Saturday, January 19, 2013

கோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்

ஒரு மத்தியான நேரம் சேலம் வந்த போது பசி கிள்ளி எடுக்க, நம்ம சிங்கத்தை பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறுத்திவிட்டு பக்கத்துல இருந்த ஆட்டோ டிரைவர்கிட்ட தெளிவா(..?) கேட்டேன்.செல்வி மெஸ் தவிர வேற எந்த ஹோட்டல் நல்லா இருக்கும் அப்படின்னு...அவரு உடனே சொன்னது ராஜகணபதி ஹோட்டல்...
பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆலுக்காஸ் இருக்கிறது அதன் அருகில் இருக்கிற ஒரு சந்தில் இந்த ஹோட்டல் இருக்கிறது..
 
 
 
 
 
 போர்டு மிக அதிகமாக வைத்து இருக்கிறார்கள்..உள்ளே நுழைந்ததும் ஒரு சில பேர் போராடிகொண்டிருந்தனர் நாட்டுக்கோழி வறுவலோடு..இலையில் சாப்பாட்டினை விட அதிகம் இடம் பிடித்துக்கொண்டு இருந்தது கோழியின் எலும்புகளே...
நாமும் ஒரு தோதான இடத்தினை தேர்வு செய்து அமர்ந்தோம்...உட்கார்ந்து சுத்தி முத்தி பார்த்ததில் ஒரு விலைப்பட்டியல் போர்டு பார்த்ததும் இருந்த பசி எல்லாம் பறந்து போயிற்று...அவ்ளோ விலை...மட்டன் பிரியாணி 170, நாட்டுக்கோழி பிரியாணி 180 என எல்லா அயிட்டமும் நூறுக்கு மேல் தான்...சாப்பாட்டினை தவிர....ஆகா...யானை விலை குதிரை விலை இருக்கும் போல..என்றெண்ணி சர்வரிடம் கேட்டேன்...என்னங்க...இவ்ளோ ரேட் இருக்கு..கோவைல எல்லாம் கம்மியா இருக்கு...அதை விட பெரிய சிட்டியா இந்த சேலம்...என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தபோது அசராமல் பதில் வந்தது....கிட்டதட்ட இரண்டு கிளைகள் இருக்கு...மேட்டூரிலும் சேலத்திலும்...பிராய்லர் கோழி உபயோகிப்பதில்லை என்றும், 1975 இல் இருந்து செயல்பட்டு வருகிறது என்றும் சொல்லி நம்ம வாயை அடைத்தார்...சரி..வந்தது வந்தோம்...ஒரு கை பார்ப்போம் என்று முடிவு பண்ணி...சாப்பாடு மற்றும் நாட்டுக்கோழி சுக்கா, நாட்டுக்கோழி ஃபிரை இரண்டும் ஆர்டர் பண்ணினோம்...
இலையை போட்டு வெங்காய பச்சடி வைத்தனர்....பொரியல் இல்லாமல் வெறும் பச்சடி மட்டும் வைக்கின்றனர்...
சாப்பாடு சுட சுட ஆவி பறக்க வைத்தனர்...முதலில் சிக்கன் குழம்பு...செம கெட்டியாக...நல்ல சுவையுடன் இருக்கிறது...அடுத்து சிக்கன் சுக்கா...இதுவும் நன்றாக இருந்தது...அடுத்து வந்த மட்டன் குழம்பு, அதுவும் கெட்டியாக இருக்கிறது..மிக நல்ல டேஸ்ட்...
நாட்டுக்கோழி பிரை.....கொண்டு வருகையிலே சுவை மூக்கைத்துளைக்கிறது...ஒரு தட்டு முழுக்க கோழியை பிச்சி பிச்சி போட்டு கறிவேப்பிலை தூவி மிக அழகாக கொண்டு வைத்தனர்...அதிக கேள்வி கேட்டதினால் என்னவோ மிக சிரத்தை எடுத்து செய்து இருப்பார் போல...... ஆகா...என்னா டேஸ்ட்.. நாங்களும் கொஞ்ச நேரம் கோழியோடு போராடிக்கொண்டு இருந்தோம்...மிக சுவையோடு...
கடைசியில் ரசம்...இது நல்ல சுவை..டம்ளரில் கேட்டு வாங்கி குடித்தேன்..தயிரும் கெட்டி தயிர்...குழம்பு முதல் தயிர் வரை அனைத்தும் கெட்டியாகவே இருக்கிறது ரசத்தை தவிர....
 
விலை இப்போது பெரிதாக தெரியவில்லை..சுவை அதிகம் இருப்பதால்...கூட்டமும் அதிகம் வந்து கொண்டிருக்கிறது..நிறைய சினிமா ஆட்கள் இந்த கடைக்கு வாடிக்கையாளர்களாம்...கடைசியாக வந்து சென்றவர் டிரம்ஸ் சிவமணி என்றும் கொசுறு தகவல் சொன்னார்...
 
எல்லாம் முடித்து வெளியில் வந்து நின்றபோது அருகிலேயே இன்னொரு கடை இதே பெயரில்...அந்த கடைக்கு வெளியில் நின்ற ஒருவர்...இது தான் ஒரிஜினல் கடை...அது டுப்ளிகேட் என்று சொல்ல  ஒரு டவுட்டில் சர்வரிடம் கேட்க...இருவரும் அண்ணன் தம்பிகள் தான்...இருவரும் பிரிந்து விட்டனர் என்று ஒரு கிளைக்கதையை சொல்ல ஆரம்பிக்க ....விடு....ஜூட்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

7 comments:

  1. சேலத்தில் மங்கள விலாஸ் ஹோட்டலும் நன்றாக இருக்கும்.
    அதன் ஓனர் நம்ம ஜாதி.
    ரொம்ப ஜொள்ளு. ஹி...ஹி...
    [பர்ஸனலா தெரியும்.]

    ReplyDelete
  2. பார்த்தாலே சாப்பிடணும் போலத் தோணுதே....

    ReplyDelete
  3. உலக சினிமா ரசிகன் சொன்ன மாதிரி சேலத்தில் மங்கள விலாஸ் ஓட்டல் அருமையானது. அது போல புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சாமிநாத புரத்தில் ஒரு ஓட்டல் உள்ளது. பாவா கடை என்று பெயர். சுடசுட மெதுவான கல் தோசை. ஜிஞ்சர் சிக்கன் குழம்பு, பெப்பர் குழம்பு, மட்டன் குழம்பு, கோழி கெட்டிக் குழம்பு, நாட்டுக் கோழி வறுவல், புறா, காடை பிரை என எல்லா ஐட்டமும் சூப்பராக இருக்கும். ஞாயற்றுக் கிழமை மட்டும் பிரியாணி போடுவார்கள். ஒரு சிறிய சைஸ் கப்பில் கொஞ்சமாக இருக்கும். திகட்டாமல் ரொம்ப ஹோம்லியாக இருக்கும். பதிவும் படங்களும் பிரமாதம்.

    ReplyDelete
  4. padakalai parthavudaney pasi killuthu.. rate adikam thaan.. irunthalum atha side poonal try panni parpoom..( alukas pakkamnu vera solli vithega..)

    ReplyDelete
  5. எல்லாம் ஓகே.பில்தான் கொஞ்சம் இடிக்கிறது.

    ReplyDelete
  6. மாப்பு.. இதையெல்லாம் விட்டுட்டு செல்வி மெஸ்ஸுக்கு கூட்டிட்டு போனியே? எதாவது உள்குத்து இருக்குதா?

    ReplyDelete
  7. ஆஹா.... இப்பவே சாப்பிடனும் போல இருக்குதே !!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....