மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி, ஓசூர்
போன மாதம் ஓசூர் போயிருந்தபோது மூதறிஞர் இராஜாஜி பிறந்த வீடு இங்கு தான்
இருக்கிறது என்று அறிந்த போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவரைப்பற்றி அதிகம்
தெரிந்ததில்லை, எப்போதோ வரலாறுகளில் படித்தது, அப்புறம் பொது அறிவுக்கேள்விகளில்
மட்டுமே இராஜாஜி என்பவரை தெரிந்து வைத்து இருந்தேன்.ஓசூர் அருகிலேயே இருக்கும் அவரது
இல்லத்தினை பார்க்க கிளம்பினோம்.ஓசூர் டூ கிருஷ்ணகிரி செல்லும் பெங்களூர்
நெடுங்சாலையில் வலதுபுறம் தொரப்பள்ளி செல்லும் ஊரின் முன்பாக பெரிய வளைவு நம்மை
வரவேற்கிறது.
தொரப்பள்ளி செல்லும் சாலையானது படுமோசம் என்பது அதில் செல்லும்போதே
தெரிகிறது.ஆனால் சாலையின் இருமருங்கிலும் பசுமை தலைவிரித்தாடுகிறது.மாமர
தோப்புகள், சிறு வயல்வெளிகள், அதில் காலிபிளவர் செடிகள், கொத்தமல்லி செடிகள் என விவசாயம்
செழிப்பாய் நடந்து கொண்டிருக்கிறது.தென்பெண்ணை நதிதான் அதற்கு காரணம் என்பது தெள்ளத்தெளிவாக
விளங்குகிறது.இருபுறமும் பசுமையை ரசித்தபடி 4 கிலோமீட்டர் தொலைவு வந்தடைய தொரப்பள்ளி
எனும் சிறு கிராமம் நம்மை வரவேற்கிறது.
இன்னமும் நகரவாழ்க்கைக்கு அடிபணியாமல் கிராமத்து
இயல்பில் இருந்தாலும் பொட்டிக்கடை வரை குடியேறிவிட்ட கோகோ பெப்சி குளிர்பானங்களின்
அத்தனை விளம்பர போர்டுகளிலும் தமிழும் கன்னடமும் சரிக்கு சமமாய் இடம் பிடித்திருக்கின்றன. அங்கிருக்கிற
ஒருவரிடம் விசாரித்தபோது பக்கத்தில் தான் இருக்கிறது என சொல்ல அந்த சின்ன
கிராமத்தில் அடுத்த தெருவில் இன்னுமொரு பெரிய ஆர்ச்சு வரவேற்கிறது.நீண்ட தெரு...வீடுகள்
அனைத்தும் வரிசையாய் இருபுறமும் இருக்கின்றன.அனைத்து வீடுகளிலும் ஆள் நடமாட்டம்
இருக்க, மூதறிஞர் இராஜாஜி வீடு பூட்டிக்கிடந்தது.வீட்டினைப் பராமரிக்கும்
வாட்ச்மேன் கூட இல்லை.பக்கத்தில் கேட்டபோது அவர் எங்கோ சென்றிருக்கிறார் என சொல்ல,
பூட்டிய வீட்டிற்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
வரலாற்று சிறப்புமிக்க ஒரு
தலைவரின் வீடு ஆள் அரவமின்றி இருக்க காரணம் முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பற்றி
யாரும் அறிந்து கொள்ள விருப்பம் இல்லாததுதான் காரணம்.இதையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம்
எந்த மூலைக்கு என்று நினைக்க தோன்றுகிறது.அவரின் வீட்டிற்கு சென்ற பின் தான்
அவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்.அவர் பிறந்த ஆண்டின் அடுத்த நூறு
ஆண்டுகளுக்கு பின் நான் பிறந்திருக்கிறேன் என்பதும், நான் பிறப்பதற்கு முன்பே காலமானதும் மலைக்கவைக்கும் ஆச்சர்யம்.1878ல்
பிறந்து பல்வேறு சாதனைகள் செய்த மூதறிஞர் பற்றி தெரிஞ்சுக்க கிளிக்
இந்த கோடைவிடுமுறையில் கொஞ்சம் பயனுள்ளதாக கழியனும்னா இந்தமாதிரி இடங்களுக்கு சுற்றுலா
கூட்டிட்டு போங்க...வரலாற்றில் இருக்கிற உண்மைகள் கொஞ்சமாவது தெரிய வரும்....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
உண்மைதான்.இவா்களுக்கே இந்த நிலமை என்றால் இன்றைய தலைவா்களின் நிலமை என்னவோ.
ReplyDeleteபயனுள்ள பயணம்...
ReplyDeleteஅருமையான,பயன் தரும் பகிர்வு.ராஜாஜி வாழ்ந்த வீட்டின் முன் புற தோற்றமாவது,உங்கள் புண்ணியத்தில் பார்க்கக் கிட்டியதே,நன்றி!//கேப்புல,உங்க வயச வேற சொல்லிட்டீங்க,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteதமிழ்நாட்டில் எதற்காக கன்னடத்தில் பெயர்ப்பலகை. ராஜாஜியும் கன்னடரா? :-)
ReplyDeleteநல்ல பதிவு. இது போன்ற பல நினைவில்லங்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன.....
ReplyDeleteஉள்ளே சென்று பார்க்க முடிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
நல்ல பகிர்வு! நன்றி!
ReplyDelete