Wednesday, March 7, 2012

கோவை மெஸ் - ஹோட்டல் ஹேமலா (HOTEL HEMALA) - கரூர்

கடந்த சனி இரவு எங்காவது ஹோட்டலுக்கு போலாம்,  பதிவுக்கு ஏதாவது தேத்தலாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டு கரூர்ல இருக்கிற 3 ஸ்டார் ஹோட்டல் ஹேமலா வுக்கு போனோம்..கரூர்க்கு இந்த மாதிரி ஹோட்டல் புதுசுதான்.முன்பு நந்தினி ஹோட்டல் இருந்தது, ரொம்ப பேமஸ் ஆன ஹோட்டல்.இப்போ அது இடிக்கப்பட்டு வணிக வளாகம் ஆக மாற்றப்பட்டு இருக்கு.சரி..ஹேமலா வுக்கு வருவோம்....உள்ளே நுழைந்தோம்...கிரீன் ரெஸ்டாரன்ட்..நல்ல இன்டீரியர் அமைப்புடன் இருக்கு..

மெனு கார்டு பார்த்தவுடனே....புறப்படலாமா ...அப்படின்னு ஒரு எண்ணம்....கோவையில கூட இவ்ளோ ரேட் இல்ல...சரி..குடும்பத்தோட வந்தாச்சு...என்ன பண்றது...சூப் ஆர்டர் பண்ணினேன்.....70  ரூபாய்....(மயக்கமே வந்துச்சு....சரக்கே 70  க்கு கிடைக்குமே...)அப்புறம்..மட்டன் கொத்து கறி, சிக்கன் 65 ..(பாருங்க தட்டுல வெறும் 8 பீஸ் தான்...130 ரூபாய்... )மட்டன் பிரியாணி, அப்புறம் புல்கா (டிவி விளம்பரத்துல நம்ம சினேகா அக்கா அடுப்பு மேல அப்படியே சுட்டு எடுப்பாங்களே அதுதான் )..பிய்க்க முடியல..சாப்டாவே இல்ல...அப்புறம்...பட்டர் நான்...இது அதுக்கு மேல.....எப்படியோ.....எல்லாம் சாப்பிட்டோம்..










என் பெற்றோர்கள் முதல் முறையா ஹோட்டலில் நான் வெஜ் சாப்பிடுவதால் அவங்களுக்கு அந்த டேஸ்ட் தெரியல...நம்மதான் வர்ற வாசனையை வச்சே மோப்பம் பிடிக்கிற ஜாதி ஆச்சே...விடுவமா...கொத்து கறி மட்டும் நல்ல டேஸ்ட் ..மத்தது எதுவும் நல்லாவே இல்ல...விலையும் தான்.....அம்மாடி. மொத்தம் நாலு பேர் தான் ......1045  வந்திச்சு...கோவையில் திண்டுக்கல் வேணு பிரியாணி அவ்ளோ டேஸ்ட் இருக்கும்.விலை 120 மட்டும்தான்..இங்க பிரியாணி அப்படிங்கிற எந்தவித அறிகுறியும் இல்ல...ஆனாலும் 130 ரூபாய். இப்படி எல்லாம் பதிவ தேத்த எவ்ளோ காசு செலவு பண்ண வேண்டி இருக்கு பாருங்க...அப்புறம் சர்விஸ் நல்லா பண்றாங்க...முக்கியமா...நாம சாப்பிடிற டேபிளுக்கே சரக்கெல்லாம் சப்ளை பண்றாங்க...( நான் எதுவும் சாப்பிடில...(ஹி..ஹி..ஹி..விலை அதிகம்ன்னு )நமக்கு தான் அரசு பார் இருக்கே...)
அப்புறம் யாரோ ஒரு புண்ணியவான் விலை லாம் கேட்டதால் தான் விலையோடு எழுதி இருக்கேன்.

 
கரூர்ல இருக்கிற டெக்ஸ்டைல் முதலாளிகள், கந்து வட்டி ஓனர்கள் இவங்கலாம் போய் சாப்பிடலாம்...நம்மள மாதிரி ஆளுங்க எப்பவாவது வருசத்துக்கு ஒரு தடவை  போய் பார்க்கலாம்..கரூர் சர்ச் அருகில் போலீஸ் லேன் தெருவில் (லேன் னாலும் தெரு னாலும் ஒண்ணு தானே ) இருக்கிறது இந்த 3  ஸ்டார் ஹோட்டல்..

 நேசங்களுடன்
ஜீவானந்தம்

10 comments:

  1. இன்டீரியர் நன்றாக உள்ளது. விலை அதிகம்தான். லேன் என்றால் சந்து என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. ம்..

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  3. Soup for soup boys available here. Is it? But as you said 70 rs is too much...

    ReplyDelete
  4. jeeva sir recentua potta 3 blog nallairuntchi main a photos super.after long time u had written 3 blogs we expect more from you

    ReplyDelete
  5. ஜீவா சார், நான்தான் அந்த புண்ணியவான். என்னை புண்ணியவான் ஆக்கியதற்கு நன்றி. வேலை காரணமா கொஞ்சம் படிக்க தாமதம் ஆகிவிட்டது. கட்டுரை நல்ல இருக்கு. இங்கே நிறைய பேர் மிடில் கிளாஸ் தான். இன்னமும் விலை பற்றி ஒரு எச்சரிக்கை உணர்வு நிறைய பேருக்கு இருக்கும் -கறது ஏன் கருத்து . நீங்க எழுதறதும் ஒரு பப்ளிக் அவேர்னஸ் தான். வாழ்க உங்கள் பணி .

    ReplyDelete
  6. வாங்க..சிங்கை....ஜெயராமன்...நன்றி

    ReplyDelete
  7. sir, nan thirunelveli karan, but 6 yearsa than intha kovaila iruken...ippo marrige akiruchi..nanga ellam familyya pora mathiri middle class hotel sollunga..pls..appo than en parsukum nalladu...

    ReplyDelete
  8. hemala is too costly and there is not hotel in karur for family outing, either too costly with no taste or too bad with no taste.

    ReplyDelete
  9. நன்றி தன்ஸ் ..கரூர் இன்னும் முன்னேறவே இல்லை...இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தன்னோட அடையாளத்த இழந்துட்டு வருது...எந்த ஒரு ஹோட்டல் கூட நல்ல சுவையுடன் இல்லை எனபது வருத்தம்..ஒரு காலத்தில் அறிஸ்டோ இருந்தது...இப்போ அது டாஸ்மாக் விக்கிற அளவுக்கு போய் விட்டது...அதே போல் அமுதா ஹோட்டல்..இப்போ இருக்கா இல்லையான்னு தெரியல...

    ReplyDelete
  10. நன்றி தன்ஸ் ..கரூர் இன்னும் முன்னேறவே இல்லை...இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தன்னோட அடையாளத்த இழந்துட்டு வருது...எந்த ஒரு ஹோட்டல் கூட நல்ல சுவையுடன் இல்லை எனபது வருத்தம்..ஒரு காலத்தில் அறிஸ்டோ இருந்தது...இப்போ அது டாஸ்மாக் விக்கிற அளவுக்கு போய் விட்டது...அதே போல் அமுதா ஹோட்டல்..இப்போ இருக்கா இல்லையான்னு தெரியல...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....