Friday, August 26, 2011

கோவை மெஸ் - பேமஸ் ஜிகர்தண்டா, மதுரை

மதுரை அப்படின்னாலே மீனாட்சி அம்மன் கோவில் தான்.அதுக்கு அப்புறம் மல்லி, அப்புறம் விடிய விடிய சூடா கிடைக்கிற இட்லி, (யாருப்பா அது ..இங்க வந்து அழகிரி பேரை சொல்றது ..)அப்புறம் நாயக்கர் மஹால், காந்தி மண்டபம்..இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.
    ஆனா இதையெல்லாம் தாண்டி ரொம்ப பேமஸ் என்னன்னா அது ஜிகர்தண்டா தான்.என்னா சுவை ..என்னா டேஸ்ட்...அய்யோ ..சும்மா ஜில்லுனு கொஞ்சம் வாயில் இறங்கினால் அடடா ...அற்புதம்.மறக்க முடியாத சுவை.நம்ம பேமஸ் ஜிகர்தண்டா கடையில எப்பவும் கூட்டம் இருக்கிறது.மதுரைக்கு எப்போ போனாலும் குடிக்கிற பானம் இதுதான். நிறைய ஜிகர்தண்டா கடைகள் இருந்தாலும் இந்த பேமஸ் ஜிகர்தண்டா தான் டேஸ்ட்ல பெஸ்ட்.சாதா 10 ரூபாய் , ஸ்பெசல் 30 .அப்புறம் பாசந்தி கிடைக்கும்.விளக்குதூண் கீழ மாரட் வீதி அருகில் இருக்கிறது கடை.



நேசங்களுடன்
ஜீவானந்தம்

11 comments:

  1. ஜிகிட் தண்டா பெயர்க்காரணம் கூறுக

    ReplyDelete
  2. ஜில் ஜில் ஜிகர்தண்டா.. அதுதானா இது.

    ReplyDelete
  3. கேள்விப்பட்டுருக்கேன் ஜில் ஜில் ஜிகர்தண்டா! குடிச்சதில்ல! இந்தியா வந்தால் குடிக்கணும்!

    ReplyDelete
  4. ஜி, வாங்க பாஸ்..ரொம்ப நல்லா இருக்கும்

    ReplyDelete
  5. ராம்வி,
    ஆமாங்க ..ரொம்ப காலம் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்தது.காதல் அப்படிங்கிற படத்துல ஹீரோயின் குடிக்கிறதா காட்டுவாங்க ....அதில் இருந்து உலக பிரசித்தம்

    ReplyDelete
  6. சென்னையில் ஒரு முறை ஜிகர்தண்டாசாப்பிட்டுட்டு இங்கே (பதிவின் இறுதியில்) எழுதிருக்கேன் பாருங்க

    http://veeduthirumbal.blogspot.com/2011/06/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா படிக்கிறேன் சார்

      Delete
  7. worlds class star hotel pasumalaihill hotel in pasumalai. vary good tasy tamilnadu food also available. nice &finest one.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா போறேன்..சாப்பிடறேன்.....

      Delete
  8. அருமை ஜீவா...... நீங்களும் அந்த சுவையில சொக்கிடீங்க போல !! அதுல எதுவும் மிக்ஸ் பண்ணலையா ?

    ReplyDelete
    Replies
    1. அதிலயும் மிக்ஸா.....பண்ணிடுவோம் சுரேஷ்

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....