Thursday, October 10, 2013

கோவை மெஸ் - மண்பானை உணவகம், சாலைப்புதூர், வத்தலகுண்டு

ஒரு மத்தியான வேளை திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் போயிட்டு இருக்கும் போது பசி எடுக்கவே நம்ம நண்பரிடம் கேட்க அவர் கொஞ்சம் வெயிட் பண்ணு, ஒரு நல்ல ஹோட்டலைக் காட்டறேன் என்று சொல்லியபடியே வத்தலகுண்டு ரோட்டில் சாலைப்புதூர் என்கிற ஊர் வந்தவுடன் நம்ம சிங்கத்தினை ஓரம் கட்ட சொல்ல இறங்கின இடம் மண்பானை சமையல் ஹோட்டல்.அந்த ஊரில் இன்னும் சில ஹோட்டல்கள் இருந்தாலும் இங்குதான் நன்றாக இருக்கும் என்று அழைத்துச் சென்றார்.அண்ணாத்துரை என்பவர் தான் முதலில் இந்த வகை சமையலை ஆரம்பித்து இருக்கிறார்.வியாபாரம் பிச்சிக்கவே அந்த ஏரியாவில் நிறைய மண்பானை சமையல் செய்து தரும் ஹோட்டல்கள் முளைத்து விட்டிருக்கின்றன.ஆனால் சுவை இங்குதான் நன்றாக இருக்கும் என்று கேட்டபடியே உள் நுழைந்தோம்.

சிறு குடிசை போல் தான் இருக்கிறது.ஆனால் ஆஸ்பெஸ்டால் சீட் போட்டு இருக்கிறார்கள்.இடது புறம் சமையல் கட்டில் விறகு அடுப்பில் ஒரு மண்பானையில் சாதமோ குழம்போ வெந்து கொண்டிருந்தது.எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் கிராமத்து பாணியில் இருக்கிறது ஹோட்டல்.


அமர்ந்தவுடன் இலை போட்டு தண்ணீர் தெளித்துவிட்டு என்ன இருக்குண்ணே...என்று கேட்க, சாதம், மட்டன் குழம்பு, சிக்கன் வருவல், முட்டை என சொல்ல, ( ரொம்ப நேரம் ஆனதால் ஆட்டோட மத்த பார்ட்ஸ் எல்லாம் தீர்ந்துவிட்டதாம்..)
சரி சாப்பாடு மற்றும் சிக்கன் வகையறாக்கள் சொல்ல உடனே மண்பானையில் இருந்து சூடாக சாதம் எடுத்து வந்து இலையில் கொட்டினர்.அதே மாதிரி குழம்பும்...எப்பவும் போல பொரியல் அப்பளம்.
நன்றாக இருக்கிறது.அளவாய் உப்பும் காரமும் இருக்கிறது.சாதம் பொலபொலவென்று நன்றாக இருக்கிறது.
சிக்கன் மற்றும் மட்டன் சுக்கா நன்றாக இருக்கிறது.அளவு குறைவுதான்.அதனால் தான் விலையும் குறைவாக இருக்கிறது.
குழி கரண்டி ஆம்லெட் கேட்க அதுவும் சூடாக வந்தது.நன்றாக இருக்கிறது அனைத்தும்.
இந்த ஹோட்டலில் வெளி ஆட்கள் யாரும் வேலை செய்வதில்லை..குடும்ப உறுப்பினர்களே வேலை செய்து வருகின்றனர்.
சுற்றுலா செல்லும் பயணிகளின் வருகை அதிகமாக இருக்குமாம் சனி ஞாயிறு அன்று.ரோட்டின் இரு பக்கமும் கார்களின் வரிசை அணிவகுக்குமாம்.
விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.அதே போல் சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.இந்த ஊரில இன்னும் சில ஹோட்டல்கள் இருப்பதால் செம காம்பெடிசனாம்.அதனால போட்டி போட்டுக்கொண்டு விலை குறைவாக அதே சமயம் ருசியாகவும் தருகிறார்கள்.கொடைக்கானல் செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் இந்த ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்களாம்.அந்தப்பக்கம் போனால் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.
திண்டுக்கல் டூ கொடைக்கானல் ரோட்டில் வத்தலகுண்டு அருகே இருக்கிறது சாலைப்புதூர்.சாப்பிட்ட பில் எவ்ளோன்னு தெரியல.சத்தியமா நான் கொடுக்கல.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


31 comments:

 1. மண்பானை சமையல் என்று சொன்னதுமே
  உமிழ்நீர் ஊறுகிறது..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா..அப்படியா...வாங்க போயிடுவோம்...

