ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம்
பரபரப்பான கோவையின் கலெக்டர் ஆபிஸ் ரோடு...அலைந்து திரிந்ததினால் என்னவோ
பயங்கரமா பசி எடுக்கவே, பக்கத்துல இருக்கிற சி.எஸ் மீல்ஸ் பார்த்தேன்.ஆஹா...இது
சைவமாச்சே....நமக்கு கட்டுப்படியாகாதே அப்படின்னு நினைச்சபோதுதான் திடீர்
ஃபிளாஷ்......அந்த ஹோட்டல் பக்கத்துல இருக்கிற சந்துல ஒரு நான்வெஜ் ஹோட்டல் இருக்கு
ரொம்ப நல்லா இருக்கும்னு எப்பவோ எங்கேயோ கேட்ட ஞாபகம்.அந்த சந்துக்குள்ள போனா
எல்லா சுவத்திலயும் சினிமா பட போஸ்டரா ஒட்டி இருக்கு.எம்ஜியார் முதல் இன்றைய
சிவகார்த்தியேன் வரைக்கும் போஸ்டரில் இருக்காங்க.அப்புறம் தான் தெரிஞ்சது இந்த
ஏரியா சினிமா விநியோகதஸ்கர்கள் இருக்கிற ஏரியா கோபாலபுரம் ஆச்சே.....என்று.சினிமா
ஏரியா மட்டுமல்ல, கோர்ட் அருகில் இருப்பதால் என்னவோ அந்த தெரு முழுக்க ஏகப்பட்ட
ஜெராக்ஸ் கடைகள், வக்கீல் ஆபீஸ்கள்.பார்த்துக்கிட்டே வந்ததில் பல போர்டுகளின்
நடுவே ஹோட்டல் போர்டு கண்ணுக்கு புலப்பட்டது.
பார்த்தவுடன் சந்தோசமாய் வயிறு சிரித்தது.ஹோட்டல் மாடி மீது முதல் புளோரில் இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் 41 வது ஆண்டுகள் என போர்டு தெரிந்ததும் ரொம்ப ஆச்சரியத்துடன் இவ்ளோ வருசமா எனக் கேட்டுக்கொண்டே
எங்களுக்கான இடத்தினில் அமர்ந்து கொண்டோம்.
தலைவாழை இலை போட்டு தண்ணீர் தெளிச்சவுடன் என்ன இருக்கு என்று கேட்டவுடன்,
இருங்க வாரேன் அப்படின்னு வேக வேகமா உள்ளே ஓடிப்போனார் சர்வர்...என்னடா எதுவுமோ சொல்லாம
போறாரே அப்படின்னு நினைச்சு முடிக்கங்குள்ள மனுசன் ஒரு தட்டோட வந்தார்..டிஸ்பிளே
தட்டாம்..அதுல எல்லா வெரைட்டியும் இருக்கு.மட்டன் சுக்கா, மீன் வறுவல், மீன்
குழம்பு,வஞ்சிரம், காடை வறுவல், சிக்கன் சாப்ஸ், மட்டன் சாப்ஸ் இப்படி நிறைய..கூட ஒரு
வார்த்தையும் சொன்னார்...இப்போ புரட்டாசி மாசம் அதனால இந்த தட்டு சைஸ் சின்னதா
இருக்கு இல்லேனா இன்னும் பெருசா இருக்கும்னு சொல்லி எங்களோட வாயில் உமிழ்நீரை சுரக்க
வச்சார்.
அயிட்டங்களைப்பார்த்ததும் அதிகமாகி போன பசி உணர்வுகளை கட்டுப்படுத்த உடனடியாக
மட்டன் சுக்கா, பெப்பர் சிக்கன், மீன் இதல்லாம் கொண்டு வரச்சொன்னோம்.
சாப்பாடு போட்டுவிட்டு எல்லாவகை குழம்பினையும் கொடுத்தாரு
சாம்பாரைத்தவிர.எல்லாம் செம டேஸ்ட்.கொஞ்ச கொஞ்சமாய் ஊத்தி
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே மட்டன் சுக்கா வருவல் மணத்தோட வருது.சின்ன சின்ன
பீஸா நல்லா வெந்து செம டேஸ்ட்.அப்படியே வீட்டுல செய்யுற மாதிரியே இருக்கு.காரம்
எல்லாம் அளவாய் செம டேஸ்ட்ல இருக்கு.ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டதில் சீக்கிரமே
காலியாகிப்போச்சு.அப்புறம் பெப்பர் சிக்கன்.இதைப்பத்தி அதிகம் சொல்லவேணாம்.இதுவும்
செம டேஸ்ட்தான்.குடைமிளகாய் போட்டு சைனீஸ் ஸ்டைலில் இருந்தது.
