Thursday, August 25, 2011

கோவை மெஸ் - திண்டுக்கல் வேணு பிரியாணி, திண்டுக்கல்

 திண்டுக்கல் வேணு பிரியாணி - திண்டுக்கல்
என்னமோ தெரியல இந்த வாரம் பிரியாணி வாரம் போல இருக்கு.பொள்ளாச்சிக்கு அப்புறம் திண்டுக்கல்...விசயத்துக்கு வாரேன்.நேற்று திண்டுக்கல் போனேன்.நிறைய ஊரில கிளைகளை பரப்பி இருக்கிற வேணு பிரியாணி கடைக்கு போனேன்.சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிற மாதிரி திண்டுக்கல் வேணு பிரியாணி கடைக்கு போனேன்.





மதியம் 12 .30 மணிக்கு போனதால் இடம் கிடைத்தது.பிரியாணி, வஞ்சிரம், கோலா உருண்டை ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம் .மிக மிக ......சுவையுடன் ...மிக ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.அப்புறம் வெளியே வந்து பார்த்தால் கூட்டம் கியூல நிக்குது.அப்புறம் உட்காருவதற்கு தென்னை ஓலை வேயப்பட்ட கூரை இருக்கிறது.3 மணி இல்லேனா 3 30 மணிக்குள் தீர்ந்து விடுமாம்.நீந்துறது, நடக்கறது , ஓடறது அப்புறம் பறக்கிறது (விமானம்) தவிர அனைத்து அசைவ வகைகள் இருக்கின்றன.சாப்பிட தான் வயிற்றுல இடம் இல்ல.வேணு பிரியாணி தெற்கு ரத வீதியில் இருக்கிறது.அரை பிளேட் பிரியாணி 130 வஞ்சிரம் ரொம்ப பெரிய சைஸ் 120 ....விலை யை விட தரமும் சுவையும் ரொம்ப ரொம்ப அதிகம்....நான் ஏசி மற்றும் ஏசி ஹால் இருக்கிறது.



நேசங்களுடன்
ஜீவானந்தம்



10 comments:

  1. நீங்கள் குறிப்பிடுவது சரி.
    தரம் மட்டும் அல்ல
    குடும்பத்தோடு போய் சாப்பிடக்கூடிய
    நல்ல சுழலுமாக இருப்பதால் எப்போதும்
    கூட்டம் அலைமோதுகிறது
    யாரும் விலை குறித்து கவலைப் படுவதில்லை
    படங்கள் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பிரியாணி பார்க்க வைத்து நெஞ்சில் ஆசையை தூண்டி விட்டீரே நண்பரே

    சரி நண்பரே எனக்கும் சேர்த்து சாப்பிட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன் .

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. இரண்டாவது படம்.... பசிக்கிற வேளையில், நல்லா சப்பு கொட்ட வைக்குதே....

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி super!

    ReplyDelete
  5. வாங்க ரமணி சார்...
    நண்பர் M .R க்கு நன்றி
    சித்ரா மேடம் நன்றி
    விக்கி வாங்க ..வாங்க நன்றி

    ReplyDelete
  6. வேணு பிரியாணி ஸ்பெசலே பைனல் டச்சா தருகிற பாயாசம்.அதுக்கு நான் அடிமை.திண்டுக்கல்ல அது தர்றாங்களா?

    ReplyDelete
  7. வாங்க உலக சினிமா நண்பரே ...
    ஆகா..சொல்ல மறந்துட்டனே ..பாயாசம் தந்தாங்க..அருமை .நன்றி .

    ReplyDelete
  8. ஹோட்டல் ஃபோட்டோ போட்டது ஓக்கே.. ஏன்யா சாப்பட்டை கண்ல காட்டி உசுப்பேத்துறீர்?

    ReplyDelete
  9. அதெப்படி வேணு பிரியாணி கோயம்புத்தூர், திருப்பூர் , பொள்ளாச்சி நு எங்க சாப்பிட்டாலும் ஒரே சுவையா இருக்கு?

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....