Saturday, September 22, 2012

ஒகேனக்கல்,தருமபுரி மாவட்டம் - பயணம் 1

ஜோலார்பேட்டையில் ஒரு வேலை காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு கிளம்ப வேண்டியதாகி விட்டது.கோவையில் இருந்து காலை வண்டியில் கிளம்பினோம் நானும் நம்ம டிரைவரும்.போற வழியில் நம்ம நண்பர்களை பிக்கப் செய்து கிட்டு சேலம் வழியா தொப்பூர் தாண்டி செல்லும் போது எதேச்சையா நம்ம பயபுள்ள ஒருத்தன் ஒகேனக்கல் பத்தி பேச்சை எடுக்க, சரி அங்க போலாம் அப்படின்னு உடனே முடிவு எடுத்து முதலில் வந்த இடது ரோட்டில் திருப்பினோம்.(ஒரு டவுட்டுக்கு அங்க இருந்த பொட்டிகடையில் விசாரித்து பெங்களுர் சாலையில் இருந்து உள் நுழைந்தோம்.தொப்பூர்ல இருந்து 10 கி.மீ இடைவெளியில் இடது புறம் ஒரு பாதை பிரிகிறது.) ஜருகு என்கிற ஊர் வழியே சென்று அச்சனஹள்ளி அடைந்து பென்னாகரம் சென்றோம்.
கிட்டதட்ட 60 கிலோ மீட்டர் இருக்கும்.தருமபுரி போய் பென்னாகரம் வழியாக செல்ல வேண்டிய ஒகேனக்கலுக்கு குறுக்கு பாதையில் பயணித்து விரைவில் பென்னாகரம் சென்று அடைந்தோம்.பென்னாகரம் செல்லும் வரைக்கும் ஆங்காங்கே நிறைய... மலைப்பாதைகள் தான்.மலைகள் தான்.பசுமைத்தோல் போர்த்திய மலையாய்...
இறங்கியும் ஏறியும் செல்ல வேண்டி வந்தது.வழி நெடுக நிறைய புளிய மரங்கள்.மலைப்பாதையில் நிறைய கருவேலம் மரங்கள்...
பென்னாகரத்தில் இருந்து 17 கி,மீ ஒகேனக்கலுக்கு.சம தளத்தில் பாதி தூரம் சென்றவுடன் செக் போஸ்ட் வரவேற்கிறது.வண்டி நம்பரை எழுதி விட்டு டோக்கன் வாங்கி கொண்டு மலைப்பாதையில் பயணித்தோம்.முடிவில் இந்தியாவின் நயாகரா விற்கு வந்து சேர்ந்தோம்...
இறங்கியவுடன் கூட்டம் மொய்க்க ஆரம்பித்தது...மீன்,சாப்பாடு சமையல் செய்யவும், பரிசலில் செல்லவும் ...

இருங்க சொல்கிறோம் என்று சொல்லியபடியே நழுவ...கடைசி வரைக்கும் எங்களிடம் போராடி மீன் மார்க்கெட் வரை வந்து தனக்கான ஆர்டரை பெற்றுக்கொண்ட ஒரு அம்மணி ரொம்ப சந்தோசத்தில் ....
அருவிக்கு செல்லும் வழியில் நிறைய துணி கடைகள்.ஏகப்பட்ட மீன் கடைகள்.நிறைய சாப்பாட்டு கூடங்கள், சமையல் செய்யும் இடம் என....


மீன் மார்க்கெட் .....ரொம்ப பெரிதில்லை..ஒவ்வொரு கடையும்  கலர் கலர் குடையுடன்  கொஞ்சம் கொஞ்சம் பெரிய மீன்களுடன்...கெழுத்தி, ஆரான், கட்லா, ரோகு என குறிப்பிட்ட சில வகைகள் மட்டுமே.


