Showing posts with label சென்டால். Show all posts
Showing posts with label சென்டால். Show all posts

Wednesday, August 21, 2013

கோவை மெஸ் - சென்டால் பானம்,(Cendol), சிங்கப்பூர்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஏரியாவில் கால் வலிக்க சுத்திட்டு இருக்கும் போது ரொம்ப வறண்டு போய் இருந்ததால் தாகத்துக்கு ஏதாவது குடிக்கலாமே அப்படின்னு ஒரு காம்ப்ளக்ஸ் குள்ள புகுந்தோம்.டேக்கா செண்டர் எனப்படும் அந்த மாலுக்குள் நுழைய ஏகப்பட்ட கடை கண்ணி(ன்னி)கள்.துணிக்கடை, ஹோட்டல், என நிறைய....ஒரு சுத்து சுத்திட்டு வந்து தோதா ஒரு இடத்தில் உட்கார பக்கத்தில ஒரு ஜூஸ் கடை...அதில் கொஞ்சம் வித்தியாசமா ஒரு பானம் இருந்துச்சு.கருப்பு கலர், பச்சை கலர், வெள்ளை  கலர் என கலர் கலரா இருக்க ஒரு அம்மணி வந்து வாங்கி குடிக்கவும் எனக்கு ஆர்வம்..என்னவா இருக்கும் அப்படின்னு.நமக்குன்னு ஒண்ணு கேட்கலாம்னு பார்த்தா அந்த கடைக்காரர் நம்ம ஊர்க்காரர்.விவரத்தை கேட்கவும் புட்டு புட்டு வைத்தார்.அது பேரு சென்டால் அப்படின்னு விவரத்தை சொல்ல.. சரி ..நமக்கு ஒரு கிளாஸ் என கேட்க ஸ்பெசலாய்  போட ஆரம்பித்தார்.பனங்கருப்பட்டி போட்டு தேங்காய் பால் ஊற்றி அரிசியில செஞ்ச நூடுல்ஸ் போட்டு ஐஸ்கட்டிகள் நிறைய போட்டு தந்தார்.
       ஓரு ஓரமா உட்கார்ந்து போக வர இருந்த அம்மணிகளை ரசித்துக்கொண்டே குடித்ததில்  சீக்கிரம் காலியாகிப்போனது.இந்த பானம் மிக நன்றாக இருக்கிறது..பனங்கருப்பட்டி வாசத்தில் தேங்காய்ப்பால் கலந்து ஜில்லென்று குடிக்க மிக சுவையாக இருக்கிறது.உடம்புக்கு குளிர்ச்சியைத்தரும் பானம் என்று கூடுதல் தகவலை சொன்னார்.இதன் விலை 1.20 டாலர்தான்.நன்றாக இருக்கிறது.





நிறைய தமிழர்கள் புழங்கும் இந்த இடத்தில் அவ்வப்போது அழகழகாய் வெளிநாட்டு அம்மணிகளின் வருகை மனதிற்கு இதமளிக்கிறது.
கண்டிப்பா அந்தப்பக்கம் போனீங்கன்னா குடிச்சுப்பாருங்க...செமையா இருக்கும்.
இந்த பானம் பத்தி ஒரு சிறு தகவல் இது மலேசியாவின் மலாக்காவில் மிகப்பிரபலமான பானம்.

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...