Monday, May 19, 2014

ஃபேஸ்புக் துளிகள் - 2

கோவை R.Sபுரத்தில் இருக்கிற பிரபல மருத்துவமனை.சளித்தொல்லை காரணமாக  ஒரு விசிட் போட்டேன்.ரிசப்சன் அம்மணி டாக்டரை விட அதிகமாய் கேள்வி கேட்டு பார்மை பூர்த்தி செய்து அமரச்சொன்னது..சும்மா இருந்த கண்கள் சுத்தியும் முத்தியும் மேய ஆரம்பித்தது.....பளிச்சிடும் மார்பிள்....கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சுவர்....கண் கவரும் இண்டீரியர்..எப்பவும் போலவே தனியார் மருத்துவமனை என்கிற பிரமிப்பை ஊட்டி பயங்காட்டியது.
எங்கே ரமணாவாகி விடுவோமோ என்கிற அச்சத்துடனே அமர்ந்திருந்தேன்.காத்திருப்பின் சுகம் அங்கு நடமாடும் கேரள நர்ஸ்களால் புண்ணியமாகிறது.அதுமட்டுமின்றி வந்து செல்லும் அம்மணிகளாலும்...ஒரு மணி நேரம்...ஒரு சில நிமிடங்களாகிப் போனது..அதற்குள் ஒரு நர்ஸ் சேச்சி என் பெயரினை ஏலமிட...கேரள கடற்கரையோரம் ஒய்யாரமாய் இருந்த நான் உடனடி நிகழ்வுக்கு வர டாக்டரின் கேபினுக்குள் நுழைந்தேன்....நம்ம ராசி கன்னி ராசி போல...உள்ளே டாக்டர் அம்மணி...மத்திம வயதில் சுடிதார் போட்ட கடவுளாய்....


எதுவும் கேட்கவில்லை...அமரச்சொன்னது ஒரு நர்ஸ், டாக்டரோ ஒரு குச்சி போன்ற சாதனத்தை காதிலும் மூக்கிலும் விட்டு லைட் அடித்துப் பார்த்த பின் அவரின் பச்சை நிற வாய்க்கவசம் மெதுவாய் அசைந்து வார்த்தைகள் விழுந்தன ஓரிரண்டு...அப்போதுதான் தெரிந்தது ஏன் ரிசப்சனில் அத்தனை கேள்வி கேட்டார்கள் என்று..ஆனால் ரிசப்னிஸ்ட் சொல்லாத அந்த ரெண்டு வார்த்தையை இவர் சொன்னார்....
எக்ஸ்ரே, பிளட் டெஸ்ட் யூரின் டெஸ்ட்.எடுக்கனும் என்று..

அவ்வளவுதான்..மீண்டும் அதே காத்திருப்பு..கேரள கரையோரம் எல்லாம்...கொஞ்ச நேரம் தான்..அதற்குள் ஏலம்விட ஆரம்பித்தது நம்ம பெயரை ரிசப்சன் அம்மணி...
டாக்டர் பீஸ், யூரின் டெஸ்ட் பிளட் டெஸ்ட் என எல்லாம் சேர்த்து 1050 க்கு நம் பீஸை உருவியது...உள்ளே போய் ரைட் திரும்பி 3ம் நம்பர் ரூம் .....எக்ஸ்ரே எடுத்துட்டு பக்கத்துல பிளட் குடுத்திட்டு வாங்க என்று சொல்லி அடுத்த அம்மணியிடம் தள்ளியது..