 ஆங்காங்கே மசாலா பொடியில் பிரட்டிவைக்கப்பட்ட மீன் துண்டுகள் வாடிக்கையாளரை எதிர்பார்த்து கருவாடாய் காய்ந்து கொண்டிருந்தது...
அதேமாதிரி சமைத்த உணவுகளை சாப்பிட நிறைய இடங்கள்..நம்ம ஜாதிக்கார பயலுங்க தான் அதிகம்...நீரிலும் ...நிலத்திலும்... தள்ளாடியபடியே...
.உள்ளே செல்ல செல்ல ஒருவித மணம் நாசியை துளைக்கிறது.சுவையான வாசத்துடன் மீன்கள் கொதித்து கொண்டு இருக்கின்றன நிறைய இடங்களில்..

நாங்கள் கெழுத்தி மீன் மூன்று கிலோ வாங்கி அந்த அம்மணியிடம் கொடுத்துவிட்டு அருவியை காண சென்றோம்...
சீகக்காய், எண்ணெய்  தடவிய திறந்த மார்புகளுடன் ஆண்களும் , தலை விரிகோலமாக பெண்களும் ஆங்காங்கே...மரங்களுக்கு,  பாறைகளுக்கு  இடையில் வெள்ளம் பாய்ந்து வருகிறது.அருவிகள் பாய்ந்தோடும் அழகினை ரசித்தபடியே முன்னேறினோம்.
 

அப்புறம் எப்பவும் போல அம்மணிகள் வருகையினால் (மூணு ஸ்டேட் வேற.... கேரளா, தமிழ்நாடு, கர்னாடகா ) மனம் அருவியை விட செம..சில்லுனு இருக்கு..
பாவைகளை
பார்த்ததும்
பரவசமாகி
பஞ்சாகி
போனது
மனசு.........அட கவிதை.....
கன்னியரை கண்டால் கவிதையும் கொட்டுகிறதே அருவி மாதிரி...
பறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்...அந்த பாட்டை பாடியபடியே....
பாறைக் கூட்டங்களில் ஆங்காங்கே அம்பு குறி வழி சொல்ல  மெயின் அருவியை  நோக்கி சென்றோம்..

இன்னும் இருக்குங்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்



12 comments:

  1. ஓகேனக்கல் சென்று வந்த கோவையின் ஒபாமாவே...நீர் வாழ்க..!

    ReplyDelete
  2. யோவ்...மாம்ஸ்..என்ன இது..நம்மள போய்...

    ReplyDelete
  3. ஒரு முறை நண்பர்களுடன் சேர்ந்து ட்ரிப் போகலாம் என்னையும் சேத்துக்குங்க

    ReplyDelete
  4. @ஜீவா,

    நீங்க எப்படியும் எஞ்சாய் பண்னிக்கோங்க.... எனக்கு மீன் குழம்பு மட்டும் பார்சல் அனுப்பிருங்க.....

    ReplyDelete
  5. எப்படியோ எங்க ஏரியாவுக்கு போயிட்டு வந்திட்டீங்க. வருடா வருடம் நாங்கள் மாட்டுப் பொங்கலன்று செல்வோம். எப்போ வரும் என ஆவலைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு.

    ReplyDelete
  6. பாவைகளை
    பார்த்ததும்
    பரவசமாகி
    பஞ்சாகி
    போனது
    மனசு.........அட கவிதை// இந்த மாதிரி இடங்களுக்கு போகும் போது மனசு பாத்திரம் பாஸ். ஆமா மூணு ஆச்சர்யக்குறி இல்லையே இதை எப்புடி கவிதைன்னு சொல்றது??????

    ReplyDelete
  7. அருவியின் படங்கள் அருமை ,நீங்க சொல்றத பார்த்த "குடிமக்கள்" அதிகமாக இருப்பாங்களோ, குடும்பத்தோட போக முடியுமா.

    ReplyDelete
  8. சார் எங்க ஊருக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள். அங்கு இருக்கும் நல்ல விசீயம் மட்டும் சொல்லி இறுகிகக

    ReplyDelete
  9. படங்களும் பதிவும் பலருக்கும் உதவும்... நன்றி...

    ReplyDelete
  10. படங்களும் அருமை அதோடு கவிதையும் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....