குழம்பு மீன் கொண்டு வந்ததில் அது இன்னும் தனி டேஸ்ட்.மீன் குழம்பு சாப்பிட
சாப்பிட ரொம்ப நல்லா இருக்கு.ரெண்டு தடவை மீன் குழம்பு கேட்டு வாங்கி சாப்பிட்டேனா
பார்த்துக்குங்களேன்.அம்புட்டு டேஸ்ட்.அதுவும் மீன் சூப்பர்.வீட்டில செஞ்சு
சாப்பிடற மாதிரியே இருக்கு.
எல்லாத்தையும் சாப்பிட்டுக்கிட்டே அப்பப்ப சர்வர்கிட்ட பேச்சு கொடுத்ததில்
இந்த ஹோட்டலுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் தான் அதிகமாம்.கோர்ட்ல வேலை செய்யுற பியூன் ,
டவாலி முதல் வக்கீல் நீதிபதி வரைக்கும் இங்க சாப்பிட வருவாங்களாம்.அதுபோலவே
காவல்துறை நண்பர்களும்.கலெக்டர் ஆபீஸ்ல வேலை செய்யுற அதிகாரிகள் வரை இங்க தான்
சாப்பிட வருவாங்களாம்.அதேமாதிரி கேஸ் நடத்துவறங்களும் வாய்தா வாங்க வர்றவங்களும்
இங்க வருவாங்களாம்.சனி ஞாயிறு மட்டும் அரசு அதிகாரிகளை பார்க்க முடியாது.ஆனா
பார்சல் மட்டும் போகுமாம் என உபரித்தகவல்களை சொல்லி முடிக்கவும் நாங்கள்
சாப்பிட்டு விட்டு பெருமூச்சு விடவும் சரியாக இருந்தது.
விலை கோவைக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு.ஆனா ருசி அதிகமா இருக்கு.சாப்பாடுன்னா அன்லிமிட்தான் ஒரு வெட்டு வெட்டலாம்.இன்னும் நிறைய அயிட்டம் அங்க இருந்தாலும் சாப்பிட வயித்துல இடம்
இல்லாம போயிருச்சு.மீண்டும் அந்த கடைக்கு போகனும்கிற பசியை ஏற்படுத்தி விட்டது
ஹோட்டலின் சுவை.புரட்டாசி முடியட்டும் இன்னும் அதிகமான மெனுக்களை மீண்டும் ஒரு
வாய் சாரி கை பார்க்கணும்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
டிஸ்ப்ளே தட்டு - நல்ல ஐடியாவா இருக்கே!
ReplyDeleteவருகைக்கு நன்றி...நண்பரே...
Deleteஎப்பவோ எங்கேயோ கேட்டது உங்களுக்கு மட்டும் உடனே ஞாபகம் வரும்...!
ReplyDeleteபுரட்டாசி மாசம் - சின்ன தட்டு - அடப் போங்கப்பா...! பசிக்குது...!
வாங்க தனபாலன்....சாப்பிடலாம்..திண்டுக்கல் வரட்டா...?
Deleteதளம் சிறிது மாற்றி உள்ளீர்கள்... நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்...நிறைய கம்ப்ளைண்ட் வந்துச்சு அதான்.,..
Deleteமீன் கறி படத்தைப் பார்த்ததுமே பசி எடுக்குதேய்யா ? நல்லா சாப்பிடுங்க போங்க...!
ReplyDeleteவாங்க மனோ....உங்க ஊர்ல அதிகமா மீன் கிடைக்குமே....
Deleteகோவையின் முதல் செட்டிநாடு ஹோட்டல்!! கோவை வர்றப்ப கண்டிப்பா போகணும்.
ReplyDeleteவாங்க சிவா..நானே கூட்டிட்டு போறேன்...நல்லா ஒரு கட்டு கட்டுவோம்...
Deleteபுரட்டாசிதான் போயிட்டுதே! கடைக்கு போய் ஃபுல் கட்டு கட்டவும்.
ReplyDeleteஆமால்ல...போகனும்...ரொம்ப வருத்த்தோட சொல்ற மாதிரி இருக்கு.,,,
Deleteவருகிற ஞாயிறு கோவையில்
ReplyDeleteஇருக்கிறார்ப்போல ஒரு திட்டம் இருக்கு
நானும் ஒரு கைபார்த்து விட உத்தேஷம்
படங்களுடன் பகிர்வு அருமை
வாழ்த்துக்கள்
வாங்க...ஆனா அன்னிக்கு நான் இருப்பேனா தெரியல...
