கரம் - விருந்தினர் பக்கம் - 3 - YUMMY DRIVES
www.yummydrives.com
சிறப்பு விருந்தினர்களில் மூன்றாவதாக யாரை வர வைக்கலாம் என எங்கள் வட்டம் ஆலோசித்த போது, திரு கேபிள் சங்கர் அவர்கள், என் பட நாயகனை வரவைப்போம் என சொல்ல, அதுவே மிக முக்கிய முடிவாக அமைந்தது.
www.yummydrives.com
சிறப்பு விருந்தினர்களில் மூன்றாவதாக யாரை வர வைக்கலாம் என எங்கள் வட்டம் ஆலோசித்த போது, திரு கேபிள் சங்கர் அவர்கள், என் பட நாயகனை வரவைப்போம் என சொல்ல, அதுவே மிக முக்கிய முடிவாக அமைந்தது.
தமன்குமார்.
இவரைப்பற்றி அதிகம் தெரியாது.ஆனால் நம் கேபிள் சார் படமான தொட்டால் தொடரும் பட நாயகன் என்பதினால் மட்டுமே தெரியும்.விழா அன்று தான் இவரை நேரில் பார்த்தேன்.ஆள் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்.சின்ன புன்னகை ஒன்றை மட்டுமே நேரில் பார்க்கும் போது உதிக்கிறார்.
இவரின் படமான தொட்டால் தொடரும் படத்தினை இன்று வரை பார்க்கவில்லை.காரணம் கோவையில் ரிலீஸ் ஆனதே தெரியாது. அதுமட்டுமல்ல இன்று வரை இதன் டிவிடி கூட வரவில்லை.
விழாவில் மிகச்சிறப்பாய் பேசினார் தமன்குமார்.அவரது சொந்த ஊர் மதுரை என்பதால் நிறைய உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது என்றார்.தொட்டால் தொடரும் படப்பிடிப்பின் போது இயக்குனருடன் பெரும்பாலும் ஹோட்டலைத்தேடி அலைந்த விதத்தினையும், விதவிதமாய் சாப்பிட்ட அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டார்.ஒரு உணவுக்கான தேடல் என்பது இதுதான் என எங்களை வாழ்த்திப்பேசி இனிதே விடைபெற்றார்....
மிக்க நன்றி தமன்குமார்...
ஜாக்கி சேகர்...
அறிமுக உரை ஆற்ற யாரை அழைக்கலாம் என்று யோசித்தபோது முதலில் வந்த பெயர் ஜாக்கி....
எனக்கு பிடித்த மிகவும் பிரபலமான பதிவர்.நான் பதிவுலகத்திற்கு வந்ததில் இருந்து இன்று வரை அதிகம் விரும்பிப் படிப்பது இவரது பதிவுகள் தான்.எப்பொழுது பேசினாலும் தல என்று தான் சொல்லுவேன்...இவரின் எளிமையான தோற்றம், வெளிப்படையான பேச்சு எல்லாம் பிடிக்கும்.நான் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்ட படியால் வருகை தர சம்மதித்து, விழாவிற்கு குடும்பத்துடன் லேட்டாக வந்து, நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து தன் எளிய , எதார்த்தமான பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்டார்.பின் விழாவின் அனைத்து நிகழ்வுகளும் முடித்துவிட்டு மிக லேட்டாக போனார்.
இப்போது ஜாக்கி அவர்கள் ஜாக்கி சினிமாஸ் என்று ஒரு யூ ட்யூப் சேனலை நடத்தி வருகிறார்.வாழ்த்துக்கள் ஜாக்கி...
மிக்க நன்றி ஜாக்கி..குடும்பத்தோடு வந்திருந்து வாழ்த்தியமைக்கு....
சுரேகா...
விழாவின் நிகழ்வுகளை தொகுத்து வழங்க யாரையும் யோசிக்கவில்லை..காரணம் எப்போதும் நெஞ்சில் நிலைத்து இருப்பவர் சுரேகாதான்.அவரை சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின் போது இவரின் தொகுப்பு உரையை கேட்டு இருக்கிறேன்.சுவாரஸ்யம்...அத்துணை சுவாரஸ்யம்...அவரே இந்த விழாவிற்கு தொகுத்து வழங்க வருகிறார் என்றவுடன் மிக்க மகிழ்ச்சியானோம்...
நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் இவரின் பேச்சாற்றலை..ஜெயா டிவியில் இவரை அதிகம் விவாத மேடைகளில் கண்டிருக்கிறேன்.அதில் எல்லாம் இவரின் தொகுப்பாற்றல் தெரியவில்லை...விழா மேடைகளில் மிக சுவாரஸ்யமாக பேசுவதில் இவருக்கு நிகர் இவரே....
மிக்க நன்றி சுரேகா சார்.
வந்திருந்தும் தொகுத்தும் வாழ்த்தும் தந்தமைக்கும்.....
அடுத்து நம்ம குழு உறுப்பினர்கள்...
கேபிள் சங்கர்....
மிக பிரபலமான பதிவர்..இயக்குனர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகங்களுக்கு சொந்தக்காரர்.இவரின் பதிவுகளையும் விடாமல் படித்துக்கொண்டிருக்கிறேன்.அதிகம் பழக்கம் இல்லை..ஆனால் இப்போது மிக நெருங்கிவிட்டோம்.சென்னையில் உள்ள அத்தனை சந்து பொந்துகளும் அத்துபடியாக இருக்கிறது இவருக்கு...அப்படித்தான் அன்று எங்களை சைதாப்பேட்டைக்குள் கூட்டிக்கொண்டு சென்றார்.பின் நாங்கள் கூகுள் மேப் மூலம் மெயின் ரோட்டுக்கு வந்தது வேறு விஷயம்....
மிக அருமையாய் விழாவில் பங்கெடுத்து உற்ற துணையாய் நிகழ்ச்சிகளை கலகலப்பூட்டி இனிமையாய் நடத்தி சென்றார்.
மிக்க நன்றி தலைவரே...
சுரேஷ்குமார்..
எங்களை ஒருங்கிணைத்த நண்பர்.உணவுகள் மீதான தீராத காதலை கொண்டிருப்பவர்.உணவுகள் பற்றின தேடலை ஒன்று படுத்த இவர் எடுத்த முயற்சிதான் இந்த YUMMY DRIVES.ஒவ்வொரு நாளும் வெப்சைட் பத்தின விவரங்களை தகவல்களை சலிக்காது சொல்லி எப்படி மேம்படுத்தலாம் என்கிற ஆலோசனைகளை கேட்பார்.விழாவை மிகச்சிறப்பாய் நடத்தி வெற்றிகரமாய் ஆக்கியதில் இவருக்கு பெரும்பங்கே உண்டு...
நண்பர்கள்:
இந்த இணைய திறப்பினை விழாவிற்கு பங்கேற்று அலங்கரித்த பெரும் பங்கு நண்பர்களை சார்ந்தது.இணைய நண்பர்கள், பேஸ்புக் பிரபலங்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் வந்திருந்து வாழ்த்தியதற்கு நன்றி..
திரு கோவை ஆவி, திரு பாலகணேஷ்,திரு ஆரூர்மூனா செந்தில், திரு ஷைனிங் ஸ்டார் சீனு, திரு ஸ்கூல் பையன் கார்த்திக் மற்றும் குடும்பத்தினர், திரு மணிஜி, திரு.பட்டாபட்டி ஜெய்,, திரு கவியாழி, திரு.வெங்கட், விழாவிற்கு வராமல் வெளியே வாழ்த்து சொன்ன விக்கியுலகம் வெங்கட் அவர்கள்திரு.ராஜ்குமார், திரு.பிரசாந்த், திரு.கார்த்திக், திரு.செல்வா, மற்றும் முகம் தெரிந்த, தெரியாத நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...
மிக முக்கியமாய் இந்த விழாவிற்கு அரங்கு தந்து சிறப்பித்த திரு வேடியப்பன் அவர்களுக்கும் நன்றி....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அருமை . வாழ்த்துக்கள்
ReplyDelete