,எலைட் ஏக்கத்தில் ஜோக்காளி வலைப் பூவிற்கு நீங்க வந்த காரணம் !
  ரம்மும் ,கொசுவும் உங்கள் பதிவிலும் இருப்பது கண்டு அதிசயித்தேன் !
  அந்தி மழையில் நனைந்ததற்க்கு பாராட்டுக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தண்ணி எங்க இருந்தாலும் வந்துடுவேன்...ஹிஹிஹி

   Delete
 6. வாழ்த்துக்கள் ஜீவா...... அந்திமழை இதழில் கோவை நேரம் !! இன்றைய கரம் எல்லாமும் இருந்து சுவையாக இருந்தது !

  ReplyDelete
 7. விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எம் நோக்கம் கொசுக்களை கொல்வதல்ல... பெரிசா பேனர் வைங்கப்பா

  ReplyDelete
 8. அந்திமழை ...வாழ்த்துகள்

  ReplyDelete
 9. அந்தி மழையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்! வேகமும் பாதுகாப்பில்லாத பயணங்களும்தான் விபத்துக்களுக்கு காரணம்! நல்லதொரு பகிர்வு!

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....