ஒகேனக்கல் - தருமபுரி - பயணம்
டிக்கெட் வாங்கி கொண்டு தொங்குபாலம் சென்றோம்.பாலத்தில் இருந்து பார்க்க மிக அம்சமாய்...ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நிறைய அருவிகள்...அதைவிட அம்மணிகள்... எவ்ளோ அழகா இருக்கு அருவிகள்..ரசிக்க ரசிக்க மனம் விலகவே இல்லை. பாலம் கடந்து மெயின் அருவிக்கு செல்ல நிறைய பாறைகள் கல்வெட்டுகளாய்.... காதலர்களின் பெயர் பொறித்ததினால்......அப்படியே வழி சொல்லும் அம்புகுறிகள்...தட்டு தடுமாறி (இது வந்து அந்த தட்டு தடுமாறி இல்ல...பாறைகளின் இடையில் செல்லும் போது ஏற்படும் தட்டு தடுமாறி... இல்லேனா நம்மளை வேற மாதிரி நினைச்சிடுவாங்க...) செல்கையில் அம்மணிகளின் சாரி அருவிகளின் அழகில் அதிசயத்து போனோம்...என்ன அழகு.. என்ன குளிர்ச்சி...சும்மா....சில்லுனு ..இப்படி ...நிறைய...
டிக்கெட் வாங்கி கொண்டு தொங்குபாலம் சென்றோம்.பாலத்தில் இருந்து பார்க்க மிக அம்சமாய்...ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நிறைய அருவிகள்...அதைவிட அம்மணிகள்... எவ்ளோ அழகா இருக்கு அருவிகள்..ரசிக்க ரசிக்க மனம் விலகவே இல்லை. பாலம் கடந்து மெயின் அருவிக்கு செல்ல நிறைய பாறைகள் கல்வெட்டுகளாய்.... காதலர்களின் பெயர் பொறித்ததினால்......அப்படியே வழி சொல்லும் அம்புகுறிகள்...தட்டு தடுமாறி (இது வந்து அந்த தட்டு தடுமாறி இல்ல...பாறைகளின் இடையில் செல்லும் போது ஏற்படும் தட்டு தடுமாறி... இல்லேனா நம்மளை வேற மாதிரி நினைச்சிடுவாங்க...) செல்கையில் அம்மணிகளின் சாரி அருவிகளின் அழகில் அதிசயத்து போனோம்...என்ன அழகு.. என்ன குளிர்ச்சி...சும்மா....சில்லுனு ..இப்படி ...நிறைய...
மெயின் அருவி செல்லும் வழியெங்கும் திடீர்கடைகள்..மீன் மிக பிரதான உணவாய்....
கைக்கெட்டும் தூரத்தில்
வெள்ளமென பாய்ந்து வரும் அருவிகளை ரசித்த படி சினி பால்ஸ் மெயின் அருவி
சென்றோம்..சினி பால்ஸ் இல் குளிக்க ஐந்து
ரூபாய்.உயரமா நின்னு பார்க்க மூணு ரூபாய் என நிறைய பேரு அங்கங்க பணம்
வாங்குறாங்க.நாங்களும் விதிவிலக்கு இல்லை என்பதால் குளிக்க டோக்கன் வாங்கிட்டு உள்
நுழைந்தோம். மரங்களுக்கு இடையில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
முதலில் அருவிகள்
கொட்டுகிற இடத்திற்கு சென்று விட்டு பின்னர் குளிக்கலாம் என்று மெயின் அருவிக்கு
சென்றோம்...நீண்ட கால்வாய் போல இருக்கிறது..ஆங்காங்கே அருவிகள் கொட்டுகிறது.மிக
ரம்மியமாக இருக்கிறது.இந்த பக்கம் தமிழ்நாடு பார்டர், அந்த பக்கம் கர்நாடகா
பார்டர் என அழகாய் பிரிந்து இருக்கிறது.
சமதளத்தில் வருகிற
வெள்ளம் பாறைகளுக்கு இடையே பிளந்து ஓ வென கொட்டுகிறது.இதன் அழகை ரசிக்க ஆயிரம்
கண்கள் வேண்டும்.அவ்ளோ அருமையாக இருக்கிறது.கொட்டும் அருவியை எவ்வளவு நேரம்
ரசித்தாலும் அலுக்கவில்லை.. அம்மணிகளை போல.....
