Monday, February 13, 2012

காதலர் தின வாழ்த்துக்கள்

14.2.2012 
காதலர் தின வாழ்த்துக்கள்

இந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப்பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...

பொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம்  ரொம்ப அருமை .. (சரி நமக்கும் பதிவ தேத்த ஒரு விஷயம் கிடைத்து விட்டது என்ற சந்தோசம்தான் )
படிக்கிற காலத்துல கடித தொடர்பால் ஏற்பட்டது எங்க காதல்.அப்போ வெறும் கடிதம் தான்.முகம் தெரியாமலே இருவரும் காதல் கொண்டோம்.1997  இல் கடித தொடர்பு ஆரம்பித்து 1999 இல்  பார்க்கலாம் என்று முடிவெடுத்து சேலம் பேருந்து நிலையத்தில் முதல் முறையாக இருவரும் சந்தித்து கொண்டோம் .அப்போது ஏற்பட்ட எனது மனநிலையினை கவிதை என்ற பெயரில் வடித்த வரிகள்.

(இந்த கவிதையினை(அப்படி வச்சிக்கிங்க ) இப்போ ப்ளாக்ல எழுதும்போது  போராளி படத்துல நரேஷ் சொல்லுவாரே கவிதை ....கடைசியில மூணு புள்ளி....அதுதான் ஞாபகத்திற்கு வருது ...ஹி..ஹி.. ஹி... ) 
 29 .10 .1999 

உள்ளங்களை பரிமாற்றி
உயிர்களில் கலந்தவர்கள்
இன்று
விழிகளை சந்தித்த நாள்...

முக்கனிகளுள்
முக்கியத்துவம் பெற்ற
மாங்கனிக்கு பெயர் போன
சேலம் மாநகரம்
எந்தன் இதயக்கனியை
தொலைத்துவிட்ட இடம்
பரபரப்பு மிக்க
பேருந்து நிலையம்...

எத்தனையோ பேர்க்கு நடுவில்
எதிர்பார்ப்புடன்
என்னவளை
எதிர் நோக்கிக்
காத்திருந்தேன்....

அவளா....
இவளா... என்று
இனிதே
இதயத்தினுள்....
நடுக்கத்துடன்
சிறு கலக்கத்துடன்....

என்னையுமறியாமல்
என்னுள்
ஏதோமாற்றம்....

பணிப்பெண்களுக்கு
இடையில் வரும்
இளவரசியாய்....
விண்மீன் கூட்டங்களுக்கு
இடையில் வரும்
ஒற்றை நிலவாய்
அவள்....

அந்தி நிறத்து
கூந்தலைக் கொண்ட
தேவதையாய்
அவள்...

மை தீட்டும்
மலர் விழிகளுக்கு
மெருகூட்டுவதாய்
அமைந்த கண்ணாடியுடன்
அவள்...

பருவமெய்திய
பாலினும் வெண்மையவள்
பக்கத்தில் வந்தபோது
பனியின் குளிர்ச்சி
பரவசத்துடன்
பதில் கேட்டேன்
மஹாவா..?  என்று

அவளின்
செவ்விதழ்களில்
செந்தேன் மட்டுமல்ல
இன்னிசையும்
இனிதாய் வரும்
என்பதனை
அவளின்
"ஆம்" இல்
அறிந்து கொண்டேன்
இருவரும்
பேச மறந்து
சிலைஆனோம்

இரு ஜோடி விழிகளின்
பார்வையில்
இதயங்கள் பேசினாலும்
அதரங்கள்
அசையவில்லை
ஆயினும்
சூழ்நிலை உணர்ந்து
மௌனத்தை கலைத்தோம்

இந்த நாள்....
நெஞ்சில் நிறைந்தவள்
இன்று
விழிகளுக்கு
விருந்தளித்த நாள்....

கனவில் மட்டுமே
வந்து போனவள்
இன்று
கண்களுக்கு
காட்சியளித்த நாள்

கடிதங்களிலே
காதல் மணம்
வீசியவளின்
பூமுகம்
பார்த்த  நாள்

முகங் காணாது
ஏற்பட்ட காதலின்
முடிவாய்
இன்று
முகம் பார்த்த  நாள்...

நிழலை மட்டுமே
நேசித்த நான்
இன்று
நிஜத்தை கண்ட நாள்

நித்திரையில்
நித்தமும் வந்தவள்
இன்று
நேரில் வந்த நாள்...

வார்த்தைகளாய்
படித்த உன் குரலை
வசந்த கீதமாய்
கேட்ட  நாள்....

எனக்குள்ளே
உருவகித்து இருந்த
உருவத்தை
இன்று
உணர்ந்த நாள்...

உன்
நினைவுகளில்
நலிந்து போனவன்
இன்று
நலமான நாள்...

