அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி
கணபதியில் தேங்காய்ப்பாலுக்கு ரொம்ப பேமஸான கடை சிவவிலாஸ்.அந்த கடை இப்போது
செயல்படுவதில்லை.ஆனால் அந்த சிவவிலாஸ் குரூப்பில் இருந்து வந்து அதே இடத்தில் ஷெட்
போட்டு புதிதாய் ஆரம்பித்து இருக்கிற ஒரு பலகாரக்கடைதான் இந்த அபூர்வ விலாஸ்.
எப்பவும் இந்த கடை ஒரே கூட்டமாத்தான் இருக்கும்.கடை முன்னாடி வண்டி நிறுத்த
இடம் இருக்காது.அந்த வழியா போனால் பலகார வாசனை நம்மை இழுத்து உள்ள விட்டுடும்
அப்படி ஒரு வாசனை அடிக்கும்....அப்படித்தான் நேத்து அந்த வழியா போகும் போது
நம்மளையும் உள்ளே இழுத்து விட,
கடைக்குள்ள போனா ஷோகேஸ்ல போண்டா, வடை, பஜ்ஜி, கேழ்வரகு பகோடா, மசால் போண்டா
இப்படி எதெதெல்லாம் எண்ணையில் மிதக்குதோ அதெல்லாம் இங்க சுடச்சுட சூடா இருக்குது.அதை
விட முக்கியம் தேங்காய்ப்பால் தான்.எப்போதும் அடுப்பில் மிதமான சூட்டில் இருக்க, பலவித
கலர்கலர் டோக்கன்களில் தேங்காய்ப்பாலுக்கான டோக்கன் வாங்கி கொடுக்க, இளஞ்சூடாய் நம்
கைகளில் வந்தது தேங்காய்ப்பால்.
கொஞ்சம் கொஞ்சமாய் ருசிக்க தேவாமிர்தமாய் இருந்தது.அளவான இனிப்பில் மிக
அமிர்தமாய் இருந்தது.அந்த சூட்டிலும் ஊதி ஊதி குடிக்க ரொம்ப சுவையாக
இருந்தது.ஏலக்காய் மணத்துடன் மிக அற்புதமாய் இருக்க ரசித்து குடித்ததில் சீக்கிரம்
தீர்ந்து போக, இன்னொரு டோக்கன் வாங்கி உடனடியாக ரீசார்ஜ் செய்து ருசிக்க
ஆரம்பித்தேன்...ஆஹா என்ன சுவை...
விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.கிளாஸ் 8 ரூபாய் தான்.டீ குடிக்கிற செலவில்
இது எவ்வளவோ மேல்.தேங்காய்ப்பாலுக்கு காம்பினேசனாக அனைவரும் வடை, போண்டா என
வெளுத்துக் கட்டுகின்றனர்.எப்பவாது அந்தப்பக்கம் போனா சாப்பிட்டுப் பாருங்க.
எத்தனையோ வருடங்களுக்கு முன் வீட்டில் சாப்பிட்டது.இப்போதெல்லாம் இந்த மாதிரி
தேங்காய்ப்பால் யார் சமைக்கிறார்கள் வீட்டில்.மிக ஆரோக்கியமான ஒரு பானம் இது.உளுந்து
போட்டு செய்திருக்கும் தேங்காய்ப்ப்பாலில் எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றன.
டெக்ஸ்டூல் மேம்பாலம் முடியற இடத்தில் இந்த கடை இருக்கு.அருகில் கண்ணன்
டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கிறது.தேங்காய்ப்பால் தான் இந்த கடையின் ஃபேமஸ்...டீ,
காபி, போண்டா வடை என எல்லாம் வேற இருக்கிறது....போனா சாப்பிட்டு பாருங்க...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ஸ்கூல் படிக்கும்போது ரோட்டு கடையில் தேங்காய்பால் சாப்பிட்டது, அதன்பிறகு சாப்பிடவே இல்லை. எட்டு ரூபாய் என்றால் விலை குறைவு தான்.
ReplyDeleteபெரும்பாலும் ஹோட்டல்களில் கிடைப்பதில்லை.ரோட்டோர த்ள்ளுவண்டிகளில் மட்டுமே கிடைக்கிறது.மதுரை சென்றால் பருத்திப்பால்....அதுவும் தள்ளுவண்டிதான்.
Deleteஉஜாலாவிற்கு மாறி விட்டீர்களா...? ஹிஹி...
ReplyDeleteஹா...ஹா...
DeleteSuper, next time I will be there Pls take me :-)
ReplyDeleteகண்டிப்பா போலாம் பாஸ்...வாங்க...
Deleteசிவவிலாசில் வெள்ளரிவிதை மைசூர் பா ,காரட் மைசூர் பா மிகவும் அருமையாக இருக்கும்..!
ReplyDeleteசிவவிலாஸ் ...போய் பார்க்கணும்..
Deleteதேங்காய்ப் பால் சாப்பிட்டதில்லை! அந்த பக்கம் வரும்போது சாப்பிட்டு பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகடைக்கு நல்ல விளம்பரம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்ல விளம்பரம்.....
எனது பக்கம் கவிதையாக
அன்று ஒருநாள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல தேங்காய்ப் பால் அமிர்தப் பகிர்வு!நன்றி.
ReplyDeleteபார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. தகவலுக்கு நன்றி ஜீவா.
ReplyDelete