சரி...குளிக்கலாம் என்று
சினி பால்ஸ் வந்தோம்..வரும்போது காலியாக இருந்த அந்த அருவி கொட்டுகிற இடத்தில்
அம்மணிகள் நாலு பேரு இருக்க ....கூட்டம் மொய்க்க ஆரம்பித்தது....ரசிக்க ஒரு
கூட்டம்...பார்க்க ஒரு கூட்டம்....குளிக்க ஒரு கூட்டம் என முண்டியடித்தது..
அப்போ தான் ஒரு பாடல்
நம்ம சிற்றறிவுக்கு எட்டுச்சு..
தேவதை குளித்த
துளிகளை எல்லாம்
தீர்த்தம் என்றே
நான் குடிப்பேன்...
ஒருவேளை..இந்த மாதிரி காட்சியை
பார்த்து தான் வைரமுத்துவும் எழுதி இருப்பாரோ... ஒரு டவுட்டு...
அப்புறம் ரொம்ப நேரம்
அம்மணிகளும் நல்லா படம் காட்டவும்..ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு
இருந்தது...அம்மணிகளின் நீராடலை சமாளிக்க முடியாமல் கூட வந்தவர்களின் கண்ணீர்
அருவியோடு கலந்து சென்று கொண்டு இருந்தது.எப்படியோ கஷ்டப்பட்டு அம்மணிகளை
அருவியில் இருந்து வெளியேற்றி....ஏகப்பட்ட ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கி
கட்டி கொண்டனர்(....ம்ம்ம்...போச்சே...வடை...போச்சே...)
அப்புறம் நேரம் ஆக ஆக
அம்மணிகளின் சாரி அருவிகளின் அழகில் பசியை மறந்து விடுவோம் என்றெண்ணி அங்கிருந்து விலக
ஆரம்பித்தோம்... கொஞ்சம் கூட விலக மனமில்லாமல்..
வரும் வழியில் எல்லாம்
ஆங்காங்கே கொட்டுகிற அருவியின் அழகை பருகியவாறே...அவ்வப்போது அம்மணிகளையும்...
எப்படியோ மனசை
கட்டுப்படுத்தி அருவிக்கூட்டத்தில் இருந்து வெளியில் வர மீன் குழம்பு வாசம் ஆங்காங்கே வர பசியின் முகம் வெளியே
தெரிய ஆரம்பித்தது.
மீன் சமைக்கும்
இடத்திற்கு செல்ல ரெடியாகி கொண்டு இருந்தது மனம்.பாவைகளை பார்வையால் ருசித்த
தெம்பில் எப்படியோ சமைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். எல்லாம் ரெடியாக இருக்க,
அனைவரும் வட்ட மேஜை மாநாட்டை கூட்ட, பாக்கு மட்டை தட்டில் மீன் வறுவல்
வைக்கவும்....உடனடியாய் காணாமல் போய் கொண்டு இருந்தது...
மீனின் ருசியில் வயிறு
அதி பயங்கரமாய் கபளீகரம் செய்து கொண்டு இருந்தது...அப்புறம் சாதம், மீன் குழம்பு, ரசம் என கலந்து கட்டி
அடிக்க சமையல் பாத்திரம் தன் எடையை இழக்க ஆரம்பித்தது....எல்லாம் முடிந்து....
மனம் நிறைய மகிழ்ச்சியுடன், வயிறு நிறைந்த திருப்தியுடன் கிளம்பினோம்...
இங்கே இருக்கும் பெண்கள்
சுற்றுலா வர்ற அனைவருக்கும் சமையல் செய்து தருவது ஒரு குடிசைத் தொழிலாக
இருக்கிறது.நன்றாக சமைத்து தருகிறார்கள்.உப்பு, காரம், அளவாய் இட்டு மிக சுவையுடன்
இருக்கிறது.நாங்கள் ஆறு பேர் சாப்பிட சாதம், குழம்பு, ரசம், வறுவல், செய்ய 500 ரூபாய்..மீன்
நாங்களே வாங்கி கொடுத்து விட்டோம்.மூணு கிலோ கெழுத்தி மீன் 300 ரூபாய். மொத்தம் 800 ரூபாய்.அப்புறம்
பாக்கு மட்டை, தண்ணீர் என ஒரு 60 ரூபாய்..அவ்ளோதான்.சாப்பிட இட வசதி இருக்கிறது.
