பாகன் :
இந்த படம் புதன் அன்னிக்கு நம்ம ப்ரூக் ஃபீல்ட்ஸ் ல பார்த்தேன்.அங்க படம் பார்க்க போகிறமோ இல்லையோ...ஏகப்பட்ட அம்மணிகளை படம் பார்த்துவிட்டு வரலாம்.இருக்கிற எல்லா ஃபுளோர்ல யும் நல்லா சுத்தி பார்த்துட்டு மனசு வலிக்க தியேட்டர்க்குள் புகுந்தேன். சைக்கிள் தன்னோட பார்வையில் கதை சொல்ற மாதிரி படம் ஆரம்பிக்குது.படம் நம்மை ஒன்ற செய்கிறது ஒரு சில காட்சிகளில் மட்டும்.பரோட்டா சூரியின் காமெடி அங்கங்க கிச்சு கிச்சு மூட்டுது.அப்புறம் நமக்கு ரொம்ப பிடித்த பாட்டு ”இப்படி ஓர் கண்களை கண்டதில்லை” பார்த்தவுடன் மனம் கொஞ்சம் லேசாச்சு...
ஸ்ரீகாந்த் ரொம்ப அழகா இருக்கார்.காமெடி பரவாயில்லை.பார்க்கலாம் ஒருமுறை..
ஸ்ரீகாந்த் ரொம்ப அழகா இருக்கார்.காமெடி பரவாயில்லை.பார்க்கலாம் ஒருமுறை..
படம் சுமார்தான்.கொஞ்சம் காமெடிக்காக பார்க்கலாம்.
சுந்தரபாண்டியன் :
நேத்து இரவு காட்சி எங்க ஊர் ஏரியாவுல இருக்கிற கல்பனா தியேட்டர்க்கு போனேன்.இந்த தியேட்டர்ல கடந்த 14 வருசமா பார்த்துகிட்டு இருக்கேன்.சிட்டிகுள்ளே போக கஷ்டபட்டா இந்த தியேட்டருக்கு போவோம்.நேற்று அப்படிதான் போக வேண்டியதாக போச்சு.முதல் நாள் ரிலீஸ் வேற.உள்ளே போனால் ஒரே அலப்பறை...சில்லு வண்டுகளோட...சசிகுமார் வந்தா விசிலு...பேசினா விசிலு...நட்பை பத்தி பேசினா விசிலு...இப்படி படத்தை பார்க்க விடாம பண்ணிட்டாங்க பாவிங்க..படம் ரொம்ப நல்லா இருக்கு.சூரி காமெடி ரொம்ப நல்லா இருக்கு.இடைவேளை வரை மிக சுவாரசியமாக செல்லுகிறது.அதற்கு அப்புறம் எதிர்பாராத திருப்பங்கள் என நன்றாக செல்கிறது.
சசிகுமார் நம்ம தலைவரை போல ஸ்டைல பண்றாரு.இருந்தாலும் ரசிக்க முடிகிறது.
சசிகுமார் நம்ம தலைவரை போல ஸ்டைல பண்றாரு.இருந்தாலும் ரசிக்க முடிகிறது.
கதாநாயகி ரொம்ப அழகா மாநிறமா இருக்காங்க. பார்த்த முகம் போல மனதுக்குள் பசை போட்டு ஒட்டிகிறாங்க.
சூரியின் காமெடி செம...நிறைய கைதட்டல் .. தியேட்டரில்...
படம் நன்றாக இருக்கிறது..
சூரியின் காமெடி செம...நிறைய கைதட்டல் .. தியேட்டரில்...
படம் நன்றாக இருக்கிறது..
மறுபடியும் பார்க்க தூண்டியிருக்கிறது.கண்டிப்பா ப்ரூக் ஃபீல்ட்ஸ் தான் போகனும்.அப்போதான் மனசும் நிறையும்.கண்ணுக்கும் விருந்தாகும்.
இந்த படங்களை இவ்ளோ சீக்கிரம் பார்க்க தோன்றியதுக்கு ஒரு காரணம் ..சூரி...பயபுள்ள நம்ம தோஸ்த் தா போயிட்டான் (ர்).பயபுள்ள நல்லா நடிச்சு இருக்கு..வாழ்த்துக்கள் மச்சி...
இந்த இரண்டு படங்களை பத்தி சினிமா விமர்சகர் நம்ம சித்தப்பு பார்வையில்....
http://www.adrasaka.com/2012/09/blog-post_9799.html
http://www.adrasaka.com/2012/09/blog-post_8.html
நேசங்களுடன்
ஜீவானந்தம்.