எக்ஸ்ரே ரூம்...சசிகுமார் படங்களில் குத்துப்பாட்டு ஆடும் ஆண்ட்டி கணக்கில் ஒரு அம்மணி....எதுவுமே பேசவில்லை...காரியத்திலேயே கண்ணாய் இருந்தது....குப்புற படுக்கவைத்து கபாலத்தை அமுக்கி எக்ஸ்ரே எடுத்து துரத்திவிட்டனர் அடுத்த ரூமுக்கு....கேரள அம்மணிக்கு போட்டியாய் வனப்பிலும் அழகிலும் இருந்த நம்மூர் அம்மணியிடம் சாதுவாய் கை நீட்ட, பஞ்சை டெட்டாலில் முக்கி மணிக்கட்டு பச்சை நரம்பை தேட , நமக்கோ சுகமாய் இருக்க, அதற்குள் இரக்கமே இன்றி சிரிஞ்ச் ஊசியை எடுத்து ஒரு குத்து குத்தி..ரத்தம் வரலையே என்று அப்படி இப்படி ஒரு ஆட்டு ஆட்டி ரத்தத்தை எடுக்க உற்றுப்பார்த்ததில் காளியின் மறு உருவம் தெரிந்தது..

அப்போது தான் நினைவுக்கு வந்தது...அய்யயோ அடுத்து யூரின் டெஸ்ட் மாட்டிக்கிட்டோமே...இதற்கு சான்ஸ் தரக்கூடாது என்றெண்ணி டெஸ்ட் பாட்டிலை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தேன் டாய்லட்டுக்கு....ஹிஹிஹி

அப்புறமென்ன..ரிசல்ட் வாங்கியவுடன் மீண்டும் டாக்டருடன் சிட்டிங்.இந்த முறை அம்மணியில்லை...நம்ம ஜாதிக்காரர்....பொசுக்கென்று போய்விட்டது...ஆனாலும் அவரைச்சுற்றி வட்டமிட்டு இருந்த அம்மணிகளால் ஏதோ மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.அதுவும் அதிக நேரம் நீடிக்கவில்லை...
எக்ஸ்ரே வைத்து படம் காட்டினர்....லேசர் சிகிச்சை பண்ணணுமாம்.. அரைலட்சத்தோடு ஏழாயிரமாம்...
இருங்க வரேன்னு வந்துவிட்டேன்...

கிராமத்து நினைவுகள்

நம்ம தோட்டத்துல இருக்கிற பனைமரத்துல நுங்கு குலைகள் இருக்குறத பார்த்தவுடனே மரம் ஏற ஆள் புடிச்சி ரெண்டு குலையை வெட்டி குடும்பமே சாப்பிட்டோம்..காலியான நொங்கு குடுக்கைல வாரிசுகளுக்கு வண்டி செஞ்சி கொடுக்க...சந்தோசமா ஊருக்குள்ள ஓட்டிக்கிட்டு இருக்குதுங்க...நம் பால்ய காலத்தில் இது போல எவ்ளோ விளையாண்டிருப்போம்...நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு இது போன்ற சந்தோசங்கள் கிட்டுமா என்பது சந்தேகமே....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


5 comments:

  1. சின்ன வயதில் நீங்க நோகாம நொங்கு தின்னீங்க ,இப்போ உங்களை செக் செய்த டாக்டர்கள் தின்று கொண்டிருக்கிறார்கள் !

    ReplyDelete
  2. நுங்கு வண்டி ஓட்டிய நாட்கள் திரும்பாது! டாக்டர் கிட்ட செக்கப் போனதையும் கலக்கலா எழுதியிருக்கீங்க! உடம்பை பார்த்துக்கங்க பாஸ்!

    ReplyDelete
  3. நுங்கு வண்டி பல நினைவுகளைக் கிளறிவிட்டது. வைத்தியர் கிட்டப் போனால் இவ்வளவு செலவா. அதை காமெடியாக எழுதி இருக்கிறீர்கள் சுவைதான். ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. நுங்கு வண்டி.... வாவ்... எத்தனை வருடமாயிற்று இவற்றை ஓட்டி.... எனக்கு ஒண்ணு செஞ்சு தருவீங்களா....

    மருத்துவமனைகள் பணம் பிடுங்குவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் :((((

    ReplyDelete
  5. சார்..........!என்ன சார் ஆச்சு?உடம்பக் கவனிச்சுக்குங்க.///(அய்யயோ அடுத்து யூரின் டெஸ்ட் மாட்டிக்கிட்டோமே...)இப்ப கொஞ்சம் உடம்பு தேறியிருக்குமே?ஹி!ஹி!!ஹீ!!!!!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....