எது டாப்பு....எது
டிராப்பு.....
நேத்து சன் டிவியில்ஒளிபரப்பான கையில் ஒரு கோடி ப்ரோக்ராமில் அடிக்கடி
உச்சரிக்கப்பட்ட ஒரு வார்த்தை இது...
அப்புறம் இன்னொன்னும் கூட...
கேள்வி கேட்டு பணம்
கொடுப்பது பழசு
பணம் கொடுத்துட்டு
கேள்வி கேட்பது புதுசு..
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கபா
...
பிரம்மாண்ட மேடை...
கட்டு கட்டா பணம். ( அதுக்கு இரண்டு அழகான அம்மணிகள் செக்யுரிட்டி..அப்பப்ப அடுக்கி வைக்க..) நாலு
பெட்டி...இரண்டு தலைப்புக்கள்..மொத்தம் ஏழு கேள்விகள். கேட்கப்படும் கேள்விக்கு
முன்னரே பதில் வந்து விடுகிறது.அப்புறமா தான் கேள்வி.சரியான பதில் உள்ள பெட்டியில்
பணம் அடிக்கி வைக்கவேண்டும் வேற பதிலில் சாய்ஸ் இருந்தால் அங்கும் வைக்கலாம்..ஒரு
பெட்டி மட்டும் காலியாக விட வேண்டும்..மொத்தம் அறுபது செகண்ட்களில் முடிக்க
வேண்டும்.இது கொஞ்சம் புதுமை...
இங்கே கேள்விகள் கொஞ்சம்
பரவாயில்லை....விஜய் டிவியில் கேட்கப்படும் கேள்விகள் போல மொக்கையாய் இல்லை (ஈ அடிச்சான் காப்பி, கண்கட்டு , கழுத்துகட்டு எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால், இதுமாதிரி )
...ஆயினும்
தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் பதில் சொல்ல வேண்டும்.
தலைநகரம், சினிமா, இந்தியா, கலவை, அரசியல் கோவில்கள் இதுமாதிரி தலைப்புக்கள்..
...ஈஸி போல தான்
தெரிகிறது (இதுல என்ன வெடிகுண்டு இருக்கோ)....பார்ப்போம்....
என்ன அடிக்கடி இந்த
நிகழ்ச்சி நடத்துபவர் அங்கும் இங்கும் ஓடி கொன்னு எடுக்கிறார்...அப்புறம் கலந்து
கொள்பவர்கள் யாரும் ரொம்ப படித்தவர்கள் போல தெரியவில்லை...எங்கேயோ பிடித்து கொண்டு
வந்தது போல இருக்கிறது..பணத்தை மோந்து பார்த்து வாசம் பிடிக்கின்ற ஆளுங்களா
இருக்காங்க..( ம்ம் ...என்ன பண்றது...இப்படி ஒட்டு மொத்தமா பணத்த வச்சு நம்மளை அதுக்கு
அடிக்ட் ஆக்கிறாங்க.....?)
போட்டியில் தோத்து போனவங்க அடிக்கிற டிராமா இருக்கே.கட்டி புடிச்சு எல்லாம் அழறாங்கப்பா ..யப்பா..சாமி முடியல...
அதுக்கு அப்புறம் எப்பவும் போல எஸ் எம் எஸ் கேள்விகள் கேட்கிறாங்க எதுக்கு......அவங்க சம்பாதிக்க....
பாப்போம் ..போக போக
தெரிந்துவிடும் இந்த ப்ரோக்ராம்...
டாப்பா....இல்ல டிராப்பா...
இதுக்கு முன்னோடி விஜய் டிவி ஒரு கேடி
அதுக்கும் முன்னோடி ராஜ் டிவி - ஏமாத்து வேலை
நேசங்களுடன்
ஜீவானந்தம்
பாப்போம் ..போக போக தெரிந்துவிடும் இந்த ப்ரோக்ராம்...
ReplyDeleteடாப்பா....இல்ல டிராப்பா...
அருமையான கவனிப்புத்திறன் தங்களுக்கு.... பாராட்டுக்கள்.
போலிஸ் டிபார்ட்மென்டும் , கல்வித்துறையும் மாட்டிக்கிச்சி
ReplyDelete//பாப்போம் ..போக போக தெரிந்துவிடும் இந்த ப்ரோக்ராம்...
ReplyDeleteடாப்பா....இல்ல டிராப்பா... //
பார்ப்போம் இந்த கூத்து எல்லாம் எவ்வளவு நாளைக்குன்னு.
இந்த நிகழ்ச்சியில் டிராமா ரொம்ப ஓவரா இருக்குற மாதிரி ஒரு பீல் எனக்கு.
ReplyDeleteஅப்புறம் பாஸ்.. நான் உங்க ப்ளாக் follower-ஆ இருக்கேன். ஆனாலும் நீங்க பதிவு போட்டா என்னோட டஷ்போர்ட்ல உங்க பதிவு வர மாட்டேங்குது.
ReplyDeleteஉங்க 11 மாசத்துக்கு முன்னாடி எழுதிய வெயில் பதிவு தான் லேட்டஸ்ட் பதிவா வருது.
உங்களை unfollow பண்ணி மறுபடியும் follow பண்ணி இருக்கேன். பார்போம் உங்க பதிவு வருதான்னு.
டிவிகாரனுங்க எப்படியெல்லாம் ஏமாத்துரானுங்க ஜீவா சார் நல்ல பதிவு ஏன் நீங்க சினிமா விமர்சனம் எதுவும் போடீறதில்லை?
ReplyDeleteவிமர்சனம் தூள்...
ReplyDeleteகலக்குங்க பாஸ்...