Tuesday, March 27, 2012

கோவை மெஸ் - ஸ்ரீ ரகு ரெஸ்டாரன்ட் - sri Ragu Restaurant

ஸ்ரீ ரகு ரெஸ்டாரன்ட் :

சரவணம் பட்டி குமரகுரு காலேஜ் பின்புறம் இருக்கிற ரோட்டில் கொஞ்ச தூரம் தள்ளி இந்த ஹோட்டல் இருக்கிறது.
இந்த ஏரியாவில் வேலை செய்கிற சாப்ட்வேர் பார்ட்டிகளுக்கு, காலேஜ் வாசிகளுக்கு என்று திறக்க பட்ட ஹோட்டல். தனித் தனி குடில் அமைப்பில் இது இருக்கிறது.ஹால் வசதியும் இருக்கிறது.நண்பரின் கல்யாண நாள் என்பதினால் இங்கு சென்றோம்...எப்பவும் போல ஆர்டர் பண்ணிட்டு இருபது நிமிஷம் காத்திட்டு இருந்தோம்...குல்ச்சா, சிக்கென் டிக்கா, லாலி பாப், பிரைட் ரைஸ், சிக்கன் மசால், பிரான் பிரை ..இதை எல்லாம் எதிர் பார்த்திட்டு...


ஆனா வந்தது என்னவோ பக்கத்து குடிலுக்கு அம்மணிகள் தான்...அந்த இரவு வேளையிலும் எவ்வளவு அழகாய் தெரிகிறார்கள்..டவுசரும் டீ ஷர்ட் போட்டு உயர்த்தி போட்ட கொண்டையுடன்.....சாப்ட்வேர் சாப்ட்வேர் தான்  ...ஹி ஹி ஹி ... அப்படியே கொஞ்ச நேரம் ...(ச்சே...அதுக்குள்ள ஆர்டர் போட்டது எல்லாம்  வந்திடுச்சே..) கழிச்சு எல்லாம் வந்து குவிந்தன..

சிக்கன் டிக்கா...ரொம்ப அருமை...அப்படியே...மாவு மாதிரி கரைகிறது...செம..செம..அப்புறம் குல்ச்சா...இது ரொம்ப சாப்ட் .இதுவும் அருமை...
லாலி பாப் தான் சைசிலும் சுவையிலும் மாற்றம்...சுவை சுத்தம்...சைஸ்..ரொம்ப சின்ன சைஸ்....காக்கா மாதிரி இருக்குமோ என ஒரு டவுட்...



அப்புறம் பிரைட் ரைஸ் எதுவும் நன்றாகவே இல்லை..ஏதோ பண்ணின மாதிரி இருந்தது.அப்புறம் பிரான் பிரையும் அப்படிதான்...சுவை இல்லை..ஆரம்பித்த புதிதில் ரொம்ப நன்றாக இருந்ததாம்...இப்போ குறைந்து விட்டது...அப்புறம்...எப்படியோ எல்லாம் காலி பண்ணிட்டு வந்தோம்...ஏதோ பக்கத்து குடிலில் அந்த அம்மணிகள் இருந்ததினால் என்னவோ ரொம்ப அமைதியாய் அனைத்தையும் ரசித்து ருசித்து சாப்பிட்டோம். (உணவைத்தான் ) சிக்கன் டிக்கா... குல்ச்சா...இது ரெண்டும் ரொம்ப அருமை.....



விலை லாம் சாப்ட்வேர் ஆளுங்களுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கு...

துடியலூர் டு சரவணம்பட்டி ரூட்டில் குமரகுரு காலேஜ் இருக்கு அதை ஒட்டி செல்லும் ரோட்டில் இந்த ஹோட்டல் இருக்கிறது...காலேஜ் அம்மணிகள், சாப்ட்வேர் அம்மணிகள் இவங்களை அதிகம் பார்க்கலாம்.காதல் தேசம் படத்தில் வருகிற மாதிரி க..க..க்க. கல்லூரி சாலை....கலர்புல் சாலை..... 

கிசுகிசு:
இங்க  நிறைய சாப்ட்வேர் கம்பனிகள், காலேஜ் இருக்கிறதால் அதிகம் லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு. (வரலாறு முக்கியம் ) அதிகம் வெளிமாநிலத்தை சேர்ந்தவங்க இருக்காங்க......அப்புறம் நிறைய நீக்ரோஸ் கூட...

நேசங்களுடன் 
ஜீவானந்தம்

6 comments:

  1. பாஸ்...உங்க கூட ஒரு நாள் வரணும் ..எப்படியெல்லாம் சாப்பிடறீங்க....

    ReplyDelete
  2. உங்களுக்கு இது தான் வேலை ன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  3. jeeva,

    kovai kutralam patri eludhungal please.

    ReplyDelete
  4. ஸ்ரீ ரகு ரெஸ்டாரன்ட் பிளாக்கு நன்றாக இருந்தது . வரலாறை காப்பத்துதற்கு உங்களை விட்ட வேறு ஆள் கிடையாது சாப்பாடு அயிட்ங்களை போட்டோ போட்டமாதிரி டவுசர் போட்ட அம்மணிகளையும் போட்டோ எடுத்துருந்தா இன்னும் சிறப்பா அமைந்துருக்கும்

    ReplyDelete
  5. படிக்கரப்பேயே.... நாக்குல எச்சி ஊருது .இப்பவே சாப்பிடலாம் போலா ஆசை வந்துருச்சு.இந்த சரவண பட்டி எங்க இருக்குனு தெரியலை சரியான ரூட்ட போடுங்க சார்.வெளியூர்ல இருந்து வரவங்க எப்படி வரது......

    ReplyDelete
  6. THESE NEGROS ARE DANGEROUS , MANY OF THEM INVOLVED IN DRUG SPREADING . WE SHOULD BE CAREFULL

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....