மாப்ளய்...!சின்மாவெல்லாம் எப்ப பார்க்க ஆரம்பிச்சிங்க....!
ReplyDeleteநம்ம ப்ரூக் ஃபீல்ட்ஸ் ல பார்த்தேன்.
ReplyDelete>>>
அந்த தியேட்டரை எப்போ உங்க பேருக்கு எழுதி வெச்சாங்க சகோ?!
தியேட்டர் உள், வெளி அலங்காரங்களை பத்தியும், கேண்டீன் பஜ்ஜி, போண்டா பத்தியும் சொல்லாததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்.
ReplyDeleteபடம் பார்க்க போனீங்களா இல்ல படம் போட போனீங்களா நண்பா ............
ReplyDeleteராஜி சொன்ன மாதிரி தியேட்டர் உள், வெளி அலங்காரங்களை பத்தியும், கேண்டீன் பஜ்ஜி, போண்டா பத்தியும்சொல்லிடுங்க அடுத்த பதிவுல அப்பத்தான் படம் பார்க்க போலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்க முடியும் ?
தம்பி புதுசா சினிமா விமர்சனம் எழுதுறீங்களா? பரவால்லை பழகிடும்
ReplyDeleteபாகன் படத்தில் ஸ்ரீகாந்த அழகுன்னு சொல்றீங்க. ஜனனி கண்ணில் படலையா?
அப்புறம் தியேட்டர்க்கு போய் நிறைய சைட் அடிச்சதை எல்லாம் உங்க வீட்டம்மா படிக்க மாட்டாங்களா?
சுருக்கமான விமர்சனம்... படம் பார்க்க வேண்டும்...
ReplyDeleteமாப்ளே க்கு என்னவோ ஆகிடுச்சுடோய்
ReplyDeleteமாப்ளைக்கு எந்த கொள்ளி கண்ணு பட்டுச்சோ தெரியலையே.......ஏதோ சரக்கு ஊறுகானு நல்லா இருந்த மவராசன்....இப்பூடீ
ReplyDeleteஏங்க மாப்ளே ப்ரூக் பீல்டுல எம்முட்டு ஐட்டம் இருக்கு அதை ஒரு போட்டாவாது போட்டு இருக்கலாமுல்ல
ஒரே பதிவுல - ரெண்டு சினிமா...
ReplyDeleteநடக்கட்டும் நடக்கட்டும்...
..சூரி...பயபுள்ள நம்ம தோஸ்த் தா போயிட்டான் (ர்).பயபுள்ள நல்லா நடிச்சு இருக்கு..வாழ்த்துக்கள் மச்சி...
ReplyDeleteநட்புக்கு மரியாதையோ.... சந்திப்பில் என்னிடம் சொன்னதாக நியாபகம்
வீடு சுரேஸ்குமார் said...//மாம்ஸ்...எப்பவும் பார்க்குறதுதான்..
ReplyDeleteராஜி..///
ReplyDeleteபோறதே படம் பார்க்கதான்...அங்க போயி வேற கேண்டீன் பத்தி எழுதனுமா..
சரளா////
ReplyDeleteபடம் பார்க்க போனீங்களா இல்ல படம் போட போனீங்களா நண்பா...
சத்தியமா படம் பார்க்கத்தான்
மோகன் குமார்///புதுசு அண்ணா புதுசு..
ReplyDeleteஅப்புறம் உங்க ப்ரொஃபைல் படம் மாத்திடீங்க போல...
நன்றி தி.தனபாலன் அவர்களே
ReplyDeleteமனசாட்சி..///மாம்ஸ்..இன்னும் எங்கும் ஊர் சுத்த போக ஆரம்பிக்கலை..அதனால் தான்..அப்புறம் நம்மள யாரு கொள்ளி கண்ணோட பார்க்கபோறா...
ReplyDeleteநன்றீ வெங்கட்...
ReplyDeleteTamilraja k said...///
ReplyDelete..சூரி...பயபுள்ள நம்ம தோஸ்த் தா போயிட்டான் (ர்).பயபுள்ள நல்லா நடிச்சு இருக்கு..வாழ்த்துக்கள் மச்சி...
நட்புக்கு மரியாதையோ.... சந்திப்பில் என்னிடம் சொன்னதாக நியாபகம்///
நல்ல ஞாபக சக்தி....
பகிர்வுக்கு நன்றி நண்பரே! நானும் பார்க்க எண்ணியுள்ள படங்கள் இவை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிள்ளையார் திருத்தினார்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html
ஒரே கல்லு...ரெண்டு மாங்காய்! :)
ReplyDelete