Thursday, October 25, 2012

வெளிநாட்டு அனுபவம்..ஒரு பார்வை

ரொம்ப நாளா வெளி நாட்டுக்கு போகணும்னு ஆசை இருந்துச்சு..இப்போ அது நிறைவேறி விட்டது.இதுவரைக்கும் பிளைட்ஐ அண்ணாந்து பார்த்ததோடு சரி.அதில் இப்போ தான் முதல் முதலாய் பயணம் செய்து இருக்கிறேன். எத்தனையோ முறை வாய்ப்புகள் கிடைத்தது உள் நாட்டில் பயணம் மேற்கொள்ள...ஆனால் எனது கால் கண்டிப்பாய் வெளிநாட்டு விமானத்தில் வைத்த பின்பு தான் மற்றது எல்லாம் என முடிவாய் இருந்ததில் இப்போது வெற்றியும் பெற்று விட்டேன்.என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன்.
எவ்ளோ நாள் தான் ஊர் சுற்றும் வாலிபன் (ஹி ஹி  ஹி ) என்று சொல்வது...உலகம் சுற்றும் வாலிபன் ஆக வேணாமா என தீவிர முயற்சி மேற்கொண்டதில் என் முதல் பயணம் மலேசியா, சிங்கப்பூர்,  இந்தோனேஷியா ( டேன்ஜங் பலாய் கரிமூன்)  என ஆகி விட்டது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்போதைக்கு ஒரு சில போட்டோ மட்டும் போட்டு இருக்கேன்.இன்னும் விரிவா நம்ம வெளிநாட்டு அம்மணிகளோட பார்க்கலாம்.







ஒவ்வொரு ஊரையும் விரிவா பார்க்கலாம்.நான் கண்ட இடங்கள், ருசித்த உணவுகள் என அனைத்தும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


14 comments:

  1. படங்கள் அருமை... தொடர்கிறேன்...

    முகநூலில் சில கருத்துரைகளைப் படித்தேன்... (பதிவை இணைக்கும் போது)

    நன்றி... ENJOY

    ReplyDelete
  2. உங்க பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்..சிக்கிரமே போடோஸ் போடுங்க..

    ReplyDelete

  3. அம்மணிகள் வேறயா நல்லாயிரும்யா.

    Photos are excellent

    ReplyDelete
  4. Good Start மச்சி, விரிவான பதிவு ஒன்றை விரைவில் எதிர்பார்க்கிறோம்!! சாப்பாட்டு அய்ட்டங்களுக்கும் அம்மணிகளுக்கும் குறைவிருக்காது என நம்புகிறோம்!!!!

    ReplyDelete
  5. சும்மா சொல்லிட்டேயிருக்கீங்க .இதோ கோவை வலைப்பதிவாளர் சங்கம் உலகம் சுற்றிய வாலிபர்(என்ன வரைமுறை வாலிபருக்கு எனக்கு தெரிஞ்சு 19 வயசு வரையிலும்னு நினைக்கிறேன்) ஜீவாவை வருக வருக என வரவேற்கிறது. வாழ்த்துகள் ஜீவா...

    ReplyDelete
  6. படம் போடுறது சரி..!அந்த படத்துக்கு கீழ அதைப் பற்றி எதாவது எழுதறது...!அப்பத்தான் படம் பாக்குறதுக்கு இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்..!

    ReplyDelete
  7. வெளி நாடெல்லாம் போயிட்டு வந்திட்டீங்களா? சொல்லவே இல்லை! கங்கிராட்ஸ்!

    ReplyDelete
  8. போட்டோ எல்லாம் சூப்பர் ஜீவா...
    Jeeva, the Great...

    ReplyDelete
  9. வெளி நாட்டு பயணத்திற்கு வாழ்த்துக்கள் ஜீவா. விபரங்களை விபரமாக பதிவிடவும்.

    ReplyDelete
  10. ஆறப் போடாம மற்ற பதிவுகளையும் சீக்கிரமா எழுதுங்க

    ReplyDelete
  11. ஏனுங்க செந்தோசா ,மரினபே , சூதாட்டகூடம் ,பத்துமலை முருகன் கலக்குரீக !!!

    ReplyDelete
  12. பாஸ் நான் மகேந்திரன் நண்பன் நீங்கள் தெரிவித்த இந்தோனேசியா இடத்தின் சரியான பெயர் தஞ்சோங் பாலாய் மேலும் நாங்கள் உண்மையான புகைப்படத்தையும் அனுபவங்களையும் எதிபார்கின்றோம்
    அன்புடன்
    சரவணகுமார்
    சிங்கப்பூர்

    ReplyDelete
  13. //இன்னும் விரிவா நம்ம வெளிநாட்டு அம்மணிகளோட பார்க்கலாம்.//

    ம்..ம்.. எதிர் பார்க்கிறோம்.
    படம் இன்னதுன்னு விளக்கம் இல்லியே.

    ReplyDelete
  14. படங்கள் அருமை. சீக்கிரமே உலகம் சுற்றும் வாலிபனாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....