இதயத்தில்
தொடங்கிய காதல்
இன்று
விழிகளில்
வழிந்த நாள்...

காதல் வரம் கேட்டு
காத்திருந்தவனுக்கு
இன்று
தேவதையின்
தரிசனம்
கிடைத்த நாள்...

இந்த நாள்
என்
வாழ் நாளில் மீப்பெரு
வசந்தத்தை
வருவித்த நாள்...

இந்த காதல்
இனிமையாய்
நிறைவேற
ஆண்டவனை
இனிதே பிரார்த்திக்கின்றேன்...

இப்படி எழுதி என்னவளுக்கு வாழ்த்துக்களை சொன்னேன்.

கிசுகிசு  :
எப்படியெல்லாம் ஐஸ் வச்சி கவுத்தி இருக்கேன்னு பாருங்க ... இப்போ இப்படி எல்லாம் சொல்ல முடியுமா.....அதான் கல்யாணம் பண்ணியாச்சே ..ஹி ஹி ஹி
இன்னும் கொஞ்சம்...

Sunday, February 12, 2012

ஸ்ரீ காளிபராசக்தி அம்மன்-சிந்தலக்கரை

 மதுரை பை பாஸ் வழியே திருச்செந்தூர் போற போது சிந்தலக்கரை என்கிற ஊரில் ஒரு கோவிலை பார்த்தேன் .மிக பிரமாண்டமாய் (ஷங்கர் பட செட்டிங் போல ) நாகம் தலையுடன் விஷ்ணு அல்லது கிருஷ்ணா திருவுருவ சிலை...ரோட்டில் போகிற போது மிகவும் உயரமான நிலையில் இச் சிலை.இதை கண்டவுடன் வண்டியிலிருந்து இறங்கி ஒரு சில போட்டோக்களை எடுத்து கொண்டேன் மேலும் ஸ்ரீ காளிபராசக்தி அம்மன் வேற பயமுறுத்துகிற  பயங்கர ஆக்ரோஷமான நிலையில் சிலை வடித்து இருக்கிறார்கள்.அப்புறம் இன்னொரு சிலை கையில் மாடு பிடித்து கொண்டு ....கிட்டதட்ட 40  அடி உயரம் இருக்கலாம் .








சித்தர் பீடம் வேற இருக்கிறது.பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்பது அங்குள்ள கூட்டம் பார்த்தாலே தெரிகிறது.திடீர் தெரு வோர கடைகளில் பேரிச்சை விற்பனை அதிகமாக இருக்கிறது.ஒருவேளை இங்கு பேரிச்சை தான் பிரசாதமோ ...?
இன்னும் கொஞ்சம்...

Friday, February 10, 2012

கோவை மெஸ் - வேலன் ஹோட்டல் - கோவை (Velan Hotel)

வேலன் ஹோட்டல்
திருப்பூர்ல ரொம்ப பேமஸ் ஆன ஹோட்டல் ...இப்போ புதுசா கோவையில ராம்நகர் ல திறந்து இருக்காங்க..இங்கேயும் போய் பார்க்கலாமே (பார்க்க மட்டுமல்ல சாப்பிட்டு அப்பிடியே நாம பிளாக்ல பதிவ  தேத்தலாம்)  அப்படின்னு ஒரு நாள் மதிய நேரம் அங்க போனோம்..ம்கூம் ..ரொம்ப அருமையா இன்டீரியர் பண்ணி இருக்காங்க...(மெயினா அதைத்தானே பார்க்க போறது ...)






முதல் ப்ளோர்ல ரெஸ்டாரன்ட் இருக்கு ..அடுத்த ப்ளோர்ல பபே டைனிங் இருக்கு.அப்புறம் ரூப் டாப்ல வேற வச்சி இருக்காங்க..நாங்க போனது பபே..நிறைய வெரைட்டி ..ரொம்ப இருக்கு ..என்ன சாப்பிட தான் முடியல..வெஜ்ல ஏகப்பட்ட ஐட்டம் .நான்வெஜ்ல ஒரு சில மட்டும்தான்.எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்த்தேன்.(இப்படியெல்லாம் ரொம்ப வெரைட்டி இருக்கும்னு தெரிஞ்சு இருந்தால் ஒரு நாள் முன்பே பட்டினி கிடந்து வயிற்ற காய போட்டு இருப்பேன்)





