Sunday, June 5, 2011

கேரளா திருச்சூர் பயணம்

கடவுளின் தேசமான கேரளாவிற்கு வேலை விஷயமா போயிருந்தேன். ரொம்ப கொள்ளை அழகு.இருமருங்கிலும் பச்சை பசேல் ஆக, மழையின் சாரல் எப்போதும் தூறி கொண்டிருக்க ஒரு விதமான ரம்மிய சூழல் வழி எங்கும்........இடைவிடாது மழை தன்னுடைய கடமையை செய்து கொண்டிருந்தது.


அப்புறம் காலை உணவாக நம்ம கேரளா ஸ்பெசல் புட்டு அதுக்கு ஏத்த கடலை கறி சாப்பிட்டேன்.காலையில் கேரளா வாசி களோட மெனு என்னன்னா புட்டு கடலை கறி, வெள்ளை அப்பம் பீப் கறி , முட்டை கறி , மீன் கறி இப்படி நான் வெஜ் ஆக இருக்கிறது.அப்புறம் நம்ம ஊரு இட்லி , தோசை எல்லாம் இருக்கு. ஆனா சட்னி சாம்பார் நல்லாவே இருக்காது.அவ்ளோ கேவலமா இருக்கும்.எவ்ளோ தண்ணி ஊத்த முடியுமோ அவ்ளோ தண்ணி ஊத்தி சட்னி வைப்பாங்க.பருப்பே இல்லாத சாம்பார் இங்க மட்டும்தான்.அதனால எப்பவும் முட்டை கறி பீப் கறி அப்படின்னு சாப்பிட்டேன்.நம்ம ஊரு ஹோட்டல் களும் இருக்கு என்ன இருந்தாலும் அவங்க பாணி வகையில சாப்பிடறது தான் சுவையே.

அப்புறம் திருச்சூர் போற வழியில குதிரன் மலை அப்பிடின்னு ஒரு மலை இருக்கு.அங்க ஒரு காவல் தெய்வம் இருக்கு.போற வர்ற வாகன ஓட்டிகள் காசை விட்டு எறிவார்கள்.(இறங்கி போய் உண்டியல காசு போட கஷ்டப் பட்டு வீசுவார்கள்).நிறைய வழிபாடுகள் நடக்கும்.நானும் என் பங்குக்கு வீசாம இறங்கி போய் உண்டியல போட்டேன்.



அப்புறம் மதிய உணவாக மட்டை அரி சாப்பாடு.நம்மூர் ரேசன் அரிசி போல இருக்கும்.அதுதான் கேரளா வோட பாரம்பரிய அரிசி.ரொம்ப சுவையா இருக்கும்.இதுக்கு ஏத்த மீன் கறி, பீப் கறி குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும்.நான் எப்ப போனாலும் இந்த மட்டை அரிசி சாப்பாடுதான் விரும்பி சாப்பிடுவேன்.


பொரியல், கூட்டு, ஊறுகாய் எல்லாம் வைப்பாங்க ஆனா எதுவுமே நல்லா இருக்காது.அப்பளம் தவிர.

அப்புறம் நாங்க பண்ணின வேலை இதுதான்.ஆர்ட் செட்டிங்க்ஸ்


NRI பெஸ்டிவல் ஷாப்பிங் அப்படின்னு பிசினஸ் டெவலப்.நம்ம ஊரு ஆடி தள்ளுபடி மாதிரி..(எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க)

அப்புறம் வேலை முடிஞ்சு வரும் போது வடக்கன் சேரி அப்படிங்கிற ஊரு இருக்கு.அங்க நேந்திரம் சிப்ஸ் கடைகள் நிறைய இருக்கு.எப்பவும் சூடா போட்டுகிட்டே இருப்பாங்க.கூட்டம் எப்பவும் அள்ளும்.கேரளாவிலிருந்து திரும்பி போகிற அனைத்து சுற்றுலா வாசிகளும் சிப்ஸ் வாங்குகிற இடம் இங்கதான்.ஒரு கிலோ சிப்ஸ் ரூபாய் 130 . அப்புறம் அல்வா இங்க கிடைக்கும்.சபரி மலை சீசன் அப்போ இங்க சொல்லவே வேணாம் ..அப்படி ஒரு கூட்டம் இருக்கும்.



அப்புறம் திருச்சுர்ல சுத்தி பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல.இங்க இருந்து குருவாயூர் 29 கிலோமீட்டர்தான்.அப்புறம் கொச்சின் 70 கிலோமீட்டர்.அங்க போனால் பீச் இருக்கிறது.மத்த படி விசேஷம் இல்லை.நிறைய தேவாலயங்கள் இருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம் 

4 comments:

  1. 100% veg. food available near temple center of the town. the temple very famouse you missed it.

    ReplyDelete
  2. boss Thirusur Vadakkunathan (Shivan) Temple very famous.. atha eluthalaye..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....