Deleteபுரட்டாசி முடிஞ்சு போச்சுங்க.உங்க எழுத்துலையே உமிழ் நீர் சுரக்குது!
ReplyDeleteஹா//ஹா....போகனுங்க.//
Deleteஉஸ்ஸ்ஸ்ஸ்.. வேறென்ன்ன பெருமூச்சுதான்!! :)
ReplyDeleteஏன் மச்சி....உஸ்ஸ்.....நாம போறோம்
Delete420 ரூபாய் பில்லை எல்லாம்படம் எடுத்து போடணுமா ? நீங்கள் four twenty வேலை எல்லாம் செய்ய மாட்டீங்கன்னு நம்புறோம் ஜீவா !
ReplyDeleteத.ம.5
ஹா..ஹா..ஹா...விலைப்பட்டியல் போட்டேன்..அப்படியே பில்லை போட்டுட்டேன்
Deleteகோவை மக்களை சாப்பாடு ராமனாக்கி விடுவீர்கள்.
ReplyDeleteஅம்மணிகள் இல்லாத உணவகம் போல...அதான் சாப்பாடை மட்டும் ருசிச்சு இருக்கீங்க!.
I used to visit here 15 years back, very good taste, good to see they maintain the same taste.
ReplyDeleteரொம்ப நன்றி.....உங்க ஆதரவுதான் அங்க இன்னும் சுவையோட வச்சி ருக்காங்க
Deleteசைவ சாப்பாடு விலை அதிகமா இருப்பது ஏன்? வெங்காயம் யூஸ் பண்றதாலேயா? வலைப்பூ புது வடிவமைப்பு அழகு! பாராட்டுக்கள்!
ReplyDeleteஇப்பத்தானே விலை ஏறிருக்கு,நன்றி.////
Deleteஇந்த டிஸ்ப்ளே தட்டு, இங்கு கேளம்பாக்கத்தில் ஒரு முனியாண்டி விலாசில் பார்த்ததுண்டு. சென்னையை பார்க்கும் பொழுது விலை குறைவாக உள்ளது :)
ReplyDeleteவாங்க ரூபக்.///நாம ஒரு நாளைக்கு முனியாண்டி விலாஸ் போறோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Deleteகேரளாவில் பெரும்பாலான சிறிய ஹோட்டல்களில் இதேபோல டிஸ்ப்ளே தட்டுக்கள் இருக்கும், மீன், மத்தி, சிக்கன், மட்டன், பீப், இறால் என பல வறுவல்கள் கொண்டுவந்து காட்டுவார்கள். நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். சென்னை ராயப்பேட்டையில் கணேஷ் செட்டிநாடு ஹோட்டல் ஒன்று உண்டு, அங்கும் இதே உத்தியைப் பயன்படுத்துகிறார்கள்...
ReplyDeleteவாங்க ஸ்பை....தகவலுக்கு நன்றி...அடுத்த முறை வரும் போது கணேஷ் போலாம்...
Deletenalla irukunga menucard
ReplyDeletemenu thaan nallaa irukkaa boss..?
Deleteநன்றி...சார்
ReplyDeleteஅருமையான தகவல்கள் அம்மணிகளை பற்றிய குறிப்புகளை காணோமே ?:-)))
ReplyDeleteமுனியாண்டி விலாஸ் கூட இந்த மாதிரி தான் டிஸ்ப்ளே பன்னுவாங்க, யாரு இந்த ஐடியாவை கண்டுபிடிச்சாதுன்னு தெரியல, நல்ல மார்க்கெட்டிங் டெக்னாலஜி. உங்க பதிவ கொஞ்சம் லேட்டா படிச்சிட்டேன். நவ 7 தேதி தான் கோயம்புத்தூர், வடை போச்சே !!!
ReplyDeleteவணக்கம் பாஸ்.
ReplyDeleteகடந்த வாரம் கோவை வந்திருந்தப்போ இந்த ஹோட்டல்ல தான் சாப்பிட்டேன். அப்படியே அடுத்த நாள் கீதா ஹால் நீர் தோசையும் ஒரு வாய் பாத்துட்டேன்.திருப்தியான சுவை.
நன்றி.
இங்கு எல்லாமே நன்றாக இருக்கும் . இட்லி தோசை சாம்பார் சட்னி எல்லாமே சூப்பராக இருக்கும். என் வீடு இந்த உணவகத்துக்கு அருகில்தான் உள்ளது
ReplyDelete