Thursday, July 21, 2011

கொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 1

எனக்கு ரொம்ப பிடிச்ச ஊரு இது.ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் நிறைய இருக்கின்றன.பயங்கரமான வளர்ச்சி.கேரளா விற்கே உரித்தான பசுமை , மழை சாரல்,சுத்தமான காற்று..அப்புறம் மலையாள பெண்கள் ..ஆகா ..அற்புதம் ....அப்புறம்


கொச்சின் அருகே போர்ட் கொச்சின் என்கிற ஊர் இருக்கிறது.இங்கே செல்ல இரண்டு வழிகள் உள்ளன.ஒன்று கடல் வழி..மற்றது தரை வழி.கடல் வழி செல்ல படகு போக்குவரத்து உள்ளது.கடலில் செல்லும் போது அங்கே நிற்கின்ற கப்பல்கள் பார்க்கலாம்.அதுவும் இல்லாமல் தண்ணியில் சென்றால் ( போடுகிற தண்ணி இல்ல ) மிகவும் மகிழ்ச்சி கரமாக இருக்கும்.விலையும் குறைவு.வெறும் 2 .50 ரூபாய்தான்.அந்த துறையினை போட் ஜெட்டி என்று அழைக்கிறார்கள்.


அப்புறம் அங்க போய்ட்டு கேரளாவின் பாரம்பரியமான மீன் பிடி தொழிலை பார்க்கலாம்.டச்சு காரர்கள் வந்து இறங்கிய இடம் இதுதான்.இங்கு அவர்களின் அரண்மனை உள்ளது.அப்புறம் அதிகமான வெளிநாட்டு பயணிகள் குவிகின்றனர்.அங்கு பிடிக்கப்படும் மீன்கள் அங்கேயே விற்பனை செய்யபடுகின்றன.விரும்பினால் சமைத்தும் தருவார்கள்.

கப்பல் கட்டும் தளம் வேறு உள்ளது.ஒவ்வொரு வருடமும் கடற்படை ஆண்டு விழா கொண்டாடுவார்கள் .அன்று மக்களுக்கு கப்பலை சுற்றி பார்க்கஅனுமதி இலவசம்.

இன்னும் இருக்கிறது ..தொடரும் ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. நானும் போகணும்னு நினைச்சிக்கிட்டிருக்க ஊரு. போகும் முன் நிச்சயம் உங்களிடம் தொலை பேசி விபரங்கள் தெரிஞ்சுக்குறேன்

    ReplyDelete
  2. கண்டிப்பா ...உங்க வரவை எதிர்நோக்கி...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....