Friday, March 16, 2012

போலிகளின் சாம்ராஜ்யம் – டிவிகள்


வர வர டிவி களுக்கு விவஸ்தை இல்லாமல் போய் விட்டது.போலிகளை ஊக்குவிக்க இவர்களும் துணை போவது தான் வருத்தமாக இருக்கிறது..(கூட நம்ம டிவி மெகா சீரியல் அம்மணிகள் வேற.ஒருவேளை அங்கேயும் நடிக்க தான் கூப்பிடறாங்களோ) காலங்காத்தால டிவி பக்கம் போனால் போதும்,ஒரு டிவியில் பெயர் மாத்தினால் போதும் உங்களுக்குஅதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் அப்படின்னு ஒரு அம்மா.... (எனக்கொரு சந்தேகம்...ஊர் ஊரா லேகியம் விக்கிற மாதிரி ஒவ்வொரு ஊரிலேயும் எப்படி லாட்ஜ் போட்டு வியாபாரம் பண்றாங்கன்னு)



 கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ஆளு ..பார்க்க டீசண்டா இருக்காரு (ஏமாத்துவதற்கு கூட முக லட்சணம் வேணும் போல ) இவரு பேர படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும் போல..இதுல எப்படி ஞாபகம் வச்சி எழுதறது..?...அவரு வேற....




அதுக்கு அப்புறம் இன்னொரு டிவியில் சாமியார் மாதிரி இருக்கிற மாந்திரீக வாதியின் பேட்டி.. (ஆளானபட்ட நித்தியானந்தாவே போலின்னு தெரிஞ்சு போச்சு.... இவரெல்லாம் எம்மாத்திரம்)  .....



அப்புறம்...இன்னொருத்தர் .பார்க்க இளையராஜா அண்ணன் மாதிரியே இருக்காரு .வெள்ளையும் சொள்ளையுமா....



அப்புறம் என்ன.. ஏமாறுவதற்கு மக்கள் ரெடி....  ஏமாத்த இவங்களும் ரெடி.....  


நேசங்களுடன்
ஜீவானந்தம் 


4 comments:

  1. இதுமாதிரி விஷயங்கள்ல ஏமாந்து புலம்பறவங்க மேல எனக்குக் கோபம்தான் வரும். நல்லாச் சொல்லியிருக்கீங்க....

    ReplyDelete
  2. சரியாய் சொன்னிங்க

    ReplyDelete
  3. இப்போ டிவி சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகிப் போச்சு.எப்படியாவது பணம் சம்பாதிக்கணும்னு இது மாதிரி புரோக்ராம்லாம் வருது.மக்கள் விழிப்புணர்வுக்காக நல்லா சொல்லி இருக்கீங்க...

    ReplyDelete
  4. தெளிவா...பொழைக்கிறாங்க..என்ன பண்றது

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....