5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கு சர்விஸ் எல்லாம்.கேக் பிஸ்கட்ல நல்லா டெகரேசன் பண்ணி வச்சி இருந்தாங்க ......கடைசியா ரவை பாயசம் கொடுத்தாங்க ...ரொம்ப அருமை...நம்ம கேபிள் சொல்வாரே டிவைன் ...அது தான் ...(நாம இனி வேற பேரை வைக்கணும் ..)அவ்ளோ டேஸ்ட் ..அப்புறம்... எல்லாம் சாப்பிட்டதுக்கு அப்புறம் வந்துச்சு பாரு பில்லு...(அடடா...இப்படி வந்து மாட்டிக்கணுமா...).காசுக்கு கேத்த டேஸ்ட் ...இனி நாம அந்த பக்கம் போவோம்.....? அதான் உள்ளே நுழையும் போதே யாரையும் காணாம் னு பார்த்தேன் .....சிபி சொல்லுவாரே ..ஒரு தடவை ட்ரை பண்ணலாம் அப்படின்னு அதான்...ஹி ஹி ஹி ஹி
நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 8, 2012

திண்டுக்கல் வேணு பிரியாணி. - கோவை

திண்டுக்கல் வேணு பிரியாணி.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தின் மேலே நல்ல இன்டீரியர் அமைப்புடன் இரண்டாவது கிளையை ஆரம்பித்துள்ள வேணு பிரியாணி ஹோட்டல் க்கு சென்றோம்.நல்ல விசாலமான இடம், நல்ல இண்டீரியர் டிசைன்  என ஹோட்டல் களை கட்டுகிறது.அதே சுவை , திண்டுக்கலில் சாப்பிட்ட அதே சுவை இங்கும் இருப்பது தனி சிறப்பே.கோலா உருண்டை, வஞ்சிரம் மீன், மட்டன் பிரியாணி , ஈரல் , நண்டு என அனைத்து வகைகளும் இருக்கின்றன.பார்சல் வாங்க தனி கவுண்டரே அமைத்து இருக்கின்றனர்.கார் பார்கிங் செய்ய 10  ரூபாய் தர வேண்டி இருக்கிறது, காரணம் கோவை மாநகராட்சி யின் பார்க்கிங் மேலே தான் இருக்கிறது.இவர்களுக்கு என்று தனி இடம் இல்லை.ஒவ்வொரு தடவையும் செல்லும் போது பார்க்கிங் செய்ய பணம் அழ வேண்டி இருக்கிறது.












 பர்ஸ் நல்ல கனமா இருக்கிறவங்க தாராளமா சாப்பிட போக கூடிய இடம் தான்.


இன்னும் கொஞ்சம்...

Tuesday, February 7, 2012

ஸ்ரீ நாக சாயி மந்திர் - சாய்பாபா கோவில் கோவை

கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் இக்கோவில் அமைந்துள்ளது.ஆரம்ப காலத்தில் ஒரு குடில் போல செயல் பட்டு வந்த இக்கோவில் தற்போது மிக விஸ்தாரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
இங்கு  துனி எனப்படும் ஹோம குண்டம் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கும்.அப்புறம் நாக மண்டபத்தில் பொன் மற்றும் வெள்ளியில் ஆன தகடுகள் பதிக்கப்பட்ட மண்டபத்தில் சாயி அவர்களின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு பூஜிக்கபடுகிறது.



வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பூஜையில் ஒரு நாகம் வந்ததால் ஸ்ரீ சாயி பகவான் அவர்களின் லீலை என்று பக்தர்கள் வணங்கி பின்னர் அந்த நாகம் மறைந்த இடத்தில்தான் மண்டபம் கட்டி சாய்பாபாவின் திருவுருவ சிலை வைத்து வணங்கு கின்றனர்.இதனால் தான் நாக சாயி மந்திர் என இக்கோவில் அழைக்க படுகிறது.

(ஒரு காலத்தில் இவரும் ரொம்ப எளிமையா தான் இருந்தாரு .ஆனா இப்போ ரொம்ப பணக்கார கடவுளா மாறி விட்டார்.நான் 1998  ம் வருடத்தில் எதேச்சையாக இக்கோவிலுக்கு சென்றபோது ரொம்ப எளிமையாக இக்கோவில் இருந்தது.அதில் இருந்து நான் இவரின் பக்தனாக மாறி போனேன்.வருடங்கள் உருண்டோட இப்போ இந்த கோவில் ரொம்ப பணக்கார கோவிலா ஆகி விட்டது .தங்க முலாம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தகடுகள் கொண்ட மண்டபம், கோவில் உள்ளே CCTV  கேமரா, பிரமாண்ட கட்டிடங்கள், மார்பிள் தரை என ரொம்ப முன்னேற்றம்.இப்போ இருக்கிற இந்த சூழ்நிலைகளில் இதெல்லாம் அவசியம் என்றே தோணுகிறது.என்ன பண்றது ....திருப்பதி கோவில் வருட வருமானம் அதிகம் , அப்புறம் இப்போ பத்ம நாபா கோவில் என எல்லா கோவில்களும் இப்படி இருக்கிறப்ப பாவம் இவரு மட்டும் என்ன பண்ணுவாரு)







இங்கு தினமும் காலை 5 மணி முதல் ஆரத்தி யும் அபிசேகம் 11 மணிக்கும்  நடைபெறும்.வியாழன்தோறும்இங்குசிறப்புபூஜைசெய்யபடுகிறது.அன்னதானம் மதிய வேளைகளில் நடை பெறும்.
இக்கோவிலை அடுத்து விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் மற்றும் நவகிரககங்கள் சந்நிதி களும் இருக்கின்றன.ஒரு அரசமரமும் இருக்கின்றன.

