Sunday, March 4, 2012

கிருஷ்ணா ஸ்வீட்ஸ்--கோவையின் பெருமை-2

கொங்கு நகரமாம் கோவையின் பெருமைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாய் அரங்கேற்றம்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
கோவையின் சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.ஒரு காலத்துல மைசூர்பா என்றாலே கெட்டியா, ரொம்ப கடுக்குனு கல்லு மாதிரி  இருக்கும்.இந்த மைசூர்பா பத்தி இல்லாத ஜோக்கு களே இல்லை எனலாம்.மைசூர்பா வீசி மண்டைல  காயம், சாப்பிட்டு பல்லு போனது, இப்படி நிறைய...

அதெயெல்லாம் மாத்தி வாயில வச்சாலே கரையிற மாதிரி மாத்தினது நம்ம கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான்.கையில் தொட்டாலே போதும் உடையிற மைசூர்பா நம்ம கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான்.முழுக்க முழுக்க பசும் நெய்யினால் செய்வதால் இப்படி பட்ட மிருதுவான மைசூர்பா வாக இருக்கிறது.நம்ம வீடு பக்கத்துல தான் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தயாரிக்கிற இடம் இருக்கிறது.அந்த ஏரியா கிராஸ் பண்ணும் போது அடிக்கிற  நெய்யின் மணம் அப்படியே ஆளை தூக்கும்.இன்னிக்கு கடைக்கு போலாம்னு முடிவு பண்ணி உள்ளே நுழைந்தேன்.காரணம் நம்ம பேவரைட் ரசமலாய் தான். (அளவுக்கு அதிகமா மைசூர்பா சுவைச்சதால் என்னவோ இப்போ ரொம்ப  பிடிக்க மாட்டேங்குது) சும்மா சில்லுனு இருக்கும்.வாங்கி ரசித்து ருசித்து சாப்பிட்டேன்.

அப்புறம் இங்க தாம்பூலம் செட் அப்படிங்கிற ஸ்வீட் கிடைக்கும் ..அது என்னன்னா தேங்காய், வாழைப்பழம், வெத்தலை பாக்கு, பழம் வகைகள் என இருக்கும்.அப்படியே தத்ருபமாக செய்து இருப்பார்கள் அப்புறம் .பட்டுபுடவை கூட செய்து தருவாங்க...பட்டு ல இல்ல ....ஸ்வீட்ல தான்.அப்புறம் இருக்கிற காரம், ஸ்வீட் களோட விலையும்  ரொம்ப அதிகம்.எப்ப விலை ஏத்துவாங்கன்னு தெரியாது.ஆனால் விலை கூடிகிட்டே இருக்கும்.அப்புறம் மக்கள் கியூவுல நின்னு வாங்குற கடை எதுன்னா அது இது தான்.
இந்த நிறுவனம், குறை ஒன்றுமில்லை, எப்ப வருவாரோ, வல்லமை தாராயோ , கண்மணி கதைகேளு , நலம் தானா, உடலும் உள்ளமும் போன்ற தலைப்புகளில் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும்  வருகிறது. ஆன்மிக நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்தி வருகிறது.இந்த நிறுவனர்க்கு கௌரவ டாக்டர் பட்டம் கூட வழங்கி இருக்காங்க...
அடுத்த  கோவையின் பெருமை

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

13 comments:

 1. அருமையான பதிவு.
  மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நாக்கில் எச்சி ஊற வைத்ததுக்கு கண்டனங்கள் ஹெஹெ!

  ReplyDelete
 3. பதிவர்கள் ஆபாசமானவர்களா?

  இந்த இடுகையின் கமெண்ட்டை படித்து பதிவர்களாகிய நீங்களே தீர்ப்பு சொல்லுங்க
  http://www.tamilvaasi.com/2012/03/simple-ways-to-increase-battery-life-of.html

  ReplyDelete
 4. இந்த நிறுவனம், குறை ஒன்றுமில்லை, எப்ப வருவாரோ, வல்லமை தாராயோ , கண்மணி கதைகேளு , நலம் தானா, உடலும் உள்ளமும் போன்ற தலைப்புகளில் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறது.

  இனிப்போடு அருமையான பகிர்வுகள்..
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. அந்த தாம்பூல செட் ஸ்வீட் பார்க்கும்போது உடைச்சு சாப்பிடவே மனசு வராது போல. அவ்வளவு தத்ரூபமா இருக்கே. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 6. யோவ்.. அப்புடியே நம்ம சுப்பு மெஸ்ஸைப் பற்றி ஒரு பதிவு போடவும்...

  ReplyDelete
 7. கண்டிப்பா.....போட்டுடுவோம் வெளங்காதவன் ...பேரே ஒரு மாதிரியா இருக்கே...

  ReplyDelete
 8. ஆமாங்க ராஜி...இதை விட அந்த பட்டு புடவை இன்னும் நல்லா இருக்கும்

  ReplyDelete
 9. ரொம்ப நன்றி ஸ்ரீநிவாசன் ..நம்ம ஏரியா வுக்கு வந்ததுக்கு

  ReplyDelete
 10. ஸ்வீட் தின்னும் ஆசை மனிதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை .., தொடரட்டும் தங்கள் பயணம் ...!

  ReplyDelete
 11. தாம்பூல செட் அருமையாக இருக்கிறது.
  பட்டு புடவை, பட்டு வேஷ்டி மைசூர் பாகு வெகு அழகாய் இருக்கும் நான் பார்த்து இருக்கிறேன்.

  பகிர்வு இனிமை.

  ReplyDelete
 12. ஒரு நிமிடம், ஸ்வீட் கடையில் வாழைப்பழம், தேங்காய்லாம் என்ன பண்ணிட்டு இருக்குன்னு குழம்பிட்டேன்..! ரூம்போட்டு உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ..! :)

  ReplyDelete
 13. க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் உங்கூரா? சென்னையில எங்க பாத்தாலும் கடை இருந்துச்சா.. மெட்ராஸ் காரவுகனு நெனச்சுட்டேன். எது நல்லா இருந்தாலும் உடனே எங்களதுனு சொல்லுறது சென்னைக்காரங்க பழக்கம்.
  இந்தத் தடவை தான் முதல் முதலா டேஸ்ட் பண்ணக் கிடைச்சுதுங்க.

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....