Tuesday, January 15, 2013

புத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு


பு(து)த்தக அறிமுகம்:1
நம்ம கோவையை சேர்ந்த பெண் கவிஞர் அகிலா அவர்களால் எழுதப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு...
இவரின் கவிதையை படிக்கும் போது ஒரு வித இனம் புரியாத தாக்கம் ஏற்படுகிறது.வலி மிகுந்த உணர்ச்சியினை தாங்கி வெளி வந்து இருக்கும் இவரது கவிதைகள் நமக்கு புது வித அனுபவமே...
எனக்கு 82 உனக்கு 76 என்கிற தலைப்பில் இவர் படைத்து இருக்கிற வார்த்தைகளின் வீரியம் இன்னும் நெஞ்சுக்குள் நிழலாடுகிறது. இணைபிரியாத தம்பதிகளின் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்.....
நான் மரித்து நீ உலகில்...
நீ மரித்து நான் உலகில்
யோசித்துப்பார்க்கிறேன்..
இரண்டில் எது சரியென்று...
இரண்டுமே சரியில்லை
இருவரும் மரித்து
நம் உலகில்
நாம் எப்போதும் போல்
ஒன்றாகவே....
என்னை கண்கலங்க வைத்த கவிதை...இந்த தொகுப்பிற்கு ஒரு மணி மகுடமாய் இந்த கவிதை ஒன்றே போதும்...
புத்தகத்தின் விலை - ரூ 70
இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல...ஒரு சிறந்த ஓவியரும் கூட...இவரின் படைப்புக்கள் இவரை உயர்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை...

பு(து)த்தக அறிமுகம்:2
இவரும் நம்ம கோவையை சேர்ந்தவரே..இவரின் வார்த்தை பிரயோகத்தினை  எழுத்தில் பார்த்தால் இவர் ஒரு பெண் கவிஞர் என்பதே தெரியாது.முதிர்ச்சியடைந்த வார்த்தைகளின் தெரிவுகள் புதிதாக இருக்கிறது.
பெண் கவிஞர் என்றால் காதல் ரசம்  சொட்டும் என்று நினைத்திருக்கிறேன்.இந்த தொகுப்பில் மெளனத்தின் இரைச்சலாக காதலை கொஞ்சம் ஊறுகாயாக தொட்டு விட்டு சமூகத்தின் அவலங்களை சாடி இருக்கிறார்.
சாதி எனப்படும் உயிர்க்கொல்லியை சாடி இருக்கிறார் கனமான வார்த்தைகளால்..
பட்டம் என்கிற தலைப்பில் பெண்கள் இன்னும் சிறைக்கைதிகள்தான் என்பதை உணர்த்தியிருக்கிறார்..
சுதந்திரம் என்பது இன்னும் பெறவில்லை....சாதி மதம் இனம் என்ற அடிமை சங்கிலியை அறுக்காமல் அது இல்லவே இல்லை என்பதை சொல்லியிருக்கிறார்..
புத்தகத்தின் விலை - ரூ 70 
இவர் ஒரு கல்லூரியில் பணிபுரிகிறார்.முனைவர் பட்டம் மேற்கொண்டும் வருகிறார்.இவரின் அடுத்த கவிதை தொகுப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த இரண்டு கவிதை தொகுப்புக்களும் சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கிடைக்கும்.
கோவையில் கிடைக்குமிடம்:
155, முதல் தளம், ஹரி பவன் அருகில், 4வது வீதி, காந்திபுரம், கோவை,  தொடர்புக்கு 98944 01474

கிசுகிசு : நானும் தான் புத்தகம் போட்டு இருக்கேன்...நானே எனக்கு விமர்சனம் பண்ணினா நல்லாவே இருக்காது.அதனால....யாராவது ...?
( அதுக்கு அமெளண்ட் தனியா வந்திடும்..) ஹி ஹி ஹி ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 

8 comments:

 1. நல்ல விமர்சனம். அடுத்த முறை தமிழகம் வரும்போது தான் வாங்கமுடியும்....

  ReplyDelete
 2. நண்பா... கவிஞர் என்றால் அது ஆண், பெண் அனைவருக்கும் பொதுவானது. ஆகவே பெண் கவிஞர் என்ற சொல்லைத் தவிர்த்துடுங்க இரண்டு ஏற்றமிகு கவிஞர்களின் சிறப்பான வரிகளைச் சுட்டி அருமையான விமர்சனம் தந்திருக்கீங்க. நன்று.

  ReplyDelete
 3. கோவை நேரம் புக்கு பார்ஸல்

  ---வருண் ப்ரகாஷ்

  ReplyDelete
 4. மிக நன்றாக இரு கவிஞர்களையும் அறிமுகப்படுத்தி விமர்சித்து இருக்கிறீர்கள்...

  உங்களின் புத்தகத்திற்கு விமர்சனமே வேண்டாம். பூக்கடைக்கு வழி சொல்லத் தேவையில்லை என்பார்கள். அதன் வாசமே வழி சொல்லுமாம்.
  நன்றி .
  த.ம. 3

  ReplyDelete
 5. கவிஞர்களை அறிமுகபடுத்திய நண்பருக்கும் ,கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நண்பா

  ReplyDelete
 6. நல்ல முக்கியமான பதிவு.

  இதையும் நேரம் இருந்தால் படியுங்கள்
  http://charuleaks.blogspot.com/2013/01/blog-post_15.html

  ReplyDelete
 7. கவிதை புத்தகங்களின் விமர்சனம் மிக அருமை. நீங்கள் குறிப்பிட்டுள்ள அகிலா அவர்களின் கவிதை மனதை தொட்டது.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள். நண்பா

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....