நல்ல டேஸ்டியா ஃபீப் பிரியாணி சாப்பிடனும்னா முஸ்லீம் அன்பர்கள் வசிக்கிற உக்கடம் கோட்டைமேடு தான்
போகனும்.ஆனா சாய்பாபா காலனியில மெயின்ரோட்டுலயே (ஒரு சின்ன சந்துக்குள்ள) ஒரு
பிரியாணி கடை இருக்கு.அந்த வழியா போனாலே போதும் பிரியாணி வாசம்
மூக்கைத்துளைக்கும்...அப்படியே நம்ம பசியைத்தூண்டும்.நம்ம பாய் கடைதான்...செம
டேஸ்டியா இருக்குது.
அப்படித்தான் அன்னிக்கு அந்தப்பக்கம் ஒரு வேலையா போனபோது வாசனை ஜிவ்வுன்னு
இழுக்கவே, வண்டியை ( டூ வீலர்தான் ) ஓரங்கட்டிட்டேன்.
ஏ ஓன் பிரியாணி கடைன்னு ஒரு
சின்ன போர்டு நம்மளை வழி நடத்தும்.சின்ன கடைதான்.நாலு டேபிள்தான்
இருக்கும்.காத்திருந்து தான் சாப்பிடனும்.அங்க வெயிட் பண்ற நேரத்தில் சுத்தி
சுத்தி அடிக்கிற பிரியாணி வாசனை நம்ம பசியை தூண்டிகிட்டே இருக்கும், எப்படா இடம்
கிடைக்கும்னு தோணும்.
அன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற...செம கூட்டம்..கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி சாப்பிட
உட்கார்ந்தோம்.நமக்கு எப்பவும் போல பிரியாணியும் ஃபீப் சுக்காவும்..சிக்கன்
பிரியாணியும் கிடைக்குது..ஆனா நமக்கு இண்ட்ரஸ்ட் இல்ல.
வாழையிலையில் சூடா பிரியாணி வைக்கும்போது ஏற்படற மணம்
இருக்கே....ஆஹா...அப்படியே சூட்டோடு சூடா கொஞ்சமா எடுத்து சாப்பிட்டா என்னா
டேஸ்ட்....ப்ரியாணி ஒரு வித சுவையுடன் செம டேஸ்டாக இருக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாய்
சூடாக ரசித்து ருசித்து சாப்பிட அமிர்தம் போல் இருந்தது.பீப் இறைச்சியும் நன்றாக
வெந்து மெது மெதுவென்று இருக்க, பஞ்சாய் உள்ளிறங்கியது.கூட ஆர்டர் செய்தது
சுக்கா...இது சொல்லவே தேவையில்லை...பீப் சுக்கா எப்பவும் டேஸ்ட் தான்.கொஞ்சம் பீப்
உடன் பிரியாணி எடுத்து சாப்பிட செம டேஸ்ட்....
பிரியாணி சீக்கிரம் காலியானதால் மீண்டும் ஒரு பிரியாணி சொல்லி ஆளுக்கு
பாதியாய் காலி செய்து கொண்டோம்...
பக்கத்து டேபிளில் ஒரு ஜிம் பாடி ஆத்மி செம கட்டு
கட்டிக்கொண்டிருந்தார்.பிரியாணியும் சுக்காவும் தூள் பறத்திக்கொண்டிருக்க, நாங்கள்
வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வெளியேறினோம்..விலையும் மிகக்குறைவே..நல்ல
டேஸ்ட்டுடன் இருக்கிறது.பீப் பிரியாணி சாப்பிடனும்னா தைரியமா போலாம்...
இதே ரோட்டுல நூராணின்னு ஒரு கடை இருக்கு.அங்க போனா சூடா புரோட்டா கிடைக்கும் கூட பீப் கறியோட....
சாய்பாபாகாலனியில் காதிகிராப்ட் அருகில் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
பீஃப்’னா மாட்டிறைச்சி தானே... ! :( முடிந்த திங்கட்கிழமையன்று அலுவலகத்தில் பெரிய ஹொட்டலில் இருந்து உணவு ஆடர் கொடுத்திருந்தார்கள். தெரியாமல் ஒரு hot dog பன் எடுத்துக் கடித்துவிட்டேன். சுவை ஒரு மாதிரியாகவே இருந்தது. நன்றாக இல்லை. என்ன உள்ளே என்று கேட்டால் மாட்டிறைச்சி என்றார்கள். என்னால் தொடர்ந்து சாப்பிட முடியவில்லை. அந்த இறைச்சியின் வாசம் ஒரு மாதிரியான மருந்து வாடை. அன்று முழுக்க தொண்டையில் என்னமோ சிக்கிக் கொண்டதுபோலவே இருந்தது.
ReplyDeleteஅய்யோ வீசாதே.. அதிகவிலை என்றார்கள்.. அதுக்காக.??
எதையும் விட்டு வைப்பதில்லை போல...!
ReplyDeleteபிரியாணி வாசனை நாசியை எட்டியது.ஆனாலும்..........வெள்ளிக்கிழமை தான் உதைத்தது!(நல்ல வேளை இன்றே வாசித்தேன்.)
ReplyDelete