இக்கோவிலுக்கு செல்லும் வழி : காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் இல் இருந்து மருதமலை, துடியலூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் சாய்பாபா கோவில் செல்லும்.3 கிலோ மீட்டர் தூரம் தான்.

கோவிலுக்கு உள்ளே சாய் பகவான் பாடல்கள் , போட்டோக்கள் கிடைக்கும்.அப்புறம்அதிகமா போட்டோ எடுக்க முடியல ..கோவிலுக்கு உள்ளே கேமரா அனுமதி இல்லை .வெளியில் இருந்து எடுத்தேன் 

குறிப்பு : இக்கோவிலில் தான் எனது திருமணம் நடைபெற்றது.( அது ஒரு பெரிய கதை ....பின்னாளில் ஒரு பதிவா போடலாம் .ஹி..ஹி ஹி ஹி )

இன்னும் கொஞ்சம்...

Monday, February 6, 2012

பாராட்டுக்கள் - நன்றி




இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாள்..(என் பிறந்த நாள் என்பதை விட ).காலைல ப்ளாக் எழுதி கிட்டு இருக்கும் போது ஒரு கால்.(போன் கால் தான் ).சரி ..யாராவது எனக்கு வாழ்த்து சொல்லுவாங்க அப்படின்னு நினைச்சா....என் பேரை கேட்டு , அப்புறம் அவரை அறிமுகபடுத்திகிட்டு சொன்னார் ..நான் உங்க ப்ளாக் படிக்கிறேன் அப்படின்னு...எனக்கு ஒரே அதிசயம்..ஆச்சர்யம் ...என்னடா..நாம போடற பதிவையும்  படிச்சிட்டு முதல் முதலா ஒருத்தர் போன் பண்ணி இருக்காரே அப்படின்னு ஒரே சந்தேகம் ....சாரி ...சந்தோசம் ....ரொம்ப சிலாகிச்சு பேசினாரு.

சென்னையில் ஹை கோர்ட்டில் அட்வகேட் ஆக பணிபுரிகிறாராம்...நிறைய பேசினார் ...என்னோட பயணம் பத்தின பதிவுகள் அவரை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணி இருக்கிறதாம்..அதுவும் இல்லாமல் இதயம் பேசுகிறது மணியன்  அவரோட நடையை ஒத்து இருக்கிறது என்றும் சொன்னார் ....எனக்கு ஆச்சர்யம் ....இப்படியெல்லாம் நம்மை பாராட்டு வாங்களா என்று...எப்படியோ....எனது பதிவுகள் அவரை சந்தோசம் செய்து இருக்கிறது என்பதை நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

பாராட்டிய அன்பு நண்பர் அட்வகேட் ராஜ்குமார்.. அவர்களுக்கு இதயம் கனிந்த  நன்றியினை இந்நன்னாளில் காணிக்கை ஆக்குகிறேன் 

எங்களை இணைத்த இந்த பதிவுலதிற்கு ரொம்ப நன்றி

நேசங்களுடன் 
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

போலீஸ் - POLICE

போலீஸ் அப்படின்னா என்னன்னு தெரியுமா ..?



 சமீபத்தில் ஒரு மலையாள படம் (கில்மா படம் அல்ல ) பார்த்தேன் .நம்ம கேரளா விஜயகாந்த்  அதாங்க சுரேஷ் கோபி நடித்த ஒரு படம்.சும்மா ஆக்சன்ல பின்னி பெடல் எடுத்திருப்பாரு.அதுவும் போலீஸ் கமிஷனர் வேடத்தில்.அவரோட ஆபீஸ்ல  POLICE அப்படிங்கிறதுக்கு விளக்கம் எழுதி வச்சிருப்பாங்க அது என்னன்னா ...





P –Polite 

O – Obedience 

L – Loyalty 

I – Intelligence

C – Courage

E – Efficiency 

எப்படியோ ஒரு பதிவு போட்டு நம்ம ஜெனரல் நாலேஜ் வளர்த்து கிட்டாச்சு .ஹி..ஹி ஹி
இன்னும் கொஞ்சம்...