Tuesday, September 18, 2012

பேஸ்புக் கவிதைகள்

கடந்த ஒரு வாரமாகவே எங்கும் ஊர் சுத்த போகல.ஏன்னா ......ஒரு வேலை வெட்டியும் இல்ல.. என்ன பண்றது அப்படின்னு நினைச்சு ஃபேஸ் புக்கில் கிறுக்கியவை ...இதுவும் நல்லா வந்து இருக்குன்னு சொல்றாங்க நிறைய பேரு...

கன்னி அவளின்
கண நேரப்
பார்வையால்
பரிதவித்துப் போய்
பற்றிக் கொள்கிறேன்
காதல்
எனும் மரத்தை

புலம்பல்
தவிப்பு
அவஸ்தை
இம்சை
இவை நான்கும்
ஒரு சேர
உணருகின்றேன்
உன்னை 
கண்ட பின்பு தான்...

நித்திரையிலும்
நீங்காத
உன் 
நினைவுகள்
உளறுகின்றேன்
உறக்கத்திலும்
உன்
பெயரையே...

உன்னோடு 
இருந்த 
ஓரிரு
நாட்களிலும் 
என்னுள்
ஏற்பட்ட 
மாற்றங்கள்
எண்ணிலடங்காதவை


நெஞ்சத்து 
நினைவுகளில்
நீறு பூத்த
நெருப்பாய்
நீங்காமல்
அவளின்
ஞாபகங்கள்......

அவளின்
அருகாமையை 
அருகில் 
இல்லாத போது தான் 
அறிய முடிகிறது....

கொஞ்சம் கூட
கனக்கவில்லை
மனது...
கன்னியவள்
நினைவுகளை
சுமந்து இருந்தாலும்..


இதழ்களில்
இதமாய்
முத்தமிடும் போது
இமைக்க
மறந்திட்ட
விழிகள்
சொல்லும்
வார்த்தை
இன்னும்.........கொஞ்சம்...


இரு ஜோடி விழிகளின்
பார்வையில்
இதயங்கள் பேசினாலும்
அதரங்கள்
அசையவில்லை
ஆயினும்
மௌனத்தை கலைத்தோம்
சூழ்நிலை உணர்ந்து....


மங்கை அவள்
மடிமீது
தலை வைத்து
படுத்ததில்
மறந்து போனது
என்
கடந்த 
கால நினைவுகள்....

நெஞ்சத்து 
நினைவுகள்
நகர மறுக்கின்றன
நங்கூரமாய் 
அவள் 
இருப்பதால்

உன் 
செவ்விதழ்களில்
செந்தேன் 
மட்டுமல்ல
இன்னிசையும்
இனிதாய் வரும் என
உன் 
உச்சரிப்பில்
உணர்ந்து கொண்டேன்...

சந்தித்த பொழுதில்
கண்ட மகிழ்ச்சி
பிரிவின் போது
கனத்த பாரமாய்....

வழி நெடுக தென்படும்
பெயர்ப்பலகைகளில்
உன் பெயரையே
பொருத்தி பார்க்கிறேன்
விழிகள் காணும்
திரை உருவங்களில்
உன் முகத்தையே
பார்க்கிறேன்..
எங்கும் எப்போதும்
உன் நினைவால்....
 
எனக்குள்   இருக்கும்
கவிஞனின்  உறக்கம்
கலைத்த  பெருமை
உனக்கே  வாய்க்கட்டும்  ............நன்றி.....அவளுக்கு........

 கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..
நேசங்களுடன்
ஜீவானந்தம்

17 comments:

 1. நல்லாத் தாங்க இருக்கு... எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதைய இருந்துக்கோங்க ...

  ReplyDelete
 2. உடனடி கமெண்ட் உங்க கிட்ட இருந்து தான்..D.D நண்பரே....நன்றி..

  ReplyDelete
 3. புலம்பல்
  தவிப்பு
  அவஸ்தை
  இம்சை
  இவை நான்கும்
  ஒரு சேர
  உணருகின்றேன்
  உன்னை
  கண்ட பின்பு தான்..// யாரு பாஸ் கடங்காரனா???!!! "அவள்" நன்றாக வந்துள்ளது.அதுவும் தூங்கிட்டு இருந்தவரை எழுப்பிவிட்டு வேற வந்துள்ளது. இனிமே ஃபுல்லா காதல் கவிதைதான்!!!!அசத்துங்கள்....

  ReplyDelete
 4. //உன்
  செவ்விதழ்களில்
  செந்தேன்
  மட்டுமல்ல
  இன்னிசையும்
  இனிதாய் வரும் என
  உன்
  உச்சரிப்பில்
  உணர்ந்து கொண்டேன்... //

  GOOD

  ReplyDelete
 5. நன்றி..ஸ்கூல் பையன்...

  ReplyDelete
 6. மாப்ள நீர் எங்கோயோ போய்ட்டீர் - அடிச்சுக்க முடியாது - சான்சே இல்ல
  இப்படி ஒரு கவிங்கரைதான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்தேன் - கோவை குழுமத்திலேயே அதவும் ஏங் மாப்ள

  வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 7. நன்றி மாம்ஸ்...எல்லாம் உங்க ஆசிர்வாதம்..தான்...

  ReplyDelete
 8. வொய் திஸ் கொலைவெறி?!

  ReplyDelete
 9. இன்னொரு தபுசங்கர் உதயமாகிறார்.. :)

  ReplyDelete
 10. உன்
  செவ்விதழ்களில்
  செந்தேன்
  மட்டுமல்ல
  இன்னிசையும்
  இனிதாய் வரும் என
  உன்
  உச்சரிப்பில்
  உணர்ந்து கொண்டேன்...// பேஸ்புக் கவிதைகள் எல்லாமே அழகுதான்

  ReplyDelete
 11. நீயும் பாதிக்கப்பட்டு இருக்க :-)

  ReplyDelete
 12. போட்டி கவிஞர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது குழுமத்தில் ............ஆனாலும் வாழ்த்துக்கள் அருமையான உணர்வுகளை சொல்லலும் கவிதைகள் நண்பா ........

  ReplyDelete
 13. ஒரு கவிஞர் உதயம்- வாழ்த்துக்கள் நண்பா. தொடருங்கள் உங்கள் கவிதைகளை.

  ReplyDelete
 14. வழி நெடுக தென்படும்
  பெயர்ப்பலகைகளில்
  உன் பெயரையே
  பொருத்தி பார்க்கிறேன்
  sweet lines

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....