Wednesday, August 21, 2013

கோவை மெஸ் - சென்டால் பானம்,(Cendol), சிங்கப்பூர்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஏரியாவில் கால் வலிக்க சுத்திட்டு இருக்கும் போது ரொம்ப வறண்டு போய் இருந்ததால் தாகத்துக்கு ஏதாவது குடிக்கலாமே அப்படின்னு ஒரு காம்ப்ளக்ஸ் குள்ள புகுந்தோம்.டேக்கா செண்டர் எனப்படும் அந்த மாலுக்குள் நுழைய ஏகப்பட்ட கடை கண்ணி(ன்னி)கள்.துணிக்கடை, ஹோட்டல், என நிறைய....ஒரு சுத்து சுத்திட்டு வந்து தோதா ஒரு இடத்தில் உட்கார பக்கத்தில ஒரு ஜூஸ் கடை...அதில் கொஞ்சம் வித்தியாசமா ஒரு பானம் இருந்துச்சு.கருப்பு கலர், பச்சை கலர், வெள்ளை  கலர் என கலர் கலரா இருக்க ஒரு அம்மணி வந்து வாங்கி குடிக்கவும் எனக்கு ஆர்வம்..என்னவா இருக்கும் அப்படின்னு.நமக்குன்னு ஒண்ணு கேட்கலாம்னு பார்த்தா அந்த கடைக்காரர் நம்ம ஊர்க்காரர்.விவரத்தை கேட்கவும் புட்டு புட்டு வைத்தார்.அது பேரு சென்டால் அப்படின்னு விவரத்தை சொல்ல.. சரி ..நமக்கு ஒரு கிளாஸ் என கேட்க ஸ்பெசலாய்  போட ஆரம்பித்தார்.பனங்கருப்பட்டி போட்டு தேங்காய் பால் ஊற்றி அரிசியில செஞ்ச நூடுல்ஸ் போட்டு ஐஸ்கட்டிகள் நிறைய போட்டு தந்தார்.
       ஓரு ஓரமா உட்கார்ந்து போக வர இருந்த அம்மணிகளை ரசித்துக்கொண்டே குடித்ததில்  சீக்கிரம் காலியாகிப்போனது.இந்த பானம் மிக நன்றாக இருக்கிறது..பனங்கருப்பட்டி வாசத்தில் தேங்காய்ப்பால் கலந்து ஜில்லென்று குடிக்க மிக சுவையாக இருக்கிறது.உடம்புக்கு குளிர்ச்சியைத்தரும் பானம் என்று கூடுதல் தகவலை சொன்னார்.இதன் விலை 1.20 டாலர்தான்.நன்றாக இருக்கிறது.

நிறைய தமிழர்கள் புழங்கும் இந்த இடத்தில் அவ்வப்போது அழகழகாய் வெளிநாட்டு அம்மணிகளின் வருகை மனதிற்கு இதமளிக்கிறது.
கண்டிப்பா அந்தப்பக்கம் போனீங்கன்னா குடிச்சுப்பாருங்க...செமையா இருக்கும்.
இந்த பானம் பத்தி ஒரு சிறு தகவல் இது மலேசியாவின் மலாக்காவில் மிகப்பிரபலமான பானம்.

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்
17 comments:

 1. மலேசியாவில ‘பஸார் மலாம்’னு கடைபோடுவாங்க.
  நம்மூர் வாரச்சந்தையின் மறு வடிவம்தான் இது.
  அங்க இதை விப்பாங்க.
  நான் வாங்கி குடிச்சிருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா..இந்த பானம் அதிகம் பிளாட்பார கடைகளில் தான் பிரசித்தமாம்.எதையும் விட்டு வைப்பதில்லை போல...ஹிஹிஹி

   Delete
 2. மனதிற்கு இதம்... பானம் (மட்டும்) அல்ல... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. சார்...விவரமா இருக்கீங்க..ஹிஹிஹி

   Delete
 3. பனங்கருப்பட்டி உடம்புக்கு ரொம்ப நல்லது. தேங்காய்ப்பால் வயிற்றுக்கு இதம் தருவது...

  ஆஹா இப்படி ஒரு கடை ஏன்பா குவைத்ல இல்ல???

  நீங்க மட்டும் குடிச்சிட்டு இப்படி படம் படமா போட்டா என்னப்பா நியாயம்?

  ஒன்னு செய்யுங்க... ஊர்ல போய் செட்டில் ஆகும்போது இதே போல கடை வைங்க.. நாங்க எல்லாரும் வந்து உங்க பேர் சொல்லி பனங்கருப்பட்டி தேங்காப்பால் ஜீவா அக்கவுண்ட்ல எழுதிக்கோங்கப்பா அப்டின்னு சொல்லி குடிச்சிட்டு வருவோம்ல?

  அருமையான பகிர்வுப்பா..

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா அந்த ஐடியா இருக்கு...வைக்கும் போது திறப்புவிழாவிற்கு வந்துடுங்க...உங்களையே சீப் கெஸ்டா வச்சிடறோம்

   Delete
 4. புட்டு புட்டு வைத்தார்.
  >>
  கேட்டது ஜூஸ், கடைக்காரர் புட்டு வச்சிருக்கார், சும்மா வந்திருக்கீங்களே இது எந்த விதத்துல நியாயம்?! அதுவும் ஒண்ணுக்கு ரெண்டா புட்டு!!

  ReplyDelete
  Replies
  1. எங்க ஊருக்கே குசும்பா///?

   Delete
 5. இந்த பதிவு cendol பதிவுபோல் இல்லை- ஒரே அம்மணிகளின் ஜொள்ளுதான் போங்க.

  ReplyDelete
  Replies
  1. என்னங்க பண்றது...சிங்கப்பூரைப்பத்தி சொல்லவா வேணும்...

   Delete
 6. கிராமத்து விழாக்களில் சேமியா பாயாசம் விற்பார்களே அது போலவோ... ஆனால் தேங்காய்ப்பால்,கருப்பட்டி சேர்ப்பதால் உடலுக்கு நல்லது..

  ReplyDelete
  Replies
  1. எங்க ஊர்ல இந்த மாதிரி சேமியா பாயாசம் விக்கறதில்ல...ஒரு வேளை உங்க ஊர்ல இருக்கோ என்னவோ...தேங்காய்பால் உடலுக்கு நல்லது.கருப்பட்டியும் ரொம்ப ரொம்ப்ப நல்லது...

   Delete
 7. ஒரு சேஞ்சுக்கு செண்டால் ஆ??

  ReplyDelete
  Replies
  1. இல்ல மச்சி..அதுவும் உண்டே...

   Delete
 8. குமரி ஜீவா பருகாத பானத்தை கோவை ஜீவா பருகியதற்கும், சுவையான தகவலாக்கியதற்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்...முதல் வருகைக்கு...

   Delete
 9. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்http://blogintamil.blogspot.com/2013/09/2.html?showComment=1379461793265#c1036978093212335884

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....