Sunday, July 3, 2011

கிராமத்து நினைவுகள் - திருமுக்கூடலூர்(THIRUMUKKUDALUR)

(THIRUMUKKUDALUR)
அப்புறம்...திருமுக்கூடலூர்.... இந்த ஊர் என்னோட பிறந்த ஊர்.என் பெற்றோர்கள் இங்குதான் உள்ளனர்.கோவை நகர பரபரப்புலிருந்து விடுபட இங்கு சென்று ஓய்வு எடுப்பது வழக்கம்.சுத்தமான காற்று, அமைதியான சூழ்நிலை, வாகன நெரிசல் அற்ற, மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய இடம்.அப்புறம் எங்களுக்கென்று ஒரு தோட்டம் உள்ளது.அதில் தென்னை, நெல் மற்றும் கோரை உள்ளது.





தோட்டத்தில் உள்ள மோட்டாரில் ரொம்ப நேரம் குளித்து விட்டு ஒரு இளநீர் சாப்பிட்டால் அந்த சுகம் வேறு எங்கும் கிடைக்காது.கயிற்று கட்டிலில் படுத்தால் உடனே உறக்கம் வரும்..அந்த அளவுக்கு அமைதி....கொடுத்து வைத்தவர்கள் இந்த கிராமத்து மக்கள்.சிறு வயது ஞாபகங்களை கிள்ளி பார்க்கின்ற கிராமத்து நினைவுகள்.ஆற்றில் குளித்தும் , மீன் பிடித்தும் விளையாண்ட கணங்கள் இப்போதும் இனிக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

3 comments:

  1. வாகன நெரிசல் அற்ற, மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய இடம்.//

    இனிக்கும் மலரும் நினைவுகளுக்கு வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள், ராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  3. சிறிய வயதில் எங்களுக்கும் இதே போல் ஒரு காடு இருந்தது....ஆனால் இப்போது இல்லை....இந்த படங்களை பார்த்தவுடன் flashback-ற்க்கு சென்றுவிட்டேன்......

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....