Friday, December 27, 2013

இண்டீரியர் டிசைனிங் – 1

ஹாய்..
அனைவருக்கும் வணக்கம்....
எவ்ளோ நாள் தான் நம்ம பிளாக்ல எல்லாத்தையும் எழுதறது....... (மொக்கையா கவிதை எழுதவதில் இருந்து, பல ஊர்கள் போய் கோவில் குளம்னு சுத்தி படம் பிடிச்சி போட்டது, ஊர் ஊரா போய் சொந்த காசுல சூன்யம் வச்சிகிட்டது, விமர்சனங்கிற பேர்ல ரீலீஸ் ஆகற படத்தை கொத்திக் குதறி, படம் பார்க்க ஆசையா போறவனையும் தடுத்து நிறுத்தற வரைக்கும்), இனி கொஞ்சம் மாத்தி யோசிப்போமே......எங்கெங்கயோ ஊர் ஊரா சுத்தி விதவிதமா சாப்பிட்டு, எத்தனையோ கடைக்கு நாம விளம்பரம் தரோம்ல...புதுசா நம்ம கம்பெனிக்கு விளம்பரம் தருவோமே....
                            KOVAI INTERIOR PEOPLE  இது தான் நம்ம கம்பெனி பேரு.2007 ஃபிப்ரவரி மாதம் நம்ம பிறந்த நாளில் ஆரம்பிச்சது.இன்னிக்கு வரைக்கும் ஆண்டவன் புண்ணியத்தாலும், நல்ல வாடிக்கையாளர்களாலும், முக்கியமா நம்ம டீம் உழைப்பினாலும் நல்லபடியா போய்ட்டு இருக்கு.இனி 2014ல இருந்து ஆரம்பிக்கிற எந்த ஒரு இண்டீரியர் வேலை செஞ்சாலும் அதனோட படங்களை இங்க அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன்.
அதுக்கு முன்னாடி இப்ப திண்டுக்கல்லில் பண்ணின ஒரு வீட்டீன் இண்டீரியர் ஒர்க் மற்றும் ஒரு ஷோ ரூம்.






நம்ம பிளாக் பார்த்துட்டு எந்த புண்ணியவானாது அவங்க வீட்டுலயோ அல்லது ஆபிஸ்லயோ இண்டீரியர் பண்ணனும் அப்படின்ன்னு ஒரு என்கொயரி வந்தாலும் எனக்கு சந்தோசமே...
(முதன் முதலா நண்பர் தமிழ்வாசி பிரகாஷ்க்கு நன்றி சொல்லிக்கிறேன்.அவர் தான் ஒரு வருசம் முன்னாடியே என்கொயர் பண்ணினாரு...ஆனா வேலை எதுவும் கொடுக்கல.....)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நேசங்களுடன்

ஜீவானந்தம்

19 comments:

  1. I tell you, it is a very good move my friend

    ReplyDelete
  2. நல்ல விஷயம் ஜீவா...

    உங்கள் தொழிலில் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இது போல் மேலும் (விளக்கமாக) தொடரவும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. எங்க வீட்டுக்கு வொர்க் செய்ய உன்னைத்தான் கூப்ப்பிட ஆசை ஜீவா! ஆனா, மாமா அந்தளவுக்கு மரவேலைகள் செய்யலை. வெற்ய்ம் கப்போர்ட், மாடுலர் கிச்சன் மட்டுமே செஞ்சார். அதுமில்லாம இண்டீரியர் வொர்க் செய்ய இம்புட்டு தூரம் வருவியோன்னு ஒரு டவுட். தூயா பெங்களூருல பிளாட் வாங்குற ஐடியால இருக்கா. அப்படி வாங்கும்போது நீதான் இண்டீரியர் வொர்க் செய்யனும். இப்பவே அட்வான்ஸ் புக்கிங்.

    ReplyDelete
  5. மேல இருக்கும் படத்தின் மாடல்களும், அதற்கேற்ற கலர்களும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. நீங்களும், உங்களது குடும்பமும், தொழிலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு எல்லா வளமும், சந்தோசமும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  7. ரொம்ப அழகா இருக்கு... உங்கள் தொழிலில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. தொழில், வியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தொழிலில் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  10. நன்றாக உள்ளது. வெற்றி பெற வாழ்த்துகள்!
    revmuthal.com

    ReplyDelete
  11. படங்கள் அனைத்தும் அருமை இனி வரும் பதிவுகளில் பகிருங்கள் ஆவலோடு காத்திருக்கிறோ

    ReplyDelete
  12. கண்டிப்பாக இந்தப்பதிவின் மூலம் நிறைய பிசினஸ் கிடைக்கும்... அடுத்ததாய் இந்த வீட்டின் interior வேலைகளுக்கு என்னென்ன மாதிரியான வேலைகள் செய்திருக்கிறீர்கள் என்பதைப் பதிவிடவும்...

    ReplyDelete
  13. அருமையாக இருக்கிறது,வாழ்த்துக்கள்!புதிய ஆண்டில் இன்னுமின்னும் புதுமைகள் செய்து,தொழிலில் வளம் பெற வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  14. இண்ட்டீரியர் டிசைன்ஸ் சூப்பரா இருக்கு பாஸ்.

    வாழ்த்துகள்

    உங்க சேவை நம்ம கரூர் பகுதிகளிலும் கிடைக்குமா?

    ReplyDelete
  15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  16. உங்கள் உள்துறை அலங்காரம் (மொழி மாற்றம் உபயம், Google Translator, தவறென்றால் என்னை திருத்தவும்), உங்கள் எழுத்துக்களை போல் அழகாக உள்ளது.

    ReplyDelete
  17. I m not able 2 c my brothers home.From this I saw his house.Very nice work.really fantastic

    ReplyDelete
  18. It's really FANTASTIC. nice WORK.I m not able to c my brothers RESI.......THNK U

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....