Thursday, January 31, 2013

கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை

சென்னையில் இருக்கிற மிகப்பெருமை வாய்ந்த கோவில் கபாலீஸ்வரர் கோவில்.சென்னையின் மையப்பகுதியான மயிலாப்பூரில் அமைந்துள்ளது. சென்னை வந்த போது இந்த கோவிலுக்கு தரிசனம் பெற சென்றேன்.சின்ன தெரு போல இருக்கிறது கோவிலுக்கு செல்லும் வழி.செல்லும்போதே கோபுரம் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவிலை சுற்றி நடைபாதை கடைகள் நிறைய இருக்கின்றன.
 
 
 
கிழக்கு நோக்கி இருக்கும் அந்த கோபுரத்தின் வாசல் வழியாக உள் நுழைந்ததில் மிக விசாலமாக இருக்கிறது கோவில் பிரகாரம்.விநாயகர், அண்ணாமலையார், நவக்கிரகங்கள், சிங்காரவேலர் போன்ற சன்னதிகள் இருக்கின்றன.தெற்கு நோக்கி கற்பகாம்பாள் சன்னதியும் இருக்கிறது.

கபாலீஸ்வரர் எதிரில் கொடிமரம், நந்தி, பலிபீடம் போன்றவை இருக்கின்றன.
இந்த தலத்தில் இறைவன் மேற்கினை நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தரித்து அவதரிக்கிறார்.கடவுளின் கருவறையைச் சுற்றி நாயன்மார்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.தோத்திரங்கள் போர்டு வைக்கப்பட்டு இருக்கின்றன.இந்த தலத்தின் தல விருட்சமாக புன்னை மரம் இருக்கிறது.இதன் அருகிலேயே புன்னை வனநாதர் இருக்கிறார்.சனிபகவான் தனித்து அருள் புரிகிறார்.
 
 
 
இக்கோவிலின் மேற்குப்பகுதியில் நீராழி மண்டபத்தோடு கூடிய பெரிய கபாலி தீர்த்தம் எனப்படும் திருக்குளம் இருக்கிறது. கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இதற்கு பெயர் உண்டு. 
(இக்குளத்தினுள் ஏகப்பட்ட தேளி மீன்கள் பெரும் சைஸ் வாரியாக இருக்கிறது.வேடந்தாங்கலில் இருக்கிற ஒரு சில பறவைகள் இங்கும் இருப்பதைக் காணலாம்) 
இக்கோவிலில் வருடம் முழுவதும் விழாக் கோலம்தான். பங்குனி மாதத்தின் பங்குனிப் பெருவிழா மிக முக்கியமானது. இதில் தேர் உற்சவம். அறுபத்து மூவர் வீதி உலா போன்றவை விஷேசமானவை. இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படும் மற்றொரு விழா சிவராத்திரி. பூலோகக் கயிலாயம் என்று புகழப்படும் இந்த ஆலயத்தின் மற்றொரு முக்கிய விசேஷம் பிரதோஷம். பிரதோஷப் பொழுதில் சிவனை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும், வேண்டுவது அத்தனையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் திறந்திருக்கும் நேரம் : தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து இடங்களில் இருந்தும் பேருந்து வசதி இருக்கிறது.2 கி.மீ தொலைவில் மெரினா பீச்  இருக்கிறது.
சென்னையின் புராதன சின்னமாக இருக்கிற இந்த கபாலீஸ்வரர் கோவில் செல்வோம்..அருள் பெறுவோம்...

கிசுகிசு : கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஏகப்பட்ட பேர் கேமராவுடன் சுற்றிக்கொண்டு இருந்தனர்.அனைவரும் கோபுரம், சிற்பம், கொடிமரம் போன்றவற்றினை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர்.என்ன விசயம் என்று கேட்டதற்கு விசுவல் கம்யூனிகேசன் ஸ்டூடண்ஸ் என்றனர்...அந்த கேப்புல நானும் கெடா வெட்டிட்டேன்...ஹிஹிஹி...போட்டோ எடுத்துட்டேன்...

அப்புறம் அம்மணிகள் பத்தி சொல்லவே வேணாம்...அம்புட்டு பேரு..செம தரிசனம் கிடைக்கிறது.

காலை வேளை....
கன்னியர்கள்
ஈரக்கூந்தலுடன் 
சொட்ட சொட்ட 
நடந்து வந்ததில்
ஈரமாகிப் போனது மனசு..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

வரும் ஞாயிறு 3 ம் தேதி   கோவை பதிவர்களின் புத்தக வெளியீடு அனைவரும் வருகை புரிய வேண்டுகிறேன்.

7 comments:

  1. இயற்கை கோவில்கள் பார்ட் 2?

    ReplyDelete
  2. படங்கள் அருமை என்ன நண்பா அடுத்த புத்தகம் கவிதையா?

    ReplyDelete
  3. நல்லாவே கெடா வெட்டிட்டீங்க...

    ReplyDelete
  4. கடைசியில் உங்க முத்திரையோடு முத்தாய்ப்பு! அருமையான பகிர்வு!

    ReplyDelete
  5. சிறப்பான கோவில். புகைப்படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. அருமை நண்பரே....... கோவிலுக்கு சென்று வந்த திருப்தி உங்களது பதிவை படித்தபோது கிடைத்தது.......தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மிக அருமை. இந்த கோவிஙல யானைதான் பாரதியாரை தனது துதிக்கையால் தூக்கி மிரட்டியது,

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....