Friday, March 9, 2012

ஆடியோ கேசட்...ஒலிநாடா - மலரும் நினைவுகள்,


ஆடியோ கேசட்...ஒலிநாடா...ரொம்ப நாளைக்கு அப்புறம் இதை பார்க்கும் போது மனசுக்குள் மத்தாப்பு பூக்கிறது.சிறு வயசில் பாடாத கேசட் எங்காவது கிடைத்தால் அதை எடுத்து அதில் உள்ள ஸ்குரு கழட்டி அலுங்காம குலுங்காம அதில் உள்ள பிலிம் கலையாம அந்த சக்கரத்த எடுத்து ரோட்டுல உருட்டுனா எவ்ளோ தூரம் போகும்னு ஒரு ஆராய்ச்சி செய்வோம் பாருங்க அதை இன்னிக்கும் மறக்க முடியாது.

அப்புறம் அந்த பிலிம் எடுத்து வீடு முற்றத்துல காய வச்சி இருக்கிற பழைய சோத்துல செஞ்ச வடாம், அப்புறம் வத்தல் இவைகளை காக்கா குருவி கொத்திட்டு போய்ட கூடாதுன்னு இத இரண்டு கம்புக்கு நடுவுல கட்டி அது போடுற படபடக்கிற சத்தத்துல கேட்கிற இனிமை இருக்கே அதை இன்னும் மறக்க முடியாது.அடிக்கிற வெய்யிலில் இந்த பிலிம் காட்டுகிற பளபளப்பு இருக்கே அது இன்னும் நம்ம கண்ணுல ஓடிக்கிட்டே இருக்கு.இதெல்லாம் சிறுவயசு அனுபவங்கள்.
கொஞ்சம் பெரிய பையன் ஆனவுடனே நமக்கு பிடித்த பாட்டுகளை வரிசைப்படி பதிவு பண்ணி சவுண்ட அதிகமா வச்சி கேட்கிற சுகம் இருக்கே அது தனிதான்.....அப்போ கம்பெனி கேசட் ரொம்ப விலை அதிகம்னு லோக்கல் கேசட் வாங்கி அதுவும் அந்த இரண்டு பிலிம் சக்கரங்கள் வெளியே தெரிகிற மாதிரி இருக்கிற ட்ரான்ஸ்பரன்ட் கேசட் வாங்கி அதுல ரெகார்ட் பண்ணி பாட்டு கேட்ட சுகம் இருக்கே.....அருமை தான் போங்க....அப்புறம் அந்த பக்கம் இந்த பக்கம் இருக்கிற பக்கத்து வீடு பொண்ணுகளை திரும்பி பார்க்கிற மாதிரி நம்மகிட்ட இருக்கிற காதல் பாடல்களை கொஞ்சம் சத்தமா வச்சி நம்ம மனசை தொறந்து காட்டியது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
கேசட் கடைக்கு போனால் அங்க விதம விதமா பதிவு பண்ணி வச்சி இருக்கிற கேசட் வாங்கி வீட்டில் வந்து தனிமையில் கேட்கும் போது இருக்கிற சுகம் இருக்கே ...அடடா....
அதுக்கப்புறம் காலேஜ் படிக்கும் போது தங்கி இருந்த ரூமுக்கு அசெம்பிள் செட்டு வாங்கி முதல் முறையா வாங்கின கேசட் போட்டு கேட்ட பாட்டு ஒத்த ரூபாய் தாரேன்...பாட்டு சும்மா பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆன பாட்டு...அதை கேட்டு கேட்டு சலித்து போனது ஒரு நேரம் ....அப்புறம் நம்ம திண்டுக்கல் லியோனி யோட பட்டி மன்ற கேசட்..பழைய பாடல்களா புதிய பாடல்களா ..மனமா குணமா...இப்படி நிறைய, எஸ் வி சேகர் நடித்த அனைத்து நாடக கேசட்களும் கேட்டு இருக்கிறேன். அதுக்கு அப்புறம் நாகரீக வளர்ச்சியில் இவை காணாமல் போய் விட்டது. 
2009ல கூட நான் வாங்கின முதல் காருல (பியட் யுனோ ) சோனி யோட கேசட் பிளேயர் தான் இருந்துச்சு.கோவையில் சுத்தும் போது எப் எம் இருக்கிறதால் ஒண்ணும் தெரியல....ஆனா ஒரு தடவை சேலம் போகும் போது கேசட் இல்லாதால் நான் பட்ட பாடு  இருக்கே...ஐயோ....அதுக்கப்புறம் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற ஒரு கடையில கேசட் 60 ரூபாய் என்ற விலையில் 5 கேசட் வாங்கினேன்...ஆகா...இப்படி கொடுத்து கட்டு படியாகாதே என்று காரில் உள்ள செட்டையே மாற்றி விட்டேன்...அதுக்கப்புறம் காரையே மாத்திட்டேன்..இப்போ USB  வந்து விட்ட படியால் எவ்ளோ பாட்டு வேணும்னாலும் சேவ் பண்ணிக்கலாம்...டெலிட் பண்ணிக்கலாம்... 
என்ன இருந்தாலும் கேசட் இருந்த காலத்துல அதுக்காக நேரம் செலவழிச்சு புடிச்ச பாட்டுக்களை ஒரு பேப்பரில் எழுதி கிட்டு ரெகார்டிங் பண்ற இடத்துல போய் அவங்க கிட்டே பாட்டு நல்லா பண்ணி குடுங்க அப்படின்னு தனியா சொல்லி அதுக்கப்புறம் அது ரெடியான பின்னே வாங்கி வந்து கேட்டு நாம எழுதி குடுத்தது  வரிசைப்படி இருக்கா அப்படிங்கிறத செக் பண்ற ஆவல் இருக்கே....அப்புறம் அவங்க குடுத்த கேசட் கவரில் வரிசைப்படி எழுதுகிற சுகம் இருக்கே ...அதெல்லாம் ஒரு காலம்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

3 comments:

 1. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனே...அருமையான ஞாபகப் பதிவு

  ReplyDelete
 2. ஜீவா சார் எல்லோருடைய பிளாஸ்பேக்கையும் திரும்பிபார்க்கிறமாதிரி பிளாக்கை எழூதுரிங்கே கடந்த 2 பிளாக்குமே வித்தியாசமான முயற்சி பாராட்டூகள் கிராமத்து தொழிற்சாலை போட்டோ சூப்பர் பாராட்டூகள் அடூத்து எந்த ஊரு சார்?

  ReplyDelete
 3. பழைய மலரும் நினைவுகளை மீண்டும் ஞாபகத்தில் கொண்டு வர வச்சிடேங்க.
  நல்ல பதிவு

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....