Tuesday, July 12, 2011

துயரமான சம்பவம் ...

என் கம்பெனில வேலை செய்யிற பையன் பேரு ஜித்து..வயசு 20 தான் ஆகிறது.உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவன்.நல்ல வேலைக்காரன்.பெய்ண்டிங் வேலை அவ்ளோ நல்லா பண்ணுவான்.
கடந்த ஞாயிறு( 10 .7 .2011 ) இரவு மொபைல் பேசி கொண்டே ரயில் ட்ராக்கை கடந்து இருக்கிறான்.கடந்தும் விட்டான்..அப்போது வந்த ரயிலை கவனிக்காது.... ஆனாலும் ஒதுங்க இடம் இல்லாததால் ரயில் பக்கவாட்டு பகுதி மோதி தலையில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டு வேலியோரம் கிடந்திருக்கிறான்.காலை தான் அவன் பிணமாக கிடப்பது அவனுடன் தங்கி இருந்த நண்பர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.
உடனே என்னை தொடர்பு கொண்டனர்.நானும் அங்கு சென்ற போது, அவனை பிணமாய் பார்த்தவுடன் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.தமிழ் மொழி தெரியா விட்டாலும் என்னிடத்தில் எப்போதும் அன்பாய் ஹிந்தி யில் பேசுவான்.என் அனைத்து குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவன், இப்போது பிணமாய் பார்க்கவும்.அழுகை முட்டி கொண்டு வந்தது.சுருண்டு கிடந்தபடி... எறும்புகள் மொய்த்த படி...ரத்த காயங்களுடன் கிடந்தான்..பார்க்கவே பரிதாபமாய்......
மணி 10 ஆயிருந்தது.ரயில்வே துறையை சேர்ந்த கீமென் வந்து பார்த்த பின்பு தான் ரயில்வே போலீசாருக்கு இன்பார்ம் பண்ணுவாராம்.அவரும் வந்த பாடில்லை.என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. கோவை மாவட்ட புதிய கமிசனர் ஒரு எண் கொடுத்திருக்கிறார்.அதில் இன்பார்ம் பண்ணியவுடன் ஸ்குவாடு போலீசார் வந்து அவர்கள் என்குயரி செய்து பின் ரயில்வே போலீசாருக்கு இன்பார்ம் செய்தனர்.
ரயிலில் அடிபட்ட கேஸ் களை விசாரிக்க நமது காவல் துறைக்கு அதிகாரம் இல்லையாம்....அப்புறம் மணி 2 மணி ஆனது.இன்னமும் அவன் அப்பிடியே கிடந்தான்.பின்னர் தாமதமாய் வந்து ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் போது மணி 4 .போஸ்ட்மார்டம் பண்ண இப்போது முடியாது என்று சொல்லிவிட்டனர்.அப்புறம் இன்று காலை 9 .30 மணிக்கு போஸ்ட் மார்டம் செய்தனர்.அப்புறம் போலீஸ் சம்பிரதாயங்கள் முடித்துவிட்டு 4 மணிக்கு பாடியை கொடுத்தனர்.
இப்போது தான் அடக்கம் பண்ணி விட்டு வந்தோம் .நினைவுகள் நீங்காமலே அவனையே சுத்தி கொண்டு இருக்கிறது.அவனின் முகம் இன்னும் பசுமையாய் இருக்கிறது.எங்கிருந்தோ வந்து.. மொழி தெரியாமல்,இங்கு பிழைப்பை தேடி கொண்டவனின் முடிவு மிகவும் சோகமானதாய் இருந்து விட்டது.அவனின் முகம் பார்க்காமல் அவனின் பெற்றோர் மனம் என்ன பாடு படுமோ ..?
அவர்கள் அங்கிருந்து இங்கு வந்து சேரவே மூன்று நாட்கள் ஆகிவிடும்..அதுவரைக்கும் அவனது பாடியை வைக்க வேண்டாம், அங்கேயே அடக்கம் பண்ணிவிடும்படி சொல்லி விட்டனர்.கடைசி காலத்தில் கொள்ளி போட ஆள் இல்லாமல், அவனுக்கும் கொள்ளி வைக்க முடியாமல் அவர்களின் நிலையை நினைத்தாலே பதறுகிறது.அவனுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்..


சோகங்களுடன்

ஜீவானந்தம்

2 comments:

  1. ஜித்துவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்....
    rajeshnedveera

    ReplyDelete
  2. பிழக்க வந்த இடத்தில் இப்படியா ஜித்து ஆத்மா அமைதி அடைய இயற்க்கையை வேண்டுகிறேன் நட்புடன் நக்கீரன்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....