Tuesday, September 11, 2012

கரம் - 3


சைலன்ட் வேலி:
கேரளாவில் இருக்கிற ஒரு சுற்றுலா தலம்.ஒருநாள் இங்க போகனும்னு முடிவு பண்ணி பாலக்காடு வழியா போனோம்.பாலக்காட்டில் இருந்து ஆனை கட்டி செல்லும் வழியில் இருக்கு.அருமையான மலைப்பகுதி.எங்கு பார்த்தாலும் பசுமை பொன்னாடை போர்த்தி இருக்கிறது.சரியான குளிர்ச்சி.வளைந்து வளைந்து செல்லும் பாதை.மதிய வேளையிலும் கூட இருட்டை காண்பிக்கிற மரங்களின் அடர்த்தி.எப்போ எந்தப் பக்கம்  யானை வருமோ என்று அஞ்சிய படியே சென்ற மலைப்பாதை.மிகவும் திரில்லிங் ஆன பகுதி.அடிச்சி பிடிச்சி அங்க போனா காலை 9 முதல்  மதியம் 2 மணி வரைக்கும் தானாம்.அதுவும் முன்கூட்டியே அனுமதி வாங்கி செல்லணுமாம்.மறுபடியும் செல்ல வேண்டிய ஆர்வத்தை தூண்டி விட்டிருக்கிறது.

டிவி:
விஜய் டிவியில் ஹோம் ஸ்வீட் ஹோம் அப்படிங்கிற ஒரு ப்ரோக்ராம்.இதுல காம்பியரிங் பண்ற ஜோடியோட தொல்லை தாங்க முடியல.அதுவுமில்லாமல் நடிகர்கள், சீரியல் நடிகர்கள் இவங்கதான் கலந்துகிறாங்க.அப்படி ஒண்ணும் சரியில்ல. (ரொம்ப எதிர் பார்க்கிறமோ..)ஆனா இந்த ப்ரோக்ராம் எதுல இருந்து சுட்டு இருக்காங்கன்னா AXN டிவியில் இருந்து தான்.நிறைய டேலன்ட் கேம்ஸ்.கேம்ஸ்ஐ விட இதுல கலந்துக்கிற அம்மணிகளை பார்த்தாலே போதும்.சும்மா செமயா இருக்காங்க.கண்ணுக்கு எவ்ளோ குளிர்ச்சி.சும்மா கிளு கிளுன்னு இருக்கு.அப்புறம் இந்த காம்பியர் இருக்காரே கொடுத்து வச்சவர்.ஆனா ஊனா போய் கட்டி பிடிச்சிடராரு..ம்ம்ம் செம...


இன்னொரு டிவி:
நம்ம ராஜ் டிவி யில் ஒரு ப்ரோகிராம்.இரண்டு பிரபலங்களோட முகத்த மாஸ்க் பண்ணி யாருன்னு கேட்டு நேயர்கள் கிட்டே போன் மூலம் பணம் பிடுங்கிறது.இதுவும் வேற எங்கயோ இருந்து சுட்டு இருக்காங்க.சமிபத்தில் zoom டிவியில் இதே மாதிரி பார்க்க நேர்ந்துச்சு.சல்மான், கோவிந்தா முகத்த மாஸ்க் பண்ணி நேயர்கள் கிட்ட பணத்த கோவிந்தா போட ஆரம்பிச்சு இருக்காங்க.எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க.
பாட்டு:
இப்போ அதிகமா கேட்கிற பாட்டு பாகன் படத்துல வர்ற '' இப்படி ஓர் கண்களை கண்ட தில்லை''
என்கிற  மெலோடி தான். வரிகள் அனைத்தும் அருமை. ''எனை மறந்து யோசிக்கிறேன்........எனக்குள் தினம் பேசுகிறேன்...உயிர் நிறைய நேசிக்கிறேன்....செம.....கேட்டு பாருங்கள்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்.




18 comments:

  1. கடைசில சைலன்ட் வேல்லி பாக்கலியா?

    ReplyDelete
  2. டிவி நிகழ்சிகள் விமர்சனம் வாரம் ஒன்னு போடலாமா என ரொம்ப நாளா நான் சிந்திச்சிங்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. என்னுடைய இந்தப் பதிவில் விவரங்கள் கொடுத்திருக்கிறேன்.

    http://swamysmusings.blogspot.in/2011/07/blog-post_21.html

    கோவையிலிருந்து போவதானால் ஆனைகட்டி வழிதான் தூரம் குறைவு.

    ReplyDelete
  5. மாப்ள முனுவாட்டி போய் இருக்கேன்...சூப்பர் இடம். சைலென்ட் வள்லி

    ReplyDelete
  6. மச்சி கரம் அருமை...

    வாரவாரம் எழுதுங்க தொடர்ந்து எழுதுங்க...

    சரி எப்ப போகலாம் சைலண்வேலிக்கு...

    ட்ரீட்ட அங்க வைச்சிக்கலாமா???

    ReplyDelete
  7. ஏற்கனவே எனென்னமோ யோசிச்சிட்டிருக்காங்க (டிவி) புதுசு புதுசா நீங்க வேற ஐடியா குடுத்திட்டீங்களா..(கட்டிபுடி நண்பா..)

    ReplyDelete
  8. இந்த விடுமுறைக்கு குடும்பத்தோடு வர்றோம். கைடா நீங்க வாங்க சகோ

    ReplyDelete
  9. சைலண்ட் வேலியை சீக்கிரம் பார்த்துட்டு பதிவு போடுங்க . ராஜ் டி.வி புரோகிராம் பத்தி நிறைய முக நூலில் பாத்தாச்சு. பாகனும், கும்கியும் அருமையான் மெலடிகள்

    ReplyDelete
  10. சைலன்ட் வேல்லி போகும் முன் பாரஸ்ட் அதிகாரிகளிடம் போன் மூலம் முன் பதுவு செய்து கொள்ளுங்கள். மதிய உணவு கையில் எடுத்துக்கொள்வது நல்லது. இரண்டு "தண்ணியையும்" எடுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  11. பழனி கந்த சாமி/// சார் ரொம்ப நன்றி...அடுத்த மாதம் செல்கிறேன் மீண்டும்..

    ReplyDelete
  12. பாஸூ ..இப்போ தான் ஒரு மாசமா உங்க பதிவுகளை படிக்கிறேன் ..அருமை ..

    ReplyDelete
  13. ஊருக்கு வரும் போது உங்க கிட்டே தான் கேக்கணும் ..எங்க எங்க போலாம்னு :)

    ReplyDelete
  14. பழனி கந்த சாமி/// சார் ரொம்ப நன்றி...அடுத்த மாதம் செல்கிறேன் மீண்டும்..

    ReplyDelete
  15. சகல துறைகளிலும் கலந்த கட்டி அற்புதமா அடிக்கிறீங்க.உங்க அம்மாவை திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  16. THIRU PALANI KANDASAMY
    what is this two water?I cannot understand.

    ReplyDelete
  17. டிவி நிகழ்சிகள் கூட சினிமா மாதிரி காப்பி அடிச்சுதான் வருவது வேதனை இரண்டு முகங்களை ஒட்டி கேட்கும் க்விஸ் ஒரு கிரிக்கெட் சேனலில் பார்த்திருக்கிறேன்!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html


    ReplyDelete
  18. Silent valley நானும் போக நினைத்திருக்கும் இடம்....

    டி.வி. நிகழ்ச்சிகள் - அப்படின்னா என்னங்க! :)))

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....