   Delete
 2. நான் கிராமத்துல இருந்த வரை மண் பானை சமையல்தான் சாப்பிட்டேன்.
  மண் பானையில் இருக்கும் ‘பழைய சோறும்’ ‘பழைய மீன் குழம்பும்’ ...ஆஹா...எழுதும் போதே எச்சி ஊருதே!

  ReplyDelete
  Replies
  1. அட...மலரும் நினைவுகள்...
   நானும் இப்போ சிக்கன் வறுவல் மண் சட்டியிலும் விறகு அடுப்பிலும் சமைத்துகொண்டிருக்கிறேன் ஏதோவொரு ஞாயிறு அன்று..

   Delete
 3. மண்பானை உணவகமா? கேட்டவுடனே கண்கள் வியந்து நாவூறிவிட்டது, நிச்சயம் இங்கு சாப்பிடுவதற்காகவே வத்தலகுன்று போய்விட வேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பரே....கண்டிப்பா போங்க...

   Delete
 4. ம்... அந்த சுவையே தனி தான்...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி.த...
   நீங்க போயிருக்கணுமே...

   Delete
 5. வத்தலகுண்டு நம்ம ஊரு. ஆனால்நாங்க இருந்த காலத்தில் கூட சாலைப்புதூர் என்ற ஊரைக் கேள்விப்பட்டதில்லை:(

  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி மேடம்...இப்போ பைப்பாஸ் போட்டு இருக்காங்க.ஒருவேளை அதுல புதுசா ஆரம்பிச்சு இருப்பாங்களோ என்னவோ,,,,

   Delete
  2. புதுசா (சாலையில்) வந்த புதிய ஊர் = சாலைப்புதூர்

   ஆஹா....நீங்க சொன்னபடிதான் போல!

   நன்றீஸ்.

   Delete
 6. அருமையான தகவல் ஜீவா.... அடுத்த முறை திண்டுக்கல் போகும்போது போகணும், இது மாதிரி வித்யாசமான சமையல் முறையில் இருந்தால் இன்னும் சொல்லுங்க !

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாஸ்...உங்களை விடவா...? கலக்கறீங்க நீங்க..

   Delete
 7. மசால வாசம் இங்கே வரை வருது

  ReplyDelete
  Replies
  1. அவ்ளோ தூரம் வருதா...பரவாயில்லையே.....

   Delete
 8. மண்பானை உணவு செம டேஸ்டா இருக்கும். எங்க வீட்டுல சிக்கன் குழம்பு மண் சட்டிலதான் வைப்பாங்க ஜீவா!. முதல் நாள் மீந்துபோன குழம்பு, ரசம், காய்லாம் மண்சட்டில போட்டு சுட வச்சி மறுநாள் மதியம் சாதத்துல போட்டு சாப்பிட்டா. எந்த ஸ்டார் ஹோட்டல் சாப்பாடும் கிட்டக்க நிக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிக்கா...மண்பானை சமையல் டேஸ்டே வேற...இப்போ நாம அதை இழந்துட்டு நிக்கிறோம்..

   Delete
 9. சின்ன வயதில் பாட்டி வீட்டில் மண்பாண்டத்தில் சமைத்து சாப்பிட்டது உண்டு! அதன் சுவையே தனிதான்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ்...அதன் சுவை எப்பவும் தனிதான்...

   Delete
 10. Replies
  1. அட..அப்போ அடிக்கடி போவிங்களா...

   Delete
 11. இந்தியாவில் இருந்து நாலு மண்சட்டிகள் கொண்டு வந்தேன். சென்னையில் வாங்கியது நல்லா இருக்கு.(டச் வுட்) சண்டிகரில் வாங்கியது
  விரிசல்:( அதுக்காகக் கடாச முடியுதா? பூச்செடிகளை அதில் வச்சுருக்கேன்:-)

  ReplyDelete
  Replies
  1. சமைக்க இங்கிருந்து கொண்டு போனீங்களா...? பரவாயில்லையே...

   Delete
 12. கடையின் தொடர்பு எண் கொடுத்தால் நலம்

  ReplyDelete
  Replies
  1. கடை நம்பர் அந்த போர்டிலேயே இருக்கு நண்பரே...
   அட்வான்ஸ் புக்கிங்லாம் இல்லை நண்பரே...

   Delete
 13. This is too much boss! I am very angry and hungry now!!!

  Venkat

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட்...ஒரு நாள் நாம சேர்ந்து போவோம்...

   Delete
 14. நல்ல பகிர்வு..

  ReplyDelete
 15. ஈரோடு டு மொடக்குறிச்சி ரோட்டில் முத்துகவுண்டம் பாளையத்திில் ஒரு மண்பானை உணவகம் உள்ளது நாட்டு கோழி கறி பச்ச ரசம் பாயாசம் அருமையோ அருமை வந்து சாப்பிட்டு பாருங்க....

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....