Tuesday, October 15, 2013

கோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை

தாஸ் லாட்ஜ் கேண்டீன்
கோவையில நஞ்சப்பா ரோடு உப்பிலிபாளையம் ஏரியா அப்படின்னாலே மோட்டார் பம்பு உதிரி பாகங்கள் எலக்ட்ரிகல் சாமான்கள் மற்றும் ஹார்டுவேர் கடைகள் தான் ஞாபகத்துல வரும்.ஆனா அங்கயும் ஒரு ஹோட்டலோட புரோட்டா ஞாபகத்துக்கு வரும்.அதுதான் தாஸ் லாட்ஜ் கேண்டீன்.
கிட்டத்தட்ட ரொம்ப வருசமா இருக்கு இந்த கடை.சின்ன கடை தான்.டீ பஜ்ஜிக்காக ஆரம்பித்த கடை இன்று ஒரு ஹோட்டலாக உருவெடுத்து இருக்கிறது.உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இடம் குறைவுதான்.ஆனால் அதைப்பொருட்படுத்தாமல் நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு செல்லும் வாடிக்கையாளர்கள் தான் அதிகம்.காலையில் இருந்து இரவு வரைக்கும் ஓயாமல் வியாபாரம் நடக்கும் இடம்.
காலையில் டீ காபி டிஃபன், போண்டா பஜ்ஜி வகைகளுடன் ஆரம்பிக்கிற இந்த கடை இரவு வரை நீடிக்கிறது.மதியம் விதவிதமான பலவகை சாதங்களுடன் பொட்டலமாக கட்டி விற்கின்றனர்.தக்காளி சாதம், தயிர் சாதம், பிரியாணி, சாம்பார் சாதம் என நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன.
அதே மாதிரி எண்ணெய் பலகாரங்களில் வடை, போண்டா, பஜ்ஜி, உளுந்து வடை, மசால் வடை, முட்டைப்போண்டா, மிளகாய் பஜ்ஜி, என ஏகத்துக்கும் இருக்கிறது.பலகாரங்களின் தட்டு காலியாக காலியாக அனைத்து வகைகளும் அவ்வப்போது பக்கத்துலயே இருக்கும் போண்டா மாஸ்டரின் கண்ணும் கருத்துமான கைவண்ணத்தில் சூடாக நிரம்பிக்கொண்டே இருக்கும்.
மதியவேளைக்கு ஒரு பொட்டலம் சாப்பாடு வாங்கிக் கொண்டு கூட ஏதாவது ஒரு பலகாரத்தினை வாங்கிகொண்டு இருக்கிற இடத்தில் அமர்ந்தோ நின்று கொண்டோ சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.அனைத்து சாப்பாடுகள் வெளியில் தயாராகி இங்கு விற்பனைக்கு மட்டும் வருகின்றன அதுவும் சூடாக...
சாயந்திர வேளையில் இங்கு தயாராகும் புரோட்டாக்கள் செம டேஸ்டாக இருக்கும்.மாலை 4 மணி முதல் புரோட்டா விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்.சுடச்சுட புரோட்டா சாப்பிடனுமா இந்த கடைக்கு போங்க.குருமா, முட்டைமசால், சிக்கன் குருமா என எல்லாம் இருக்கிறது புரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள...



இட வசதிமட்டும் தான் இல்லை.ஆனால் கூட்டம் அதைப்பத்தி கவலைப்படுவதாக இல்லை.நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு தட்டினை ...இடத்தினை காலி செய்கின்றனர்.
பக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து வரும் சேட்டன்கள் அதிகம் இங்கு குவிவதைப் பார்க்கலாம்.குறைந்த விலை, செமத்தியான டேஸ்ட் இருப்பதால் கூட்டம் எப்பவும் இருக்கிறது.அதுமட்டுமல்ல அந்த ஏரியாவில் இருக்கிற அத்துணை கடைக்காரர்களும் ஆபத்பாந்தவனாய் இருக்கிறது இந்த கடை.அந்த ஏரியாவில் புகழ்பெற்ற கடை இது ஒன்றுதான்.

நேசங்களுடன்
ஜீவான்ந்தம்

24 comments:

  1. நின்றால் என்ன...? சுவை அப்படி...! இன்னும் சிறிது நாட்களில் பெரிய கடை ஆகி விடும்... ஆகட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனபாலன்.இதுவரைக்கும் ஆகல..கிட்டத்தட்ட எனக்கு தெரிஞ்சு 15 வருசமா இருக்கு..

      Delete
  2. இது போன்ற ஹோட்டல்களில்தான் சுவை கூடுதலான உணவு கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாக்கா...ஆனா இங்க கொஞ்சம் சுத்தபத்தமா இருக்கும்.

      Delete
  3. விலை குறைவு...சுவை நிறைவு...இதுதான் இவர்கள் கான்செப்ட்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவாவுடன் சேர்ந்து போய் டேஸ்ட் பார்த்துட்டீங்களா உ.சி.ர‌

      Delete
    2. நானும் ஆவியும் உலகசினிமா ரசிகனும் தான் போனோம்.

      Delete
  4. Where is the exact location of this Shop? JM cake shop/Jayachandra bearing/Amman Temple?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாஸ்..நஞ்சப்பா ரோட்டில் இருந்து அவினாசி பாலம் அடியில் செல்லனும்னா ஒரு இடத்துல வலது பக்கம் பிரியும் ரோடு.அந்த ரோட்டில் செல்லும் போது இடது புறத்தில் இருக்கிறது.அங்க கேட்டாலே சொல்வாங்க...

      Delete
  5. அதென்ன ஒருகிண்ணத்தில்....... பொட்டுக்கடலையா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மேடம்..அது பொட்டுக்கடலை அல்ல..உருட்டிவைத்த புரோட்டா மாவு..

      Delete
  6. Background color is too bad and it is extremely hard to read the post.

    ReplyDelete
    Replies
    1. ஒகே சார் சரி பண்ணறேன்.

      Delete
  7. After submitting the comment the background color changed to white.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்.இதுவரைக்கும் அப்படி ஆகலையே..ஒகே சரி பார்க்கிறேன்.

      Delete
  8. சுவை இருப்பின் இடமில்லாவிட்டாலும் மக்கள் மனதில் இடம்பிடித்துவிடுகின்றன ஹோட்டல்கள்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  9. தெரு பேர் சொன்னா புதுசா போறவுங்களுக்கு உதவியா இருக்கும் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாஸ்..நஞ்சப்பா ரோட்டில் இருந்து அவினாசி பாலம் அடியில் செல்லனும்னா ஒரு இடத்துல வலது பக்கம் பிரியும் ரோடு.அந்த ரோட்டில் செல்லும் போது இடது புறத்தில் இருக்கிறது.அங்க கேட்டாலே சொல்வாங்க...

      Delete
  10. ப்ளாக் பேக் ரவுண்டை உடனே மாற்றவும்.......!

    ReplyDelete
  11. பதிவே சுவைக்கிறது!

    ReplyDelete
  12. ஆவியுடனா? ஆவிபறக்க சாப்பிட்டீங்களா?

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....