நல்ல சுவையான உணவு
கிடைக்கும்.எங்களுக்கு சமையல் செய்த அம்மணி பெயர் சங்கீதா. போன் நம்பர் 9047478177.அவங்களும் அவங்க அம்மாவும் ரொம்ப வருசமா இங்க இருக்காங்களாம்.நீங்கள்
அங்கே சென்றால் கண்டிப்பாக இவங்களுக்கு ஒரு நல்ல ஆர்டர் தரணும்.
குடிக்க தண்ணீர் பாட்டில் வாங்கும் போது பார்த்து கவனமாக வாங்கவும்.டூப்ளிகேட் நிறைய இருக்கு.சொந்த காசுல சூன்யம் வச்சிக்காதீங்க...
அப்புறம்...
திரும்பி செல்லும் போது
வண்டியில் இறங்கிய கேரள அம்மணிகளை கண்டதும் மீண்டும் அருவிக்கே செல்ல மனம் துடித்தது...எண்ட குருவாயூரப்பா.....மறுபடியுமா....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அடிக்கிற வெயிலுக்கு பகிர்வு ஜில்லென இருந்தது...
ReplyDeleteGOOD...
ReplyDeleteஒரே அம்மணி புராணமாய் இருக்கு? நாங்கெல்லாம் எப்படி படிக்கறது?
ReplyDeleteஇந்த பதிவு உங்க வீட்டம்மாவுக்கு பார்சல் !
ReplyDeleteஇரு மச்சி....
ReplyDeleteதங்கச்சி கிட்ட சொல்லி வைக்கனும்... பையன வீட்டை விட்டு வெளியே அனுப்பக்கூடாதுன்னு....
அம்மணிகளின் அழகை..ச்சே....அருவிகளின் அழகை போட்டோ பறைசாற்றி செல்கிறது.. கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய இடம் தான்!
ReplyDeleteஎன்னப்பா ஒகேனக்கல்லின் ஸ்பெஷல் பரிசல் சவாரி போகலையா?
ReplyDeleteஅருவி தான் டாப்பு என்று நெனச்சேன் ,.. அம்மணிகளும் டாப்பா இருந்தா வெகு சீக்கிரமே விசிட் அடிச்சிட வேண்டியது தான ...ஹி ஹி
ReplyDeleteபதிவைப் படித்ததும் அருவியிலேயே குளித்தது போல் இருந்தது.
ReplyDeleteஜீவா,
ReplyDeleteஅருவின்னு சொன்னதை விட அம்மணின்னு பதிவுல சொன்னது தான் அதிகமா இருக்கு...வாயில வர்ர வாட்டர் பால்ஸ் ஐ குளோஸ் செய்யப்பா :-))
ஒரு அருவியை பார்க்க போய் ஒரு அருவியை உருவாக்கிட்டாரே :-))
ஜீவா,
ReplyDeleteஅருவின்னு சொன்னதை விட அம்மணின்னு பதிவுல சொன்னது தான் அதிகமா இருக்கு...வாயில வர்ர வாட்டர் பால்ஸ் ஐ குளோஸ் செய்யப்பா :-))
ஒரு அருவியை பார்க்க போய் ஒரு அருவியை உருவாக்கிட்டாரே :-))
படங்களோடு பதிவில் விமர்சனம் பசியைக்கூடத் தூண்டிவிடுகிறது !
ReplyDeleteஏங் மாப்ள.....சரிதான்...
ReplyDelete(மாப்ள களம் இறங்கிட்டாரு டோய்)
மிக அருமையான பதிவு, செல்ல தூண்டும் எழுத்து நடை, கவரும் படங்கள் என்று அசத்துகிறது. பதிவுக்கு நன்றி....தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடங்களெல்லாம் அருமை..புரட்டாசி மாசத்தில வாயக்கட்டி வயித்தக்காடி கஷ்டப்பட்டிருக்கும் போது இப்படி மீன் வருவலைக்காட்டி வெறுப்பேத்துறீங்களே பாஸ்...
ReplyDeleteபடங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது...பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
அனைத்து படங்களும் மிக அருமை...தொடர்ந்து எழுதுங்கள்......
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)